சிரிப்பு - 1
Thu Jan 03, 2013 10:51 pm
First topic message reminder :
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
நன்றி: முகநூல்

Re: சிரிப்பு - 1
Fri Apr 12, 2013 6:56 am
ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்..
கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரையும் இல்லை..''அடுப்பங்கரையிலிருந்து சத்தமிட்டார்..
''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்..
''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்..
இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..அந்த விருந்தாளி..
அவர் வெளியேறிவிட்டதும் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்..
''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே...''என்றான் கணவன்..
''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்றாள் மனைவி..
''பிராமாதம்..'' என்றான் கணவன்..
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது..
''நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்..'' அந்த விருந்தாளிதான்..
கதையின் நீதி...நடிப்பு என்றுமே உதவாது...

மாடு போல சின்னதா இருக்கும்,
ஆனா அது மாடு இல்ல....
அது என்ன?
.
.
தெரியலையா ?
..
.
.
.
.
.
.
.
.
.
அது கண்ணுக்குட்டிங்க !
ஆனா அது மாடு இல்ல....
அது என்ன?
.
.
தெரியலையா ?
..
.
.
.
.
.
.
.
.
.
அது கண்ணுக்குட்டிங்க !
Re: சிரிப்பு - 1
Fri Apr 12, 2013 7:00 am
டாப் 10 இம்சைகள் (இதெல்லாம் நமக்குன்னு வந்து வான்ட்டடா மாட்டுதா இல்ல எல்லோருக்கும் இருக்கா?)
1. ரொம்ப நாள் கழிச்சு கொஞ்சமா நல்ல லெக் பீஸ், தொடைபீஸ் கறியை
எடுத்திட்டு வந்து குழம்பு வச்சு இன்னைக்கு ஒரு கை பார்த்திடனும்னு
நினைச்சு குழம்பு முதல் கொதி வருவதற்க்குள் எங்கிருந்துதான் வருவாங்கன்னு
தெரியல வி(வெ)ருந்தாளிகள் அதுவும் சொல்லாம கொல்லாமா.................
2, இங்க வீட்ல நடக்கிற கலவரம் தெரியாம ஃபோன் போட்டு, ஹலோ நான் யார் பேசுறேன் கண்டிபிடியுங்கன்னு சொல்ற ஆர்வக்கோளாறுகள்...
3. நல்ல டிஸ்கவுன்ட்ல ஒரு புடவையை எடுத்து, கிஃப்ட்டா கொடுக்கனும் அதனால
பிரைஸ் லேபிளை எடுத்திடுங்கன்னு சொல்லி அதன் ஒரிஜினல் விலையை கொடுத்து
வாங்கினேன்ன்னு மனைவிகிட்ட சொல்லிகிட்டிருக்கும்போதே, வின்டோ ஷாப்பிங்
ஸ்பெஸலிஸ்ட் பக்கத்து வீட்டு ஆன்ட்டீஸ் - ஏய் இது போன வருஷமே 70% தள்ளூபடி
போட்டிருந்ததை உன் கணவன் வாங்கி உன் தலையில தள்ளீட்டானான்னு டைம்பாம்
சரவெடியை சத்தமில்லாமல் கொளுத்துவது,,,,,,,,,,,,,
4. ஏற்கனவே நம்ம
லைன் மெதுவா நகரும் போது தான் முன்னால இருக்கிற ஏதோ ஒரு கழிசடை - லா
பாயின்ட் லபுக்குதாஸ் மாதிரி கவுன்ட்ட்ரக்குள்ள இருக்குற ஆளுகிட்ட உரன்டையை
இழுத்துவிட்டு போன பிறகு, அதன் ஆஃப்ட்டர் எஃப்க்கட் நம்மகிட்ட காட்டுவான்
பாருங்க அந்த ஆளு...............
5. தனியா போய் ஒரு காஃபி
அல்லது ஹோட்டலில் உட்கார்ந்திட்டு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னும் ரென்டு
பேர் வரனும்னு சொன்ன உடனே நம்மளை பரம்பரை பிச்சைக்காரன் மாதிரி பார்க்கும்
சர்வருக்கு? ஆனா பிரன்ட்ஸ் வந்தவுடனே ஒகே வா வேற எடத்தில சாப்பிட போலாம்னு
கிளம்பி நாமும் அவன் அனுமானத்தை பொய்யாக்குவதில்லை.............
6. நல்ல பசியோடு ஹோட்டலுக்கு போனா பெரிய மெனு கார்டை கொடுத்து அப்புறம்
அதுல நல்லதா ஆர்டர் பண்ணீனா - சார் சார் தீர்ந்துபோச்சு, இது முடிஞ்சு
போச்சுன்னு சொல்லி சொல்லி - யப்ப நீயே சொல்லுயா என்னத்தான் இருக்குன்னு
கேட்டா தோசை அயிட்டம் மட்டும் தான் கிடைக்கும்னு சொல்ற சனியனுங்களே பின்ன
ஏன்டா பெரிய மெனு கார்டு கொடுத்து ரீடீங் டெஸ்ட் வைக்குறீங்க.............
7. மால்ல பார்க்கிங் பண்ணிட்டு, தியேட்டர் படம், ஷாப்பிங், தீனின்னு
முடிச்சிட்டு கரெக்டாய் பார்க்கிங் கவுன்டர்கிட்ட வண்டியை கொண்டு சென்று
பணம் கட்டும் நேரம் தான் பார்க்கிங் டோக்கனை தேடுவோம் எல்லாம் கிடைக்கும்
இதைத்தவிர பின்னாடி ஹார்ன் அடிப்பான் என்னமோ பல வருஷம் வெயிட் பன்ற
மாதிரி...............
8. ஏதோ விஷேஷ நாள்ல் கோயில்ல போய்
அபிஷேகத்துக்கு கொடுத்திட்டு சாமி கும்பிடலாம்னு போன அங்க பிரன்ட்ல
ஒருக்கிற தம்மாத்தூன்டு இடத்துல இங்க உட்காருங்கன்னு நம்மளை ஆண்டி ஆசனப்பன்
போல உடகார வச்சிட்டு அபிஷேகம் முடிஞ்ச உடனே அங்க இருக்கிற ஒரு பெரிய
காய்ஞ்சு போன மாலையை கழுத்தில போட்டு தட்சனை காணிக்கை பத்து ரூவா தாளை
மாற்றி 50/100 போடும்படி மாத்தும் டெக்னிக்கை எந்த யுனிவர்ஸிட்டில
படிச்சாங்களோப்பா இவங்க,,,,,,,,,,,,,,
9. இரண்டு பேர்
மட்டும் பிஸியான நேரத்தில சாப்பிட போனா அங்கே இருக்கிற ஸ்டூல் சைஸ் டேபிள்ள
உட்கார வச்சு கடைசி வரைக்கும் ஏதோ ஒரு அயிட்டத்தை கையில இடம் இல்லாததால
பிடிச்சிகிட்டே சாப்பிடும் கொடுமை.........டேய் நாங்க லவ்வர்ஸ் இல்லைடா
குட்ம்ப இஸ்த்தீரீஸ்டா....................
10. காப்பி ஷாப் பொது இடங்கள்ல நமக்கு கல்யானம் ஆயிடுச்சின்னு கான்டுல,
அங்க அரசல் புரசலா இருக்கிற ஜோடியை பார்த்து விவஸ்தை கெட்ட ஜென்ங்கன்னு
திட்டும்போது மனசாட்சி கிலோ என்ன விலை ரகம் தான்......
எத்தனை பேர் விக்டிமாய் ஆயிருக்கீங்க இதுல???

Fri Apr 12, 2013 2:06 pm
ஒருவர் :- எது நடந்தாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் அதில்.
மற்றவர் :- பட்டென்று அவரின் முகத்தில் ஓங்கி குத்தி ....இதுவும் ஒரு காரணமாத்தான் நடந்தது என்றார் !
{எப்படிஎல்லாம் யோசிக்கிறாங்கிய....? ஒரு தத்துவம் சொன்னதுக்காடா...
இப்படி குத்தினே ? எதுக்கும் நாம கொஞ்சம் உஷாராவே இருக்கணும்....ஆமா }

Sat Apr 13, 2013 3:50 am
ஆபரேஷன் தியேட்டரில்.....நர்ஸ்:- ஆப்பரேசன் தியேட்டர்ல டெலிபோன் வைக்கவேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர் ?
டாக்டர்:-ஏன் இப்ப அதுக்கு என்ன ஆச்சு ?
நர்ஸ்:-இப்ப அதுவும் "டெட் "ஆயிடுச்சு !
டாக்டர்:-ஏன் இப்ப அதுக்கு என்ன ஆச்சு ?
நர்ஸ்:-இப்ப அதுவும் "டெட் "ஆயிடுச்சு !
Re: சிரிப்பு - 1
Sat Apr 13, 2013 3:52 am
ஒருவர் தன நண்பரிடம் :-என் மனைவி என்னை லூஸூ,முட்டாள்,கிறுக்குன்னு
அடிக்கடி திட்டுறா..உங்க மனைவி எப்படி..?”
நண்பர் :- உங்களைப் பத்தி அவளுக்கு அவ்வளவா தெரியாதுங்க !
அடிக்கடி திட்டுறா..உங்க மனைவி எப்படி..?”
நண்பர் :- உங்களைப் பத்தி அவளுக்கு அவ்வளவா தெரியாதுங்க !
Re: சிரிப்பு - 1
Sat Apr 13, 2013 5:47 pm
கணித ஆசிரியை மாணவர்களிடம்:-8 ஆப்பிள் பழங்களை எப்படி சமமாக 6 பேர்களுக்கு பகிர்ந்து கொடுப்பீர்கள் ?
எல்லோருமே சற்று யோசிக்க .....
கடைசி பெஞ்ச் மாணவர்கள் கோரசாக சொன்னார்கள் வெரி சிம்பிள் மேடம் .
ஆசிரியை :- எப்படீன்னு சொல்லுங்க ?
கடைசி பெஞ்ச் மாணவர்கள்:- ஜூஸ் பண்ணி சம அளவா 6 குடுத்துடலாமே ?
Last Bench, Always Rokzzzz..... :)

Sat Apr 13, 2013 6:02 pm
விலங்குக் காட்சிச் சாலையில் புலியொன்று ஒரு மனிதனைக் கொன்றுவிட்டது.
புலியிடம் சென்று குரங்கு...
ஏன் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றாய் ? என்று கேட்டது.
அதற்குப் புலி சொன்னது...
3 மணி நேரம் என்னைப் பார்த்துவிட்டு அந்த மனிதன் சொன்னான்.....
“எவ்வளவு பெரிய பூனை“ என்று …
அதனால் தான் எனக்குக் கோபம் வந்துவிட்டது.

Wed Apr 17, 2013 1:15 am
நான் ஏன் பரிட்சையில் முட்டை வாங்கினேன்?
1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....
3. கேள்வி: ரவி ஆறு எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: திரவம்
4. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.
5. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?
6. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.
7. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.
8. கேள்வி: ஒரு கையால் யானையை எப்படி தூக்க முடியும்?
பதில்: ஒரு கை தான் என யானைக்கு தெரியாதே.
9. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு
கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.
10. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி
முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க
எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.
11. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.
12. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்.
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 1:34 am
1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.
2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட
சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை
கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.
3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.
4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..
5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..
6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?
7.என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்
8..நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
9.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.
10.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.
11.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு
12.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே

Wed Apr 17, 2013 1:47 am
ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.
கணவன்: என்ன பிரச்சனை சார்?
போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..
கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.
மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...
(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)
போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..
கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...
மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..
(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)
போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..
கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.
மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...
கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..
போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?
மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..
போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?
மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!
போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?
மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!
போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?
மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!
கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?
மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 2:10 am
கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம்..
பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”
அப்பா ஒருகணம் யோசித்தார்.
“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.
“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.
மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.
“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”
போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’
“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.
“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே
நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன்
பண்ணுங்க…”
போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.
“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.

மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.
“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத்
திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ…
அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா
போனை…!”
மகன் அப்பாவிடம் சொன்னான்.
“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”
“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.
“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.

Wed Apr 17, 2013 2:25 am
ஜார்ஜ்
புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும்,
‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன்
எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.
“உன் பெயர் என்ன?”
“டேவிட்”
“கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’
“3 கேள்விகள் கேட்கப்போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது
ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள்
ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?”
அப்போது
இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று
புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார்.
“கேள்விகள் கேட்கலாம்” என்றார்.
வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.
“ராபர்ட்”
“உன் கேள்விகள் என்ன?”
“5 கேள்விகள் கேட்கப் போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது
ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள்
ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20
நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட
டேவிட் இப்போது எங்கே?”
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 2:25 am
ஒரு பெண் தனிமையை போக்குவதற்காக துணைக்கு ஒரு கிளியை வாங்கினாள்.
ஒரு வாரமாகியது, கிளி பேசவே இல்லை.
கவலையுற்று திரும்பவும் கடைக்கு சென்று ஒரு கண்ணாடி வாங்கி வந்து கூண்டில் வைத்தாள். அபோழுதும் அந்த கிளி பேசவில்லை.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் அந்த கடைக்கு சென்று ஒரு சிறிய ஏணி வாங்கி கொண்டு வந்து வைத்தாள். அப்பொழுதும் அந்த கிளி பேசவில்லை.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் கடைக்கு சென்று ஒரு சிறிய ஊஞ்சல் வங்கி
வந்து கிளி கூண்டில் கட்டி விட்டாள். அப்பொழுதும் அந்த கிளி வாயை திறக்கவே
இல்லை.
ஒரு வாரம் கழித்து அந்த கிளி கூண்டில் சாகும் தருவாயில்
கிடப்பதை அந்த பெண் பார்த்தாள். தனது இறுதி மூச்சை இழுத்து பிடித்து கொண்டு
கிளி பேசியது..
"இவ்வளவு வாங்கினியே, அந்த கடையில எனக்கு சாப்பிடறதுக்கு எதுவும் கிடைக்கலியா? "
கிளி உயிரை விட்டது

Wed Apr 17, 2013 12:04 pm
- பேஸ்புக், ட்விட்டர்ல இருக்கிறவங்க எல்லாம் எப்படி "ரைட்டர்"னு போடலாம்? "டைப்பர்"னுதானே போடணும்?
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 12:05 pm
- ஐந்தில் வளையாதது ஐம்பதிலே வளையுமா? - வளையும், ஐம்பதுக்கு அப்புறம்தான் கூன்போட்டு வளையும்!
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 12:05 pm
- கல்வி அமைச்சர் கல்வியை கவனிப்பார், போக்குவரத்து அமைச்சர்
போக்குவரத்தை கவனிப்பார், முக்கிய அமைச்சர் முக்குரவங்க எல்லோரையும் கவனிப்பாரா?
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 12:07 pm
இந்தியாவில
தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி
உயிரோடு இருப்பதில்லை.
தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி
உயிரோடு இருப்பதில்லை.
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 12:08 pm
பேஷன்ட்: டாக்டர் ஆபரேசனுக்கு அப்புறம் நான் குணமாகி போயிருவனா?
டாக்டர் : நீ கண்டிப்பா போயிருவ!
வழுக்கை என்று யாரையும் கிண்டல் பண்ண வேண்டாம்! அதன் எதிரொளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் காலமும் வரலாம்!!
டாக்டர் : நீ கண்டிப்பா போயிருவ!
வழுக்கை என்று யாரையும் கிண்டல் பண்ண வேண்டாம்! அதன் எதிரொளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் காலமும் வரலாம்!!
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 12:09 pm
- உன்னோட
மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா? நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்!!
- என்னதான்
நாற்காலிக்கு நாலுகால் இருந்தாலும் அதால் ஓடமுடியுமா? அப்படியே ஓடினாலும் அதை ஓடுகாலின்னுதான்
சொல்ல முடியுமா?
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 12:10 pm
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா
டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே
அனுப்புறாரு!!
சாப்பிட்டு முடித்ததும் சர்வர், "சார் எல்லாத்தையும் எடுத்திறவா??"
"எடுத்துக்குங்க! அப்படியே இந்த பில்லையும் எடுத்திட்டு போய்டுங்க!!!"

Wed Apr 17, 2013 7:52 pm
என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 7:57 pm
மனைவி (பதட்டத்துடன் ) :என்னங்க ஊருக்குள்ள சுனாமி வந்துருச்சாம் .., சீக்கிரமா வாங்க ஊர விட்டே ஓடிறலாம்.....
கணவன் : அப்படியா..! அப்ப கொஞ்சம் இரு , அத பத்தி facebook ல , என் இலக்கிய தெரமய காட்டி ஒரு status போஸ்ட் பண்ணிட்டு வந்துடறேன்.
-ஜெய வேல்-
கணவன் : அப்படியா..! அப்ப கொஞ்சம் இரு , அத பத்தி facebook ல , என் இலக்கிய தெரமய காட்டி ஒரு status போஸ்ட் பண்ணிட்டு வந்துடறேன்.
-ஜெய வேல்-
Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 7:59 pm
வேக்கம் க்ளீனர் விற்கும் சேல்ஸ்மேன் ஒரு வீட்டின் கதவை தட்டினான்.
ஒரு பெண்மணி வந்து கதவை திறந்ததும், உங்கள் கையில் உள்ள சாணம் முழுவதையும்
தரையில் கொட்டிவிடுங்கள், என்று அந்த பெண்மணியிடம் சொன்னான் சேல்ஸ்மேன்.
சேலஸ்மேன்: 'மேடம்! இன்னும் 3 நிமிஷத்தில நான் எங்களது புதிய தயாரிப்பான
சக்திமிக்க வேக்கம் க்ளீரைக் கொண்டு, இந்த சாணம் முழுவதையும்
சுத்தப்படுத்திர்ரேன். அப்படி முடியலனா, இந்த சாணம் முழுவதையும் நானே தின்று முடிக்கிறேன்' என்றான்.
பெண்மணி: 'அப்படியா! தொட்டுக்க ஊறுகாய் தரவா?
சேல்ஸ்மேன்: ஏன்?
பெண்மணி: வீட்ல கரெண்ட் இல்லப்பா,.
நீதி: தமிழ்நாட்ல யாரும் தம் அதி புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்கு
முன்னால மின்சாரம் இருக்குதான்னு உறுதிபடுத்திக் கொள்வது சிறந்தது.

Thu Apr 18, 2013 7:10 pm
ஒரு கல்லூரி வாட்ச்மேனிடம், பெற்றோர்கள்:- இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே?
வாட்ச்மேன்:- அப்படித்தான் நினைக்கிறேன். ஏன்னா.... இங்குதான் நான்
இன்ஜினியரிங் டிகிரி முடித்தேன்.. உடனடியாக எனக்கு வேலை கிடைத்துவிட்டதே ?
பெற்றோர்கள்: ? ? ?

Thu Apr 18, 2013 7:11 pm
டாக்டர்:- உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா நீங்க மீனும்
கோழியும் சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி :- எப்படி டாக்டர் ,அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்????
கோழியும் சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி :- எப்படி டாக்டர் ,அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்????
Re: சிரிப்பு - 1
Thu Apr 18, 2013 7:12 pm
ஆசரியர்:-உங்க சன் இங்க்லிஷ்ல ரொம்ப வீக்கா இருக்கான் சார் .
தந்தை:- அதுசரி.... தமிழ் எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார் ?
ஆசிரியர் :- thangalin மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கான் !
தந்தை:- ? ? ?
தந்தை:- அதுசரி.... தமிழ் எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார் ?
ஆசிரியர் :- thangalin மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கான் !
தந்தை:- ? ? ?
Re: சிரிப்பு - 1
Fri Apr 19, 2013 7:28 am
ஒரு சந்தேகம்.....எறும்பை "கட்" பண்ணினா என்னாகும்....?
சொல்லுங்க ? தெரியலியா.....?
>
>
>
>
>
அட இது கூட தெரியாம............எறும்பு+ கட் = "கட்டெறும்பு "ங்க !
சொல்லுங்க ? தெரியலியா.....?
>
>
>
>
>
அட இது கூட தெரியாம............எறும்பு+ கட் = "கட்டெறும்பு "ங்க !
Re: சிரிப்பு - 1
Fri Apr 19, 2013 7:29 am
ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருவர் கூட்டத்தில் தொலைந்த மனைவியை தேடுகின்றனர் .....
முதலாமவர்:-உங்க மனைவி எப்படி இருப்பாங்க என்னகலர் டிரஸ் உடுத்தி இருப்பாங்க ?
இரண்டாமவர்:- நல்ல செகப்பா,...அளவான ஒல்லியா, நீல நிற சாரி உடுத்தி இருப்பாங்க ......உங்க மனைவி எப்படி இருப்பாங்க?
முதலாமவர்:- அவளை எதுக்கு தேடிக்கிட்டு....? வாங்க உங்க மனைவிய தேடுவோம் !
இரண்டாமவர்:- ? ? ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum