தத்தெடுப்பது எப்படி?
Sat Jul 14, 2018 8:13 pm
தத்தெடுப்பது எப்படி?
==================
தத்தெடுக்கும் நடைமுறை பற்றி சட்ட ஆலோசகர், என்.பி.பிரசன்னா விளக்குகிறார்
யார் தத்தெடுத்துக்கொள்ள முடியும்?
-------------------------------------------------------
இந்திய சட்டப்படி, எந்தவொரு ஆணோ அல்லது பெண்ணோ, ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடியும். அந்த ஆண் அல்லது பெண் திருமணம் ஆகி இருந்தாலும் சரி, திருமணம் ஆகாதவர்களாக இருந்தாலும் சரி, தத்தெடுக்க எந்தத் தடையும் இல்லை (முன்பு திருமணமாகி சேர்ந்து வாழும் தம்பதிகள் மாத்திரமே தத்தெடுத்துக்கொள்ள முடியும் என்றிருந்தது. இப்போது அந்த நிலை இல்லை).
யாரைத் தத்தெடுக்க முடியும்?
-------------------------------------------
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஊனமுற்ற குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை.
குழந்தைகளை எங்கிருந்து/யாரிடமிருந்து பெறுவது?
--------------------------------------------------------------
தத்தெடுத்துக்கொள்ளும் குழந்தைகளை Adoption Agency என்ற சில அமைப்புகளின் மூலம் பெற முடியும். அந்த அமைப்புகளுக்கு இரண்டு வகையில் குழந்தைகள் வந்து சேர்கின்றன. ஒன்று: ஏழ்மை காரணமாகவோ அல்லது ஏற்கெனவே நிறைய பிள்ளைகள் இருக்கும் காரணத்தாலோ, இந்தக் குழந்தையை யாருக்காவது தத்துக் கொடுத்து விடுங்கள் என்று தத்துக் கொடுக்கும் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் குழந்தைகள் (Surrendered Child). மற்றவை: தொட்டில் குழந்தைத் திட்டம் அல்லது வேறு வகையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள குழந்தைகள் (Abandoned Child). இந்த இரண்டு வகைகளில் பெறப்பட்ட குழந்தைகளை போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தகுந்த சட்ட செயல்முறைகளை மேற்கொண்ட பின்பு, தத்துக் கொடுக்கும் அமைப்புகளிடம் ஒப்படைப்பார்கள்.
அந்த அமைப்புகளிடமிருந்து எப்படித் தத்தெடுத்துக் கொள்வது?
------------------------------------------------------
அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு குழந்தையை தத்துக் கொடுக்கும் மையத்தில் (Adoption Agency) நாம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின் அந்த மையத்திலிருந்து கவுன்சலிங்கிற்கு நம்மை அழைப்பார்கள்.
எந்தக் காரணத்துக்காக அந்த ஆண் அல்லது பெண் அல்லது தம்பதி தத்தெடுக்க விரும்புகின்றனர், தத்தெடுக்கப்படும் குழந்தை எவ்வாறு பராமரிக்கப்படும் என்று கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். குடும்பத்தின் பொருளாதார நிதி நிலை அல்லது சம்பளம் இவற்றுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மனநிலை சரியில்லாதவர்கள், குறைந்த சம்பளம் அல்லது குறைந்த பொருளாதார நிலையில் இருப்பவர்கள், ஹெச்.ஐ.வி., புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள், கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தத்தெடுக்க முடியாது. தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் தத்தெடுக்கும் நபருக்கும் குறைந்தபட்சம் 21 வருடங்கள் வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.
இதுதவிர தத்தெடுக்க விரும்பும் நபரின் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து ரெஃபரன்ஸ் லெட்டர்கள் (Reference Letters) கேட்பார்கள். இவை எல்லாம் சரியாக இருந்தால் தத்தெடுக்கத் தகுதியான நபரிடம் குழந்தையைத் தற்காலிகப் பராமரிப்பு (Foster Care) என்ற அடிப்படையில் கொடுப்பார்கள். அப்படி ஒப்படைக்கப்பட்ட குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தவர்கள் எப்படி வளர்க்கிறார்கள் என்று 6 மாதங்கள் கண்காணிக்கப்பார்கள். அதில் அந்த அமைப்புக்கு திருப்தி ஏற்பட்டால், உடனடியாக அந்த அமைப்பு நிரந்தரத் தத்துக்கு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அதற்கான நடைமுறைகள் என்ன?
-------------------------------------------------
நீதிமன்றத்தில் குழந்தையை தத்துக் கொடுக்க விரும்புவதாக அந்த அமைப்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்யும். குழந்தை மற்றும் தத்தெடுக்கும் பெற்றோர் அல்லது நபர் குறித்த எல்லா தகவல்கள் மற்றும் ஆவணங்களை அது அந்த மனுவோடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது, இந்தியக் குழந்தை நல கவுன்சில் (Indian Council for Child Welfare) அல்லது இந்திய சமூக நல கவுன்சில் (Indian Council for Social Welfare) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கவுன்சிலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும். அந்த நோட்டீஸை மேற்கோள் காட்டி கவுன்சில் இந்தத் தம்பதி அல்லது நபரின் தகவல்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும். எல்லா விஷயங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பு கவுன்சில், நீதி மன்றத்துக்கு ஒரு நீண்ட அறிக்கையை அனுப்பும். அந்த நீண்ட அறிக்கை ஏற்புடையதாக இருப்பதாக நீதிமன்றம் கருதினால் தம்பதி அல்லது நபரை அந்தக் குழந்தையின் அதிகாரப்பூர்வ பெற்றோராக அறிவித்து அது ஆணை பிறப்பிக்கும்.
அதையடுத்து, இந்தக் குழந்தை சட்டரீதியாக தத்துக் கொடுக்கப்பட்டது என்கிற ரீதியில் தத்துக் கொடுக்கும் அமைப்பு ஒரு தத்துப் பத்திரம் (Adoption Deed) ஒன்றைத் தயார் செய்யும். இதைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தையும், நீதிமன்ற ஆணையையும் நகராட்சி/மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பெறலாம். பிறப்புச் சான்றிதழைப் பெற்ற பின்பு தாசில்தார் அலுவலகத்தில் அதை சமர்ப்பித்து பெற்றோர் அல்லது நபர், தான் சார்ந்துள்ள சமுதாயத்தைப் பொறுத்து சாதிச் சான்றிதழ் (Community Certificate) பெறலாம்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியுமா?
-----------------------------------------------------
முடியும். இந்தியா முழுவதற்கும் குழந்தை தத்தெடுத்தல் குறித்த செயல்பாடுகள் அனைத்துமே தேசிய அளவில் காரா (CARA – Central Adoption Resource Authority) என்ற மத்திய அரசாங்கத்தால் நடத்தப்பெறும் அமைப்பின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் முதலில் காரா அமைப்பில் விண்ணப்பிக்க வேண்டும். அடுத்து அந்த நாட்டில் உள்ள தத்துக் கொடுக்கும் ஒருங்கிணைப்பு அமைப்பு மூலமாக காரா அமைப்பிடம் தத்தெடுக்க முடியும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum