எந்நிலையிலும் மனநிறைவோடு
Sat Jul 07, 2018 11:19 am
ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிலிப்பு என்பவர். ஒருமுறை இவரது சட்டைப்பையிலிருந்த பணத்தை எவரோ திருடிவிட்டார். நண்பர்கள் இந்த இழப்பைக் குறித்து இவரிடம் துக்கம் விசாரித்தனர்.
அப்பொழுது பிலிப்பு, "நான் திருடவில்லை; நான் திருடப்பட்டேன். அதற்காக முதலாவது ஆண்டவரைத் துதிக்கிறேன்.
இரண்டாவது, அவன் கண்ணியமான திருடன். ஏனெனில், என்னை அடித்து உதைக்காமல் எனக்கே தெரியாமல் திருடிவிட்டான்.
மூன்றாவதாக, அவன் என் சட்டைப்பைபிலிருந்த பணத்தைத் தான் எடுத்தான். என் வீட்டில் இருந்த பணத்தையோ என் வங்கிக் கணக்கிலோ அவன் திருடவில்லை. ஆண்டவருக்கு நன்றி', என்றார்.
பிலிப்பின் இந்தக் கண்ணோட்டம் நமக்கு ஒரு பாடம்.
இழந்ததை எண்ணிக் கவலைப்படாமல் இருப்பதை வைத்துக் துணிவுடனும் இறைநம்பிக்கையுடனும் செயல்படுவோம்.
"எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக்கொண்டேன். எனக்கு வறுமையிலும் வாழத்தெரியும். வளமையிலும் வாழத்தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ, குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப்பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றலுண்டு''. பவுலடிகளார் -பிலிப்.4:12,13.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum