புதிய தத்துவங்கள்
Sat Jun 14, 2014 9:06 am
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.

Re: புதிய தத்துவங்கள்
Sat Jun 14, 2014 9:44 am
" ஆறு நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறார்களே.....
சரி ..சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்குது....??? "
என்ற நண்பரின் கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்தேன்...!
# நமக்குப் பயப்படுகிற விலங்குகளையும் ..ஏன்...மக்களையும் கூட , மட்டமாக குறிப்பிடுவது நம் கூடப் பிறந்த குணம்....
அவ்வளவுதான்..!!!

Sun Jun 15, 2014 8:52 am
1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை
தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.
2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.
3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று
புலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டு போனால்
எல்லா சீசனுக்கும் விற்கும்....

Thu Jun 26, 2014 8:54 am
முடிவு *
'நான் எடுத்தால் அந்த முடிவு சரியாகத்தான் இருக்கும்' என்று நினைத்தீர்களானால், நிச்சயம் அது சரியான முடிவு இல்லை!
* இலக்கு *
எங்கே நிற்கிறீர்கள் என்பதை விட, எங்கே போகிறீர்கள் என்பது முக்கியம்.
* சந்தோஷத் திருடர்கள்! *
நேற்றைப் பற்றிய வருத்தம், நாளை பற்றிய கவலை - இரண்டும் நம் சந்தோஷத்தைப் பறிக்கும் திருடர்கள்.
* நமக்குள்ளே... *
நமக்கு என்ன நடக்கிறது என்பது முக்கியம் அல்ல; நமக்குள் என்ன நடக்கிறது என்பதே முக்கியம்.
* பெரிய தோல்வி *
எதையாவது செய்தால் தோல்வி வருகிறதே என்று தயங்காதீர்கள். எதையுமே செய்யாமல் இருப்பதுதான் மகா தோல்வி!
* உங்களுக்குத் தெரியுமா? *
சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். காரணம், தாங்கள் திறமைசாலிகள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
* சரி... சரி... சரித்திரம்! *
வரலாறு என்பது, வெற்றியாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பொய்களின் தொகுப்பே!
*புத்திமதிப்பு!*
நல்ல புத்திமதிகள் அதிகம் வைத்திருப்பவர் பெரும்பாலும் யாருக்கும் அவற்றை வழங்குவது இல்லை.
* ஆமாம்! *
வசீகரம் - தெளிவில்லாத கேள்விக்கும் 'ஆமாம்' என்று பதில் வாங்கிவிடும்!
* நெருப்பு! *
முள்ளை முள்ளால் எடுக்கலாம்; ஆனால், நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது!

Thu Jun 26, 2014 10:09 pm
கணவனுக்கு ஃபேஸ்புக்!
மனைவிக்கு சீரியல்!
குழந்தைக்கு வீடியோ கேம்!
நீதி:அவரவர் வேலையை அவரவரே பார்க்க வேண்டும்.
மனைவிக்கு சீரியல்!
குழந்தைக்கு வீடியோ கேம்!
நீதி:அவரவர் வேலையை அவரவரே பார்க்க வேண்டும்.
Re: புதிய தத்துவங்கள்
Wed Jul 02, 2014 8:07 pm
பசித்திரு...
தனித்திரு...
விழித்திரு...
இப்படி மூன்றுமாக இருந்தால்
மூன்றின் முதலெழுத்தும் ஆன "பதவி"
நிச்சயம்...
நன்றி: சுபா
தனித்திரு...
விழித்திரு...
இப்படி மூன்றுமாக இருந்தால்
மூன்றின் முதலெழுத்தும் ஆன "பதவி"
நிச்சயம்...
நன்றி: சுபா
Re: புதிய தத்துவங்கள்
Thu Jul 03, 2014 2:25 am
பறவைகள் கூண்டுகளில் இருந்து தப்பிக்க நினைப்பதும்,மீன்கள் மீன் தொட்டியில் இருந்து துள்ளி குதிப்பதும்,அடுத்தவர் உழைப்பில் வாழப் பிடிக்காததால் தான்.
Re: புதிய தத்துவங்கள்
Wed Jul 16, 2014 12:02 pm
தம்பி! பெரியவங்க பேசும் போது குறுக்க பேசாதேன்னு,ஒருத்தர் சொன்னார்னா,அந்த பய! அவரால் பதில் சொல்ல தெரியாத ஏதோ ஒரு நியாயமான கேள்வியை கேட்டிருக்கான்னு அர்த்தம்.
Re: புதிய தத்துவங்கள்
Wed Jul 16, 2014 12:03 pm
எதிர் பார்ப்பதை விட,
எதிர் கொள்வதை கற்றுக்கொள்ளுங்
கள் ...
இங்கு,
எதிர் பார்க்கும்
வாழ்க்கை கிடைப்பது இல்லை..!
எதிர் கொள்ளும்
வாழ்க்கையே கிடைகிறது...
எதிர் கொள்வதை கற்றுக்கொள்ளுங்
கள் ...
இங்கு,
எதிர் பார்க்கும்
வாழ்க்கை கிடைப்பது இல்லை..!
எதிர் கொள்ளும்
வாழ்க்கையே கிடைகிறது...
Re: புதிய தத்துவங்கள்
Thu Jul 17, 2014 9:49 pm
இன்றைய பகுத்தறிவு கேள்வி ......
திருமணத்திற்கு மட்டும் சாதியை சொல்லி பெண்ணோ,
மாப்பிள்ளையோ பார்க்கும் சாதி பிரியர்கள்,
தங்களது வீட்டில் யாருக்காவது சிகிச்சைக்கு இரத்தம் தேவைப் பட்டால் அதே சாதியைச் சொல்லி இரத்தம்
தேடுவார்களா?
திருமணத்திற்கு மட்டும் சாதியை சொல்லி பெண்ணோ,
மாப்பிள்ளையோ பார்க்கும் சாதி பிரியர்கள்,
தங்களது வீட்டில் யாருக்காவது சிகிச்சைக்கு இரத்தம் தேவைப் பட்டால் அதே சாதியைச் சொல்லி இரத்தம்
தேடுவார்களா?
Re: புதிய தத்துவங்கள்
Wed Oct 01, 2014 11:56 pm
ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்:
1. மௌனம்:
நமக்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
2. புன்னகை:
அதையும் மீறி பிரச்சனைகள் வந்து விட்டால் புன்னகையால் வென்று விடலாம் ...
1. மௌனம்:
நமக்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
2. புன்னகை:
அதையும் மீறி பிரச்சனைகள் வந்து விட்டால் புன்னகையால் வென்று விடலாம் ...
Re: புதிய தத்துவங்கள்
Thu Oct 02, 2014 12:01 am
யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா...?
1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன் - மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்.
1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன் - மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்.
Re: புதிய தத்துவங்கள்
Thu Oct 02, 2014 12:17 am
எல்லாவற்றையும் மக்கச் செய்து அழித்து விடும் மண்...
விதையை மட்டும் உயிர்ப்பிக்கச் செய்வது தான் இயற்கையின் மிகப் பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum