புதிய தத்துவங்கள்
Sat Jun 14, 2014 9:06 am
First topic message reminder :
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.

Re: புதிய தத்துவங்கள்
Tue Mar 03, 2015 9:01 am
சாலையை கடக்கும்முன் இருபக்கமும் பார்ப்பது போல குப்பையை எறியும்முன் நான்கு பக்கமும் பாருங்கள்.. நிச்சயம் ஒரு குப்பை தொட்டியாவது இருக்கும்
ட்வீட்டர்
ட்வீட்டர்
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 07, 2015 12:24 am
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்...
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 07, 2015 12:30 am
ஊரோடு ஒத்து வாழ் .... இது மனிதனுக்கு ....
சுவரோடு ஒத்து வாழ் .... இது பல்லிக்கு
சுவரோடு ஒத்து வாழ் .... இது பல்லிக்கு
Re: புதிய தத்துவங்கள்
Thu Mar 12, 2015 2:23 am
எந்தச்சூழ்நிலையிலும் அழாதவரை கல் நெஞ்சக்காரர்கள் என்று கூறிவிட முடியாது; அவர்கள் கண்ணீர் தீர்ந்தவர்களாகவும் இருக்கலாம்
Re: புதிய தத்துவங்கள்
Thu Mar 12, 2015 2:24 am
பணக்காரனுக்குத் தனிக்கவனம் கொடுக்கும் சொந்தக்காரனை வெறுப்பவன்... கட்டண தரிசனம் தரும் கடவுளை வெறுப்பதில்லை...முரண்.
Re: புதிய தத்துவங்கள்
Thu Mar 12, 2015 8:48 am
வறுமைக்கு ஏழையைப் பிடித்திருக்கிறது..
திமிருக்கு பணக்காரனைப் பிடித்திருக்கிறது
திமிருக்கு பணக்காரனைப் பிடித்திருக்கிறது
Re: புதிய தத்துவங்கள்
Fri Mar 13, 2015 8:10 pm
நிலத்தால் சோறு போடுபவன் ஏழையாகிறான்..
நிலத்தை கூறு போடுபவன் பணக்காரனாகிறான்..
நிலத்தை கூறு போடுபவன் பணக்காரனாகிறான்..
Re: புதிய தத்துவங்கள்
Fri Mar 13, 2015 8:10 pm
நீ என்னை நன்கு ஏமாற்றுகின்றாய் என தெரிந்தும் இறைவனிடம் வேண்டுகிறேன்...!
நீ வேறு எங்கும் ஏமாந்து விட கூடாது என்று...!
நீ வேறு எங்கும் ஏமாந்து விட கூடாது என்று...!
Re: புதிய தத்துவங்கள்
Fri Mar 13, 2015 10:59 pm
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum