புதிய தத்துவங்கள்
Sat Jun 14, 2014 9:06 am
First topic message reminder :
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.

Re: புதிய தத்துவங்கள்
Wed Oct 01, 2014 11:56 pm
ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்:
1. மௌனம்:
நமக்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
2. புன்னகை:
அதையும் மீறி பிரச்சனைகள் வந்து விட்டால் புன்னகையால் வென்று விடலாம் ...
1. மௌனம்:
நமக்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
2. புன்னகை:
அதையும் மீறி பிரச்சனைகள் வந்து விட்டால் புன்னகையால் வென்று விடலாம் ...
Re: புதிய தத்துவங்கள்
Thu Oct 02, 2014 12:01 am
யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா...?
1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன் - மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்.
1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன் - மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்.
Re: புதிய தத்துவங்கள்
Thu Oct 02, 2014 12:17 am
எல்லாவற்றையும் மக்கச் செய்து அழித்து விடும் மண்...
விதையை மட்டும் உயிர்ப்பிக்கச் செய்வது தான் இயற்கையின் மிகப் பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று.
Re: புதிய தத்துவங்கள்
Mon Oct 27, 2014 6:57 pm
#இரக்கம் காட்டுபவன் : இளிச்சவாயன்
#அக்கறை காட்டுபவன் : அதிகபிரசங்கி
#மரியாதை தருபவன் : முட்டாள்.
#உதவிசெய்பவன் : பிழைக்க தெரியாதவன்
#குரல் கொடுப்பவன் : வேலை வெட்டி இல்லாதவன்.
என்று அர்த்தங்கள் மாறிவிட்டன,
சுய நலம் மிக்க இந்த சமுதாயத்தில்

Tue Nov 18, 2014 7:40 am
புதுப் பழமொழிகள்
1. எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்...
2. ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால்
தன் செல்லுக்கு தானே வரும்..
.
3. ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்...
4. ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்...
5. கார் ஓட டயரும் தேயும்...
6. சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு...
7. சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை...
8. தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்...
9. தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்...
10. பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல...
11. மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்...
12. முடியுள்ள போதே சீவிக்கொள்...
13. மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி...
தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி...
14. ஹெல்மெட் இல்லாதவன் பின்னே...
எமன் வருவான் முன்னே...

Tue Nov 18, 2014 7:33 pm
ariyalursam wrote:உலகம் அறிந்துகொள்ள வேண்டிய அற்புதமான தத்துவங்கள்.
Re: புதிய தத்துவங்கள்
Wed Nov 26, 2014 11:21 pm
விந்தையான சிந்தனைகள்...
1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”
2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.
4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.
5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
9) வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!
11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்

Thu Jan 08, 2015 2:56 am
பத்து ரூபாயைக் காட்டி இருபது ரூபாய் என்றால் சண்டைக்கு வருவாய், கல்லைக் காட்டி கடவுள் என்றால் கை கூப்பி வணங்குவாய் ...
-பாசு.ஓவியச் செல்வன்
-பாசு.ஓவியச் செல்வன்
Re: புதிய தத்துவங்கள்
Thu Jan 08, 2015 2:57 am
ஒருவரிடம் ஒரே மாதிரியான இரண்டு குதிரைகளை காண்பித்து
இதில் தாய் குதிரையும் குட்டி குதிரையும் கண்டு பிடிக்க சொன்னார்கள்
அவர் சொன்னார்
எந்த குதிரை தனக்காக வைக்கபட்ட புல்லை மற்ற குதிரையின் பக்கம் தன காலால் தள்ளி விடுகிறதோ அதுவே தாய் குதிரை என்று ..
மிருகங்களிடம் கூட காணப்படுவதே தாய் பாசம்
முதியோர் இல்லங்களுக்கு பெற்றோரை அனுப்பும் பிள்ளைகளே சிந்திப்பீர் ..

Mon Feb 09, 2015 10:53 pm
வளைந்திருப்பதால்
வில்லும்
நிமிர்ந்திருப்பதால்
அம்பும்
செயலாற்ற முடிகிறது!
வில்லும்
நிமிர்ந்திருப்பதால்
அம்பும்
செயலாற்ற முடிகிறது!
Re: புதிய தத்துவங்கள்
Mon Feb 09, 2015 10:56 pm
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க .
உங்கள்ளின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க
உங்கள்ளின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க
Re: புதிய தத்துவங்கள்
Mon Feb 09, 2015 11:01 pm
நாள் ஒன்றுக்கு இரு முறை 7½யை சந்திக்கும் கடிகாரம் நல்லாதான் ஒடிக்கிட்டு இருக்கும்..
வாழ்கைல ஒரு முறை 7½ யை சந்திக்குற நம்ம தான் நாசமா போயிகிட்டு இருக்கோம்
வாழ்கைல ஒரு முறை 7½ யை சந்திக்குற நம்ம தான் நாசமா போயிகிட்டு இருக்கோம்
Re: புதிய தத்துவங்கள்
Tue Feb 10, 2015 8:32 am
அடுத்தவன் வாழ்வு அழகாய் இருப்பதாய் நமக்கு தோன்றும் ..... ஆனால் ....
அதி்ல் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று அது அவனுக்கு மட்டுமே தெரியும் .
அதி்ல் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று அது அவனுக்கு மட்டுமே தெரியும் .
Re: புதிய தத்துவங்கள்
Tue Feb 10, 2015 8:33 am
சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum