தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சிரிப்பு - 1 - Page 9 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty சிரிப்பு - 1

on Thu Jan 03, 2013 10:51 pm
First topic message reminder :

ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?

ஆமாம் சொல்லுங்க.

என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...

அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.

இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...

அவன் பேசும் போது காசு போகுமா சார்...?

நன்றி: முகநூல்

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Mon Jul 08, 2013 3:07 pm
டேய் Raju,
"I don't Know"அப்படின்னா என்னடா?"

"எனக்குத் தெரியாது"

"என்னடா யாரக்கேட்டாலும்­ தெரியாதுன்னு சொல்றீங்க...

அதென்னஅவ்வளவு கஷ்டமான வார்த்தையா?"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Mon Jul 08, 2013 10:23 pm
ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

"ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை"

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,

"அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?"

# காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை ;-)
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Thu Jul 11, 2013 2:38 pm
கப்பலே மூழ்கினாலும் கன்னத்துலே கை வைக்க கூடாது

ஏன்?

கன்னத்துல கை வச்சா நீச்சல் அடிக்க முடியாதே...!


- கேத்ரின்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Thu Jul 11, 2013 2:43 pm
கணவன்: (பேப்பரை படித்தபடி) "ஒரு நாளைக்கு ஆண்கள் 15,000 வார்த்தைகளையும் பெண்கள் 30,000 வார்த்தைகளையும் பேசுகிறார்கள் என்று ஒரு ஆய்வுக்குறிப்பு தெரிவிக்கிறது."

மனைவி: "அது உண்மைதான். ஏன்னா, உங்களுக்கு நாங்க ஒவ்வொரு விஷயத்தையும் ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது."

கணவன்: "என்ன ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது?"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Thu Jul 11, 2013 2:48 pm
நம்ம நாராயணசாமி ஒருவர் நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்…

அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார்.
-
ஆனால் அவரால் படிக்க முடியவில்லை… எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்…
-
போர்டில் எழுதி இருந்தது.....“இங்கு முதலை உள்ளது…யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Thu Jul 11, 2013 2:52 pm
ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.

அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர்
என்னிடம் வந்து கேட்டார்,

"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா,
பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"

கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய
நான்,

"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும்
ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க,
பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க."
அப்படின்னுதான் சொன்னேன்.

அதுக்குள்ள அந்த பக்கி சொல்லுது,

"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட
வந்தவர்தானா நீங்களும். .."
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Sun Jul 14, 2013 5:59 pm
தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது;
நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்... நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம். 

வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்
( யாருகிட்ட...)
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Sun Jul 14, 2013 6:01 pm
ஒரு தடவ ஒரு கிழட்டு நாய் காட்டுல ஒரு முயல துரத்திகிட்டு ரொம்ப தூரம் போயி வழி தெரியாம திணறும்போது ஒரு சிறுத்தை தன்னை நோக்கி வேகமா வர்றத பார்த்துட்டு - சர்தான் இன்னிக்கு நாம அதும் கையில சிக்குனா சின்னாபின்னமாக வேண்டியது தான்னு நெனச்சு ஒரு ப்ளான் பண்ணிச்சாம்.
சிறுத்தை வர்ற வழியில கெடந்த எலும்புகள எடுத்து வச்சுகிட்டு “ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பர் டிஃபன் இந்த சிறுத்தை..ஹும்ம்ம் லஞ்சுக
்கும் இப்படி ஒரு சிறுத்தை சிக்கினா மவனே கைமா தான்னு” அதும் காதுல விழுற மாதிரி சொல்லிச்சாம்.
இதை கேட்ட அந்த சிறுத்தை குட்டி, தப்பிச்சோம் பிழைச்சோம்னு வந்த வழியே ஓடிடுச்சாம். இத்தையெல்லாம் பார்த்துகிட்டிருந்த அணில் ஒண்ணு - அடடா நாம் இந்த சான்ஸ மிஸ் பண்ணக் கூடாது .....சிறுத்தை கிட்ட போட்டு குடுத்து நாம ஒரு டீல் போட்டுக்கலாம்னு நெனச்சு நடந்ததையெல்லாம் போய் சொல்லி பத்த வச்சுதாம்.
அவமானம் தாங்காத சிறுத்தை நாய ஒரு வழி பண்ணலாம்னு பயங்கர கோவத்தோட வந்துதாம்.
முதுகுல அணிலோட வர்ற சிறுத்தைய பார்த்துட்ட நாய் “போச்சுடா இன்னிக்கு பரலோகம் தான்....இதுக்கு ஒரு ஐடியா பண்ணலாம்னு நெனச்சு சிறுத்தை வர்ற பக்கமா முதுக திருப்பி உக்காந்துகிட்டு “எங்கே போச்சு இந்த அணில்? சிறுத்தைய ஏமாத்தி தள்ளிகிட்டு வான்னு சொல்லி எவ்ளோ நேரமா வெயிட்டிங்குன்னு” சத்தமா தனக்கு தானே பேசறமாதிரி சீன் போட்டுச்சாம்.
இத கேட்ட சிறுத்த குட்டி அடடா மறுபடியும் ஏமாற திரிஞ்சோமேன்னு ஓடியே போச்சாம்.

கதை சொல்லும் நீதி - பெருசுங்ககிட்ட ரவுசு பண்ண நெனக்காதீக.....அவுக எச்சுபீரியன்ஸுக்கு முன்னால யூத்தெல்லாம் நிக்க முடியாது...
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Sun Jul 14, 2013 6:02 pm
 காதலன் : நான் உனக்காக முள் மேல் நடப்பேன், தீயில் குளிப்பேன்..!

காதலி : நிஜமாவா டார்லிங்? உங்களை பார்க்கணும் போல இருக்கு. இப்போ உடனே வர முடியுமா?

காதலன் : வெயில் கொளுத்துது, இப்போ போய் என்னை வரச் சொல்றியே! உனக்கு அறிவில்ல
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Mon Jul 15, 2013 3:30 am
அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??
* * * * *

MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?
MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா ...எம் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன் .... ஒரே டமாசுதான் போங்க...
* * * * *
தாத்தா......குளிர்காத்து பலமா இருக்கு.
காதுல பஞ்சு வச்சுக்க...!!
ஏண்டா வைக்கலே'ன்னா?
நாங்க உன் மூக்குல பஞ்ச வைக்க
வேண்டியது ஆகிடும்!
* * * * *
உனக்கு ஏது 50 ரூபாய்?''"
"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''"
பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''

* * * * *
அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
* * * * *

மொக்கை சிந்தனை
விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
* * * * *
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Tue Jul 16, 2013 11:22 pm
எம் ஜி ஆர் சாகறதுக்கு முன்னால எப்படி இருந்தார் தெரியுமா 
எப்படி இருந்தார் 
?
?
?
?
?
?
?
?
?
உயிரோடு இருந்தார் 
-கடி நாகு
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 2:54 am
டாக்டர்: நீங்க என்ன சோப் பயன்படுத்தறீங்க?
நோயாளி: கோபால் சோப், கோபால் பேஸ்ட், கோபால் ப்ரஷ்
டாக்டர்: கோபால் கம்பெனி ஒரு இண்டர்நேஷனல் கம்பெனியா?
நோயாளி: இல்ல டாக்டர் கோபால் என்னோட ரூம்மேட்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 3:14 am
ஒரு பெரிய மனிதரின் இறுதிச் சடங்கு...,

சவப்பெட்டி இறுதி யாத்திரைக்கு தயாராக இருக்க,

அங்கு வந்திருந்த மந்திரி தன் நண்பரின் நற்குணங்களைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்..

"மறைந்த நண்பர் கற்பில் ராமன்!
எவ்வித தீயப் பழக்கங்களும் அண்டாமல் நெருப்பாய் வாழ்ந்தவர்!
ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து உயிர் நீத்தவர்... "

இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து,

" ராஜா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு கொஞ்சம் பாரு..".
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 3:15 am
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி:: நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 3:16 am
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 3:40 am
இந்திரா காந்தி எப்போது பதவிக்கு வந்தார்?

தெரியாது!

இந்தியாவின் தேசிய பறவை எது?

தெரியாது!

பஞ்சாப் மாநிலத்தின் கவர்னர் யார்?

தெரியாது!

இந்தியாவின் தற்போதைய கிரிக்கெட் காப்டன் யார்?

தெரியாது!

எதுவுமே தெரியாதுன்னா எதுக்கப்பா இண்டர்வியூவுக்கு வந்தே?

நான் இந்த ரூமுக்குள்ளே இருக்கிற பாத்ரூம் குழாயை ரிப்பேர் பண்ண வந்தேன்! 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 3:41 am
கல்லூரி வரிசை...

1) பர்ஸ்ட் இயர்...

2) செகண்ட் இயர்...

3) தேர்ட் இயர்...

4) அரியர்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 3:47 am
ஒரு ஆள் ஒரு சாமியாரிடம் வந்து...

"ஸ்வாமி.. என் மனைவி எனக்கு விஷம் கொடுத்து கொல்ல நினைக்கிறாள்..! என்ன செய்வது..?"

"மகனே.. நான் அவளிடம் பேசிப் பார்க்கிறேன்.. நீ நாளை வா.."

மறுநாள்..

" மகனே... நான் உன் மனைவியிடம் பேசினேன்.. சுமார் 4 மணி நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.."

" என்ன சாமி அந்த முடிவு..?"

" இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதைக் காட்டிலும் நீ விஷம் குடித்து சாவதே மேல்...!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 3:48 am
"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்..
கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.."
"ஏன்..?"
.
.
.
.
.
"பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரைகிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."
என்ன உலகமடா இது..????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 3:49 am
ஒண்ணுமே புரியலை...
1.என்னதான் கூகுள் மிகப்பெரிய தேடுதல் தளமாக இருந்தாலும் கோவிலில் காணாமல் போன செருப்பை கண்டுபிடித்து தருமா?
2.தூக்க மாத்திரை போட்டா தூக்கம்வரும்.ஆனால் தலைவலி மாத்திரை போட்டா தலைவலி வருமா?
3.நாமாளா எடுத்தா அது மொட்டை அதுவா விழுந்தா அது சொட்டை..
4.என்னதான் பேச்சாளராக இருந்தாலும் கோமா 'ஸ்டேஜ்'ல அவரால பேச முடியுமா?
5.போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினா போலிஸ் வரும்.ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் பண்ணினா ரயில் வருமா?
6.பஸ் மீது நாம ஏறீனாலும் பஸ் நம்ம மீது ஏறீனாலும் டிக்கெட் வாங்கறது நாமதான்...
7.படித்த பெண்ணை வேலைக்கு சேர்க்க கூடாது.பெருக்க சொன்னா கால்குலேட்டரை தூக்கிட்டு வருது.
8.குற்றாலத்தில்எந்த நியூஸ் சொன்னாலும் நம்ப மாட்டாங்க..ஏன் தெரியுமா?அது எல்லாமே 'பால்ஸ் நியூஸ்
'
9.தண்ணீரை 'தண்ணி' சொல்லுவோம்.பன்னீரை 'பன்னி'னு சொல்லலாமா?..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Wed Jul 17, 2013 3:50 am
சோவியத்தை உளவு பார்க்க $20மில்லியன் செலவில் (சிஐஏ)அமெரிக்கா ஒரு பூனைக்கு பயிற்சியளித்தது... 

கடைசில அந்த பூனை டாக்சியில அடிப்பட்டு செத்துருச்சு...

# நம்ம ஊர் காரைங்களை விட தில்லாலங்கடியா இருப்பானுங்க போல... பூனைக்கு பேன் பார்த்த செலவு 5 லட்சம்...!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Thu Jul 18, 2013 7:18 am
"கொஞ்சமா பேசு...!
அதிகமா கேள்...!" அப்படின்னு
பெரியவங்க ஏன் சொன்னாங்க தெரியுமா..?
"in coming free.... out giong kaasu"....
அதனால தான்.....

 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Thu Jul 18, 2013 7:26 am
விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.

‘ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!’

ஒரு பயணி நின்றார்.

பாராசூட் என்ன விலை?

ரெண்டாயிரம் ரூபாய் ஸார் சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?

”பணம் வாபஸ் ஸார்”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Fri Jul 19, 2013 8:47 am
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.

முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னாங்க. சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாமுனு முதல் பையன எழுப்பி...........

"உன் பேர் சொல்லு.........."

"பழனி"

"உன் அப்பா பேரு.............."

"பழனியப்பா"

அடுத்தப் பையன எழுப்பி..........

"உன் பேர் சொல்லு.........."

"மாரி"

"உன் அப்பா பேரு.............."

"மாரியப்பா"

அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........

"உன் பேர் சொல்லு.........."

"பிச்சை"

"உன் அப்பா பேரு.............."

"பிச்சையப்பா"

இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு. சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப் பையன எழுப்பினாரு.

"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)

"ஜான்"

"இப்பொ உன் பேரைச் சொல்லு......."

"ஜான்சன்"

அப்புறம் என்ன அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.............
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Fri Jul 19, 2013 7:48 pm
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்:

அடி செருப்பால! ...

உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம

குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
..........................................................................................
பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - மவனே..அவன்தான் சிக்க மாட்றான்!

சிக்கினா செத்தான்டா இதோடு..!!
............................................................................................

இன்பத்திலும் சிரிங்க..!

துன்பத்திலும் சிரிங்க!

எல்லா நேரமும் சிரிங்க!

அப்பத்தான் நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.
............................................................................................

மாடு போல சின்னதா இருக்கும்!

ஆனா அது மாடு இல்ல! அது என்ன?


என்ன தெரியலையா?

சரி,

நானே சொல்றேன்

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
..............................................................................................
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!
....................................................................................................

அப்பா:

ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்:

எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.

அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
...............................................................................................

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட

கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட

ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன

கொடும சார் இது?....
..................................................................................................
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,

கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்

எல்லாம் வைக்க முடியாது...

சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
.....................................................................................................

உங்கட்ட பிடித்ததே இந்த 5 தான்!


1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்


4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
......................................................................................................
அப்பா:

நேத்து ராத்திரி பரிச்சைக்கு

படித்தேன்னு சொன்ன,

ஆனா,

உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்:

படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
...........................................................................................................


உடுமலை.சு.தண்டபாணி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Sat Jul 20, 2013 7:33 am
ஆசிரியர்: 
என்ன படம் வரைந்தாய்?
மாணவன்:
மாடு புல் மேய்வது போல்
வரைந்தேன் சார்!
ஆசிரியர்:
மாடு எங்கே காணவில்லையே! 
மாணவன்:
புல்லை தின்றதும் சென்று விட்டது சார்!
ஆசிரியர்:
ம்ம்ம்..அப்பொ புல் எங்கே?
மாணவன்:
அதான் மாடு தின்றுச்சே சார்!!
ஆசிரியர்:;->!!??ஆக ... எதுவுமே செய்யல...)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Tue Jul 23, 2013 8:30 am
தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு கம்ப்யூட்டர் வேலை தெரியும் சிபாரிசு செய்ய சொன்னாங்கன்னு இண்டர்வ்யூ அனுபுச்சு வச்சேன்...

அடுத்த நாள் அந்த ஆபீஸ் மேனேஜர் பேசினார், சார் கோவிச்சுகாதிங்க அந்த பொண்ணு சரிபட்டு வரதுன்னு சொல்லிட்டாரு"

சரி அந்த பொண்ண கூபிட்டு கேட்டேன் என்னமா நடந்துச்சுன்னு "சார் அவரு கம்ப்யூட்டர் ல கொஞ்சம் வேலை செஞ்சு காமிக்க சொன்னாரு ஆனா எனக்கு கம்ப்யூட்டர் ஆன் பண்ண தெரியாதுன்னு சொல்லுச்சு"

என்னம்மா இப்படி சொல்ற அப்புறம் எப்படி கோர்ஸ் முடிச்சேன் சொன்னன்னு கேட்டா, நான் படிச்ச சென்டர்ல நான் போறப்ப கம்ப்யூட்டர் ஆன் ஆகி தான் இருக்கும்..நான் போவேன், படிப்பேன், வந்துருவேன்" சொல்லுச்சு...

நான் "என் மூச்சிக்கு முன்னாடி விரல் நீட்டி இது உனக்கு தேவையான்னு கேட்டுகிட்டேன்" வேற வழி!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Tue Jul 23, 2013 8:31 am
உண்மைய சொன்னேன் 

1.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது..

2."ஓடு கொசுவே ஓடு"னு தான் விளம்பரம் வருது, "சாவு கொசுவே சாவு", ன்னு விளம்பரம் பண்ணல. கொசு செத்துட்டா வியாபாரம் போயிடுமே.

3.லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் இருக்கும் வித்தியாசம் அடுத்தவரிடம் இருந்து வாங்கினால் லஞ்சம்...!!
நீயே எடுத்துகிட்டா ஊழல்.!

4.வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!

5.ஏழைக்கு வயிற்றை நிரப்பவும் பணக்காரனுக்கு கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது -கஞ்சி.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Fri Aug 02, 2013 11:09 pm
இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.

”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Sun Aug 18, 2013 8:58 am
பிச்சைக்காரன்:அம்மா, தாயீ பிச்சை போடுங்கம்மா?

எஜமானி:இந்தா பிரியாணி நல்லா சாப்பிடு!

பிச்சைக்காரன்:சாப்பாடு போடவே தயங்குற இந்த காலத்துல பிரியாணியே போடுறீங்களே!உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யறதுனே தெரியலம்மா?

எஜமானி:அதெல்லாம் எதும் வேணாம் பேஸ்புக்ல எனக்கு டெய்லி லைக் ,கமெண்ட் போட்டா போதும்!

கணவன்Sadவீட்டுக்குள் இருந்து)எங்கடி டேபிள்ல நான் வாங்கிட்டு வந்து வச்சிருந்த பிரியாணி பொட்டலத்த காணோம்?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Sun Aug 18, 2013 9:02 am
ரெண்டு ரக்கைய வச்சுக்கிட்டு ஒரு காக்கா ஊரு பூரா பறக்குது

ஆனா மூணு ரக்கைய வச்சுக்கிட்டு இந்த சீலிங் பேன் (Ceiling Fan )ஆல ரூம விட்டு வெளில கூட பறக்க முடியல பாருங்க -

அதுதான் வாழ்க்கை ...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Sun Aug 18, 2013 9:09 am
சிரிப்பு - 1 - Page 9 999115_182547108593748_1323862360_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Sun Aug 18, 2013 9:09 am
சிரிப்பு - 1 - Page 9 1176306_182546848593774_1893152954_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

on Sun Aug 18, 2013 9:09 am
சிரிப்பு - 1 - Page 9 1170887_182546581927134_5155252_n
Sponsored content

சிரிப்பு - 1 - Page 9 Empty Re: சிரிப்பு - 1

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum