சிரிப்பு - 2
Thu Mar 07, 2013 9:18 pm
வாய் விட்டு சிரியுங்களேன்
நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!
"டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"
"ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."
-----------------------------------------------------------------------------------------------------------
"அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"

"மன்னர் புறமுதுகிட்டு ஓடிவரும்போது அவருக்குப் பின்னால் நிறைய பேர் ஓடி வருகிறார்களே... யார் அவர்கள்?"
"அது மன்னரின் புறமுதுகுக்குப் பாதுகாப்பு தரும், பிறர் முதுகிட்ட படையாம்!"

"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"
------------------------------------------------------------------------------------------------------------
"மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் ஐயாயிரம். வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."
"என்ன வேலை?" "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார்!"

"எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?"
"அவரோட போன படத்துல, டைரக்டறோட "டச்"சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்.... அதான்....!"

"தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்..."
"அடேங்கப்பா ... அப்படி என்ன பேசினாரு?" "பேசலைய்யா... குறட்டை விட்டாரு!"

"என்னய்யா இது... படத்தோட கதையை சிலேட்டுல எழுதிட்டு வந்திருக்கே..."
"அடுத்த படத்துக்காவது வித்தியாசமா கதை எழுதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!"
-------------------------------------------------------------------------------------------------------------
"பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க...?"
"குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்!"

"தினமும் கீரையே வாங்கிட்டுப் போறீங்களே... உங்க வீட்டுக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டாரா?"
"அவர் ஒரு வாயில்லாப் "பூச்சி"ங்க... அதான்!"
--------------------------------------------------------------------------------------------------------------
"டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
"ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"

"போலீஸா இருந்த நான் சாமியாரா ஆகியிருக்கக் கூடாது!"
"ஏன் சாமி?"
"எல்லாரும் போலீஸாமியார்"னு சொல்றாங்களே!"

"கோடை விடுமுறையைக் கொண்டாட கபாலிக்கிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சா... ஏன்?"
"ஜெயிலை சுத்திப் பார்க்கலாம்... வாங்கன்னு கூப்பிடறான்!"

"இவர் மெகா சீரியல் தயாரிப்பாளரான்னு சந்தேகமா இருக்கு..."
"ஏன் சார்..?"
"கதையை ரெண்டு வரியில சொல்லச் சொல்றாரே!"

"இளவரசர் தோற்றத்தில் மன்னர் போலவே உள்ளார்..."
"தோற்றத்திலா... அல்லது தோற்றதிலா"

"அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?"
"எப்போ கேட்டாலும், "தலைக்கு மேல வேலை இருக்கு"ன்னு சொல்றாரே!
நன்றி: கொங்குசுரியன்

Re: சிரிப்பு - 2
Thu Mar 07, 2013 9:19 pm
"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
**************
"என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..."
"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!"
***************
நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்..."
"அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க..
****************
படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.
ஏன் என்னாச்சு..?
அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.
*****************
"என்னது உங்க பேர் "நல்ல காலமா?"
"ஆமாம்....
எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு
சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க!"
*****************
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.
*****************
தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபீஸ்லியா வீட்டிலியா...?
*****************
ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்?
ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.
*****************
தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?
ஏன்?
டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.
**************
தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!
இருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு...!
**************
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !
***************
இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?
ஏனாம்?
தீப கர்ப்பமா இருக்கிறதுனால.
***************
உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?
அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.
*****************
தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
******************
எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!
************
மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?
டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.
மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?
டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!
**************
"ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
"இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"
***************
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
***************
முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
பின்னவர் : எப்படி?
முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
******************
வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!
ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...?
******************
நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."
"போகும் போது டாக்டர் ...?"
"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"
*****************
"என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி..."
"அவ்வளவு அழகா?."
"இல்ல. அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க."
நன்றி: கொங்குசுரியன் blogspot .com

Sun Aug 04, 2013 4:34 am
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
-
இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு
-கலாநிதி தீண்டா மெழுகுகள்
-
இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு
-கலாநிதி தீண்டா மெழுகுகள்
Re: சிரிப்பு - 2
Mon Aug 05, 2013 9:46 am
உத்தரகாண்டில் வெள்ளத்தில் ஒரு வாட்டர் பாக்கெட் 8 ரூபாய்க்கு விற்கப்பட்டதை விமர்சித்த வடஇந்திய ஊடகங்களே.
.
.
.
.
உள்ளூர் டாஸ்மாக்கிலே தமிழனுக்கு ஒரு வாட்டர் பாக்கெட் 8 ரூபாய் என்பது உங்களுக்கு தெரியுமா?
தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் எங்கே செல்வீர்கள்?இது தானா உங்கள் ஊடக தர்மம்..
- Boopathy

Mon Aug 05, 2013 9:48 am
ஹலோ சூரியன் FM
வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன் பேசுறேன்..!!
சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??
என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..
அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க.

Mon Aug 05, 2013 9:49 am
பில் கிளின்டனும் கிளாரியும் காரில் பெட்ரோல் போடுவதற்கு ஒரு பங்க்கில் சென்ற போது
அங்கு இருந்த ஒரு நபரை கிளாரி அடையாளம் கண்டு அவரை கிளின்டனுக்கு "இவர் ஹெண்றி.... என்னுடைய கல்லூரித்தோழர்" என்று அறிமுகம் செய்தார்
...... பின்பு திரும்பி வருகையில் கிளின்டன் சொன்னார்....இந்நேரம் நீ அவரை மணந்து இருந்தால் ஒரு பெட்ரோல் போடுபவரின் மனைவியாக இருந்து இருப்பாய்...என்று....
அதற்கு கிளாரி சொன்னார்...இல்லை இல்லை நான் அவரை மணந்து இருந்தால்
இந்நேரம் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகி இருப்பார்....
நீதி.... பொண்டாட்டி கிட்ட சும்ம வாயக் கொடுக்க கூடாது

Mon Aug 05, 2013 9:51 am
ஆசிரியை:ஒழுங்கா படிக்கலைன்னா நடுரோட்லதான்
நிக்கனும்...
மாணவன் :அப்ப ட்ராஃபிக் போலீஸ்
எல்லாம்
ஒழுங்கா படிக்கலையா டீச்சர்?
நிக்கனும்...
மாணவன் :அப்ப ட்ராஃபிக் போலீஸ்
எல்லாம்
ஒழுங்கா படிக்கலையா டீச்சர்?
Re: சிரிப்பு - 2
Tue Aug 06, 2013 8:08 am
Police: Where do you live?
Small Boy: with my parents.
Police: Where do your parents live?
Small Boy: With me.
Police: And where do you live all?
Small Boy: Together
Police: Where is Your Home?
Small Boy: Beside my neighbors' house.
Police: Where is your neighbors' house?
Small Boy: If I tell you, you won't believe me.
Police: Tell me?
Small Boy: Next to my house.
Police:

Thu Aug 08, 2013 8:30 pm
ஒரு பெண்:- கடவுளே என்
முகத்தை பார்க்க
எனக்கே சகிக்கவில்லையே ஏன்
இப்பிடி என்னை படைத்தாய் ???
கடவுள் :-
கவலைப்படாதே பக்தையே உன்னைப்ப
பெண்களுக்காக பூலோகத்தில்
மானிடன் ஒருவன் பேஸ்புக் என்ற
ஒன்றை உருவாகியுள்ளான் பேஸ்புக்
போ , நடிகை போட்டோவை போடு ,
அப்புறமா வந்து இதே டைலாக்
சொல்லு பார்க்கலாம் ???
ஆறுமாதம் கழித்து :-
கடவுள் :- என்ன
பக்தையே உன்னை கோயில்
பக்கமே காணல ???
அந்த பெண் :- சாரி கடவுளே .. நான்
பேஸ்புக்ல பிஸி நான் பேஸ்புக்
போகலைன்னா பல பசங்க
தற்கொலை பண்ணுற லெவலில
இருக்காங்க வாட் கான் ஐ டூ ??
கடவுள் :- ????!!!!!!
முகத்தை பார்க்க
எனக்கே சகிக்கவில்லையே ஏன்
இப்பிடி என்னை படைத்தாய் ???
கடவுள் :-
கவலைப்படாதே பக்தையே உன்னைப்ப
பெண்களுக்காக பூலோகத்தில்
மானிடன் ஒருவன் பேஸ்புக் என்ற
ஒன்றை உருவாகியுள்ளான் பேஸ்புக்
போ , நடிகை போட்டோவை போடு ,
அப்புறமா வந்து இதே டைலாக்
சொல்லு பார்க்கலாம் ???
ஆறுமாதம் கழித்து :-
கடவுள் :- என்ன
பக்தையே உன்னை கோயில்
பக்கமே காணல ???
அந்த பெண் :- சாரி கடவுளே .. நான்
பேஸ்புக்ல பிஸி நான் பேஸ்புக்
போகலைன்னா பல பசங்க
தற்கொலை பண்ணுற லெவலில
இருக்காங்க வாட் கான் ஐ டூ ??
கடவுள் :- ????!!!!!!
Re: சிரிப்பு - 2
Thu Aug 08, 2013 8:40 pm
டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.
மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.
டாக்டர்: ? ? ? ? ?
"யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து.. ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.."
"சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு."
"யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"
"என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்.."
"இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?"
"நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!"
காதலன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?
காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட். நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க, மாத்திக்குவோம்.
காதலன்: ? ? ? ? ?
"ஏன்யா வித்தவுட்லே போறே..... இதிலே ஏ.சி. கேக்குதா...?"
"எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் சார்!
Re: சிரிப்பு - 2
Wed Aug 14, 2013 8:07 am
1) தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...
மகன்: ஃபெயிலாயிட்டா..?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
2) ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?
மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
3) ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?
சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
4) நண்பர் 1: ""அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''
நண்பர் 2: ""எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
5) ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!
மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
6) ஆண்: என்னோட மனைவியைக் காணோம்..ஒரு அஞ்சு
நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?
பெண்: எதுக்கு?
ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
7) நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.
நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...
நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
Thanks: facebook

Wed Aug 14, 2013 8:08 am
ஒரு நாள் இரவு 12 மணி நான் உங்க வீட்டுக்கு கையில் காயத்தோட வாரேன். அப்போ உங்க வீட்டுல யாருமே இல்லை. நான் வரும்போது கரண்ட் கட்டாயிடுச்சு. அதனால நாம இரண்டு பேரும் மாடிக்கு போய் பேசிக்கிட்டு இருக்கம். அப்போ கீழே லேன்லைன் ரிங் பன்னுது. நீங்கள் மட்டும் கேண்டில் எடுத்துட்டுப் போய் போனை அட்டன் பண்றிங்க. போன்ல எங்க வீட்டுல இருந்து, நான் ஆக்சிடண்ட்ல இறந்துட்டேன் என்று சொல்ராங்க. # அப்போ நீங்கள் மறுபடியும் மேல வருவிங்களா மாட்டிங்களா??
.
.
.
.
.
.
.
.
வீட்டை விட்டே ஓடிவிடுவேன்
.
.
.
.
.
.
.
.
வீட்டை விட்டே ஓடிவிடுவேன்
Re: சிரிப்பு - 2
Wed Aug 14, 2013 8:09 am
'ஒருவர் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரவு மாடியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கு ஒரு மணி கட்டப்பட்டு இருந்தது.
'எதற்கு இந்த மணி?' என்று கேட்டார் நண்பர்.
'இது பேசும் மணி' என்றார் அவர்.
நண்பருக்கோ ஆச்சர்யம்! 'உண்மையாகவா?' என்று கேட்டார்.
'வேண்டுமானால் அடித்துப் பாருங்கள்' என்றார் அவர்.
நண்பரும் மணியை ஓங்கி அடித்தார். 'யாருடா அவன் 11 மணிக்கு மணியடிச்சு எழுப்புறது?' என்று பக்கத்து மாடியில் இருந்து குரல் வந்தது!'
~~~எதையுமே செய்றதுக்கு முன்னாடி யோசிக்கனும்ங்க..

Wed Aug 14, 2013 8:26 am
ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.
"இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னுதெரியலை''
ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக் குனிய வைத்து
முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை.
அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத் தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.
எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
"சார் நீங்க டாக்டருங்களா?''
"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா? ''

Thu Aug 15, 2013 4:44 am
மொக்கை கேள்வி
இவங்க ரெண்டு பேரில் யார் புத்திசாலி சொல்லுங்க பார்க்கலாம்
1 சதுரம்
2 வட்டம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
Answer : சதுரம் .... ஏன்ன சதுரத்தூக்கு நாலு மூளை. வட்டத்துக்கு மூளையே இல்ல ...

- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
Re: சிரிப்பு - 2
Thu Aug 15, 2013 9:56 pm
ha....ha....ha......செம காமெடி........
Permissions in this forum:
You cannot reply to topics in this forum