மரண கடிகள்
Thu Jan 10, 2013 11:26 am
First topic message reminder :
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”
நன்றி: முகநூல்

Re: மரண கடிகள்
Tue Mar 10, 2015 1:20 am
மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட
என்னால, உங்களோடு சேர்ந்து வாழ
முடியாது! அதனால நான்
தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
கணவன்:- அந்த நிமிஷமே நானும்
என் உயிரை விட்ருவேன்!
மனைவி:- நீங்க எதுக்காக
சாகணும்?
கணவன்:- எந்த ஒரு அதிக
சந்தோசமான செய்தியையும்
தாங்க கூடிய சக்தி என்
இதயத்திற்கு இல்லேண்ணு
டாக்டர் சொல்லி இருக்கார்!
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?
என்னால, உங்களோடு சேர்ந்து வாழ
முடியாது! அதனால நான்
தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
கணவன்:- அந்த நிமிஷமே நானும்
என் உயிரை விட்ருவேன்!
மனைவி:- நீங்க எதுக்காக
சாகணும்?
கணவன்:- எந்த ஒரு அதிக
சந்தோசமான செய்தியையும்
தாங்க கூடிய சக்தி என்
இதயத்திற்கு இல்லேண்ணு
டாக்டர் சொல்லி இருக்கார்!
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?
Re: மரண கடிகள்
Wed Mar 11, 2015 10:57 am
#மனைவி : என்னங்க,ஏன் அழுதுட்டு இருக்கீங்க? இன்னைக்கி நமக்கு பத்தாவது Wedding anniversary நாளுங்க.வாங்க கோவிலுக்கு போயிட்டு வருவோம்.
#கணவன் : உனக்கு ஞாபகம் இருக்கா,பத்து வருசத்துக்கு முன்னாடி நான் உன்ன கல்யாணம் பன்னிக்க மாட்டேன்னு உங்க அப்பாகிட்ட சொன்னனே.
#மனைவி : ம்ம் ஆமாங்க.இப்ப ஏன் பழச கிளருறீங்க.
#கணவன் : அது இல்லடி,அப்போ உங்க அப்பா எங்கிட்ட என்ன சொன்னாருனு ஞாபகம் இருக்கா?
#மனைவி : நீங்களே சொல்லுங்க.
#கணவன் : நான் உனக்கு தாலி கட்ட மாட்டேன்னு சொன்னதும்,உங்க அப்பா எங்கிட்ட "டேய்,மரியாதையா என் பொண்ணுக்கு தாலி கட்டுறியா,இல்ல ஜெயில்ல பத்து வருசம் கம்பி எண்ண போறியா"னு கேட்டாரு.
#மனைவி : இப்ப அதுக்கு என்ன?
#கணவன் : இதுவே நான் அன்னைக்கி ஜெயிலுக்கு போயிருந்தா இன்னைக்கி ரிலீஸ் ஆயிருப்பேன்ல.
#மனைவி : பூரி கட்டைய எங்க வச்சேன்னு தெரியலயே...

Thu Mar 12, 2015 2:15 am
Doctor: உங்களுக்கு 2 பல்லு எப்படி உடைஞ்சது?
கணவர்: என் மனைவி செய்த முறுக்கு சாப்பிட்டேன்...
Doctor: முறுக்கு வேண்டாமென சொல்லிருக்கலாமே?
கணவர்: அட நீங்க வேற டாக்டர் வேணாம்னு சொல்லிருந்தா, என் முப்பத்திரெண்டு பல்லும் போயிருக்கும்.

Sat Mar 14, 2015 5:13 am
பியூட்டிப் பார்லர்ல ஒண்ணரை மணி நேர டிரஸ்ஸிங்கு முடிச்சுட்டு வந்த மனைவி கணவனிடம்
" இப்ப என்னைப் பாத்தா என்ன வயசு மாதிரித் தெரியுது....?"
" தல முடி ...ஒரு 15....
முகம்... ஒரு 16....
உடல்வாகு ... ஒரு 18..."
ச்சீ ! போங்க நீங்க ரொம்பத் தான் புகழுறீங்க.... எனக்கு வெக்கமா இருக்கு"
" அவசரப் படாதே.... எல்லா பாகங்களோட வயசையும் இன்னும் கூட்டலியே... "
"அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும்?" ன்னு நீங்களே யூகிச்சுக்கோங்க

Sat Mar 14, 2015 11:28 am
ஒருவன் தனது மனைவியிடம் சொல்லும் வார்த்தைகளில் ஒரு உள்ளர்த்தம் நிச்சயமாக இருக்கும். சில உதாரணங்களைப் பார்க்கலாமா?
* இந்தப் புடைவை உனக்கு ரொம்ப அழகாயிருக்கு, ஹி!ஹி!
(கவனி… புடைவைதான் அழகாயிருக்கு.)
* கொஞ்ச நாள் பிறந்த வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு, டியர்!
(கொஞ்ச நாள் நான் ரெஸ்ட் எடுக்கிறேன்)
* நமக்குக் கல்யாணம் ஆகி 25 வருஷமாகியும் அன்னிக்கு இருந்த மாதிரியே இன்னிக்கும் இருக்கே.
(எந்த விஷயத்திலேயும் முன்னேற்றமே இல்லை!)
* உன்னைப் பார்த்தா 45 வயசுன்னு யாருமே நம்ப மாட்டாங்க.
( 60 வயசு இருக்கம்னு அடிச்சு சொல்லுவாங்க)
* நீ ஒரு பத்து நாள் ஊருக்குப் போறதா சொல்றியே. எனக்குச் சாப்பாடு விஷயத்துல பெரிய பிரச்சனையாயிடுமே!)
(நல்ல சாப்பாடு சாப்பிட்டுப் பழகியாச்சுன்னா மறுபடி உன் சாப்பாடு சாப்பிட முடியாதே!)
* உன்னால எப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை செய்ய முடியுது?
( உன்னால எப்படி என்னை ஓய்வு ஒழிச்சல் இல்லாம கண்காணிக்க முடியுது?)
(இது தெரியாம பக்கி - மகிழ்ச்சியடையாதே பக்கி)

Wed Mar 18, 2015 6:53 pm
எப்ப பாரு என் மனைவி
திட்டிக்கிட்டே இருக்காடா..
ஆமா உங்க வீட்ல உன் மனைவி
திட்டவே மாட்டாங்கலாடா..
யாரு சொன்னா எல்லா மனைவியும்
திட்டுவாங்கதான் ..
என் மனைவி திட்டும்போது ஒன்னே ஒன்னுதான்
சொல்லுவேன் சிரிச்சிகிட்டே
போயிடுவா..
அப்படியா என்னடா அது சொல்லு..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
SAME TO YOUUUU...
திட்டிக்கிட்டே இருக்காடா..
ஆமா உங்க வீட்ல உன் மனைவி
திட்டவே மாட்டாங்கலாடா..
யாரு சொன்னா எல்லா மனைவியும்
திட்டுவாங்கதான் ..
என் மனைவி திட்டும்போது ஒன்னே ஒன்னுதான்
சொல்லுவேன் சிரிச்சிகிட்டே
போயிடுவா..
அப்படியா என்னடா அது சொல்லு..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
SAME TO YOUUUU...
Re: மரண கடிகள்
Fri Mar 20, 2015 8:26 am
வீட்டுக்காரம்மா நம்மள டீவி பாக்க உடாம சீரியல் பாத்தா...
.
.
நம்ம செய்ய வேண்டியது சுட்டி டிவி,,, இல்லாட்டி போகோ..ல மாத்தி வெச்சிரனும் ...
.
.
மிச்ச பஞ்சாயத்த பசங்க பாத்துக்குவாங்க......
.
.
நம்ம செய்ய வேண்டியது சுட்டி டிவி,,, இல்லாட்டி போகோ..ல மாத்தி வெச்சிரனும் ...
.
.
மிச்ச பஞ்சாயத்த பசங்க பாத்துக்குவாங்க......
Re: மரண கடிகள்
Sat Mar 21, 2015 8:10 am
ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம்.
"..முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு."
.
அவன் அவனோட அப்பா கிட்டே போய், "..அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான்.?".. அப்படின்னு கேட்டான்.
.
அதுக்கு அவர் சொல்றாரு, "..நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க"..! அப்படின்னு பதில் சொல்றார்.
.
இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.
.
அதுக்கு அவங்க சொல்றாங்க,".. நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க"..! அப்படின்னு.
.
இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.
.
அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.
.
அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.
.
அப்பா உடனே சொல்றாரு, "..ரெண்டுமே கரெக்ட் தான்டா..!! நான் எங்க வம்சாவளியை சொன்னேன்...! உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா"..! அப்படின்னு.
.
பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.
.
அப்பாவை கேட்டான், "..என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா..!

Sun Mar 22, 2015 10:59 am
கணவன் : Sports channal வை..எனக்கு கிரிக்கெட் பார்க்கணும் .
மனைவி : முடியாது !!!
கணவன் : முடியாது ..(கோபத்துடன்) இரு பார்கிறேன்...!!!
மனைவி :என்ன பார்க்கறீங்க???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கணவன் :நீ என்ன channel பார்க்கிறாயோ..அதேயே நானும் பார்கறேன்னு சொன்னேன் !!!!!!

Fri Mar 27, 2015 1:53 pm
மனைவி : வீட்டு சுவரில் crack விழுந்துள்ளது. அதை பூச கொத்தனாரை அழைத்து வாங்க...
கணவன் : சரி அழைத்து வருகிறேன்,,
( பல முறை சொல்லியும் கணவன் மறந்து விடுகிறார். ஒரு நாள் மனைவியே பூசி விடுகிறார் )
பின்பு ஒருநாள்
கணவன் : என்ன crack காணலையே..? யார் பூசுனா..?
மனைவி : ஒரு வீட்டுல ரெண்டு crack இருக்க கூடாதாம்.. அதான் ரெண்டுல ஒன்ன நானே பூசிடேன்..
கணவன் : ???
.................................................................
"என்னோட கணவர் கல்யாணமான
புதுசுல என்னை 'தேவயானி,
தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்.
"இப்ப என்ன ஆச்சு?"
"தேவையா நீ,
தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."
.....................................................................
கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?
மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?
கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...
மனைவி: ????

Fri Mar 27, 2015 1:55 pm
Sundar: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.
Jayakumar: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?
Sundar: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.
Jayakumar: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.
Sundar: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!
Jayakumar: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.
Sundar: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
Jayakumar: எப்படிச் சொல்றீங்க?
Sundar: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.
Jayakumar: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.
Sundar: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!
Jayakumar: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

Fri Mar 27, 2015 7:22 pm
கணவன் - நான் இறந்திட்டால் நீ என்ன செய்வாய்.
மனைவி - நானும் உங்ககூடவே வந்திடுவன்.
கணவன்- ஜோசியக்காரன் சொன்னான் இறந்தாலும் 7 அரைச்சனியன் விடாது என்று.
மனைவி- ???
மனைவி - நானும் உங்ககூடவே வந்திடுவன்.
கணவன்- ஜோசியக்காரன் சொன்னான் இறந்தாலும் 7 அரைச்சனியன் விடாது என்று.
மனைவி- ???
Re: மரண கடிகள்
Wed Apr 08, 2015 7:26 am
பதுப்புது அர்த்தங்கள்.........
>>பாத்ரூமில் நின்று " என்னங்க " என்று அழைத்தால் பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம்
>>சாப்பிடும் ஹோட்டலில் " என்னங்க " என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம்.
>.வீட்டு வாசலில் நின்று யாருடனாவது
கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது
வீட்டின் உள்ளில் இருந்து " என்னங்க " என்று உச்சஸ்தாயியில் சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம்.
>>கல்யாண வீட்டு கூட்டத்தில் "என்னங்க " என்று சத்தம் வந்தால் எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார் அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம்
>>துணிக்கடையில் நின்று " என்னங்க " என்று அழைத்தால் அவள் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம்
>>வண்டியில் செல்லும் போது " என்னங்க " என்றால் பூக்கடை அவள் கண்ணில் பட்டதென்று அர்த்தம்.
>>மருத்துவமனை சென்று " என்னங்க " என்று அழைத்தால் டாக்டரிடம் என்ன பேசவேண்டும் என்று கேட்கிறாள் என்று அர்த்தம்.
>>வெளியே எட்டி பார்த்தவண்ணம் " என்னங்க " என்று அழைத்தால் யாரோ அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்.
>>பீரோவின் முன் நின்று " என்னங்க " என்று அழைத்தால் பர்ஸுக்கு வேட்டு வைக்கிறாள் என்று அர்த்தம்.
>>சாப்பாட்டை எடுத்து வைத்து " என்னங்க " என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால் இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் ........
>>இன்னும் உண்டு நிறைய பொருள்படும் "என்னங்க " எனும் சொல்..
#இந்த சீக்ரெட்டெல்லாம் வெளிய சொல்லக்கூடாதுங்க ஏன்னா புதுசா கல்யாணம் பண்ணிக்கப்போறவங்க பயந்துக்கு வாங்க pacman emoticon

Tue May 19, 2015 8:27 am
ஆறு வயது பையன் அவன். எதேச்சையா மூணு
வயது பெண் குழந்தையின் புகைப்படம் அவனுக்கு
கிடைச்சுது.
-
அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக
நேசிக்கத் தொடங்கிவிட்டான். ஆனா எவ்வளவு
தேடியும் அவ யாருன்னும் அவனால் தேடிக்
கண்டு பிடிக்க மட்டும் முடியவில்லை
-
இருபது வருடங்களுக்குப் பின்னால் அவனுடைய
மனைவி அலமாரியை ஒழுங்குபடுத்தி வைக்கும்
போது டைரிக்குள் அந்த 3 வயதுப் பெண் குழந்தை
புகைப்படம் கண்ணுல பட்டது.
-
இந்தப்போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சுது..?
-
ஏன் கேக்குற?
-
இது என்னோட போட்டோதான். ரொம்ப பிடிச்சது.
வீடு மாத்தும்போது எப்படியோ தொலைஞ்சு
போனது உங்ககிட்டே கிடைச்சு இருக்கு...'னு
சொல்லிட்டே அவன் தோளில் ஆசையா சாய
புருசன் மனசுக்குள ஒரு நீதி அசரீரியா ஒலிச்சதாம்.
-
அது,''ஒருத்தனுக்கு சனி பிடிக்கணும்னு இருந்தா
எத்தனை வருசம் ஆனாலும் விடாது...!''

Wed May 20, 2015 11:32 am
ஓர் அம்மா டாக்டரைத் தேடி வந்தாங்க.
''டாக்டர்... எங்க வீட்டுக்காரருக்கு திடீர்ன்னு அகோரப்பசி... ஏற்பட்டுப் போச்சு! நிறைய சமைச்சுப் போடறேன்... அவ்வளவையும் சாப்பிட்டுட்டு... கீழே கிடக்கிற குப்பைக் கூளங்களையும் எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சடறார்... என்னான்னு பாருங்களேன்... டாக்டர்!''
''சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்கு?'''
''ஒரு வாரமா இப்படி இருக்கு!''
''இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலேயே இங்கே அழைச்சிக்கிட்டு வர வேண்டியதுதானே...?''
''வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!''

Sat Jun 13, 2015 7:53 am
அந்தப் பெண்மணி கணவனிடமிருந்து விவாகரத்துக்
கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு
நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விசாரணைக் கூண்டில் நின்ற அப்பெண்ணிடம் குறுக்கு
விசாரணை செய்யும் பொழுது வக்கீல் கேட்டார்,
“உங்கள் பெயர் என்ன?”
அந்தப் பெண் “கமலம்” என்றாள்.
“ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்கிறீர்கள்?”
என கேட்டார் வக்கீல்,
அதற்கு அவள் “தூக்கத்தில் அவர் அடிக்கடி வேலைக்காரியின் பெயரைச் சொல்கிறார்” என்றாள்.
“அவள் பெயர் என்ன?” அடுத்த கேள்வியை கேட்டார் வக்கீல்.
“அவள் பெயரும் கமலம் தான்” எனப் பதிலளித்தாள்.
வக்கீலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள சீரியஸாக கேட்டார்,
“உங்கள் பெயரும் கமலம். வேலைக்காரி பெயரும் கமலம். அப்படியிருக்க உங்கள் கணவர் தூக்கத்தில் உங்கள் பெயரையே சொல்லியிருக்கலாமல்லவா?”
அந்தப் பெண் வேகமாக தலையாட்டி மறுத்து சொன்னாள்.
“நிச்சயமாக அந்த ஆள் என் பெயரைச் சொல்லியிருக்கமாட்டார்”
இப்போது நீதிபதி குறுக்கிட்டு கேட்டார்,
“ஏன் அப்படி உறுதியாக சொல்கிறாய்?”
நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் ஒருமுறை பார்த்து சத்தமாக சொன்னாள்,
“ஏனென்றால் என் பெயரைச் சொல்லும் அளவுக்கு அந்தாளுக்குத்
தைரியம் ஏது?”

Mon Mar 07, 2016 7:39 am
"அப்பா !! உன் கடைசி ஆசை என்னப்பா?"
ஏன் டா மகனே இப்படி கேக்கற!!?
"நீ தூங்கிட்டு இருக்கும்போது அம்மா உன் cellphoneஐ எடுத்துகிட்டு போய்டுச்சு..நீ password வேற lock- செய்யமறந்துட்ட..அதான் கேட்டேன்."

Mon Jun 13, 2016 7:49 am
இரயில் நிலையத்தைல் தன்னைஅழைக்க வந்திருக்கும் கணவனை பார்த்து மனைவி சொன்னாள்,
"ஏங்க இப்புடி கடுகடுன்னு முகத்தை வச்சிட்டு இருக்கீங்க? பக்கத்தில இருக்கவரை பாருங்க.. பொண்டாட்டியோட எவ்வளவு சந்தோஷமா இருக்காரு?"
அதற்கு புருஷன் சொன்னான்,
"வெவரம் கெட்டவளே .. அந்தாளு வழியனுப்ப வந்திருக்கான்டி .."

Wed Jul 06, 2016 1:19 am
திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்:
"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு முதல் மந்திரி உங்க மாமனார்தான். அவர்தான் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை எல்லாம் கவனிச்சுக்குவார்.
"இங்க நான்தான் துணை முதல்வர். உள்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.
"என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் தொழில் துறை, போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித்துறை எல்லாம் பாத்துக்குவான்.
"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறையையும், விளையாட்டுத் துறையையும் பாத்துக்குவா.
"நீ எதைப் பாத்துக்கறே சொல்லு? உனக்கு உணவுத்துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்; சரிதானா?"
சிரித்துக்கொண்டே மருமகள் சொன்னாள்: "ஐயோ அத்தை; பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு? நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க. நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Permissions in this forum:
You cannot reply to topics in this forum