சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed May 21, 2014 12:07 pm
First topic message reminder :
நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !
நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?
நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா……

Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sun Jun 01, 2014 5:05 am
நேற்று ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்குப் போனேன்.
நல்ல பசி....
சாப்பிட உட்கார்ந்தால் ... உணவு தயாராகவில்லை.
எனக்கு வந்ததே கோபம்....
"பளார்" என என மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.
அவள் அழ ஆரம்பிக்க ...
பக்கத்து வீட்டுக்காரகளெல்லாம் என் வீட்டை எட்டிப் பார்க்கும் படி ஆயிற்று.
விளைவு ... பசியுடனேயே தூக்கம்....
இன்று காலை 6 மணி இருக்கும்...
என் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரியும் பேசும் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது.
"ஏண்டி...இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிக்கிறாரு ... இவர்கூடல்லாம் எப்படி குடும்பம் நடத்துற? ... போ... போய் போலிஸ் ஸ்டேடன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து நாலு சாத்து சாத்த சொல்லு ... அப்பதான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் திருந்துவாங்க"
சிறிது நேர மவுனத்திற்கும் பின் என் மனைவி சொன்னாள்,
" நானும் அப்படித்தான் நெனச்சேன் ... ஆனா, நான் பூரிக்கட்டையால அடிச்சதுல அவரு உடம்பெல்லாம் வீங்கியிருக்கே ... அதை போலிஸ்காரங்க பார்த்தாங்கன்னா ... நானும்ல மாட்டிப்பேன்"

Sun Jun 01, 2014 5:08 am
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sun Jun 01, 2014 9:51 pm
பஸ்ஸில ரெண்டு பேருக்கு மட்டுமே இடம் குடுக்கவேணும்
1.ஊனமுற்றோர்
2."பான"முற்றோர்
ஏன்னா ரெண்டு பேருக்குமே பேலன்ஸ் இருக்காது..
1.ஊனமுற்றோர்
2."பான"முற்றோர்
ஏன்னா ரெண்டு பேருக்குமே பேலன்ஸ் இருக்காது..
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sun Jun 01, 2014 9:54 pm
சிஸ்டர், அந்த நோயாளிக்கு மயக்கம் கொடுத்தாச்சா?
அதற்கு அவசியம் ஏற்படவில்லை டாக்டர், என்னைப்
பார்த்தவுடன் மயக்கமாகிட்டார்..!
-
அதெப்படி..?
நான்தான் அவர் மாஜி மனைவி..!
அதற்கு அவசியம் ஏற்படவில்லை டாக்டர், என்னைப்
பார்த்தவுடன் மயக்கமாகிட்டார்..!
-
அதெப்படி..?
நான்தான் அவர் மாஜி மனைவி..!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sun Jun 01, 2014 10:15 pm
”எங்க தாத்தா சுதந்திரத்துக்காக ரொம்ப போராடினவங்க..”
“அப்புடியா? பரவால்லயே?”
“ஆமா. ஆனா.................,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கடைசி வரை பாட்டி தரவே இல்ல”!!! ???
“அப்புடியா? பரவால்லயே?”
“ஆமா. ஆனா.................,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கடைசி வரை பாட்டி தரவே இல்ல”!!! ???
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sun Jun 01, 2014 10:16 pm
கொஞ்சம் சிரிக்கலாம், வாங்க!
"இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?"
"ஐந்து வருஷமா இருக்கேங்க!"
"நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை"
"தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?"
"என்ன சார் சொல்றாங்க?"
"மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள் ஆரோக்கியமா வாழுறாங்களாம். அதுமட்டுமில்ல...பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்"
"அடேங்கப்பா...இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!"
"ஆமாங்க!"
"ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!"
"எது...பிரேக்கா?"
"இல்ல...டிரைவர்!"

Tue Jun 03, 2014 8:16 am
வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! மீண்டும் இந்த வழக்கை முதலிலிருந்து விசாரணை செய்ய அனுமதி வேண்டுகிறேன்.
நீதிபதி : எதற்காக மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கேட்கிறீர்கள்..?
வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான்...
நீதிபதி : என்ன ஆதாரங்கள்...?
வழக்கறிஞர் : என் கட்சிக்காரரிடம் இன்னும் ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரு ஏக்கர் நிலமும் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவந்தது...!"
நீதிபதி : எதற்காக மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கேட்கிறீர்கள்..?
வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான்...
நீதிபதி : என்ன ஆதாரங்கள்...?
வழக்கறிஞர் : என் கட்சிக்காரரிடம் இன்னும் ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரு ஏக்கர் நிலமும் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவந்தது...!"
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Tue Jun 03, 2014 8:17 am
ஆட்டோக்காரனுக்கு பக்கம் கூட தூரம் தான்.
ரியல் எஸ்டேட் போடுறவனுக்கு தூரம் கூட பக்கம் தான்..
இப்போதெல்லாம் பிச்சைக்காரர்கள் மீந்த உணவைக் கேட்பதில்லை/வாங்குவதில்லை,காசு கேட்டு வாங்கி புதிய உணவை வாங்கிக்கொள்கிறார்கள்
தன்னிடம் தங்கமேதும் இல்லையென்பதை பெண் மட்டுமே பெருந்துயர் போல சொல்லி அழமுடியும்!
ரியல் எஸ்டேட் போடுறவனுக்கு தூரம் கூட பக்கம் தான்..
இப்போதெல்லாம் பிச்சைக்காரர்கள் மீந்த உணவைக் கேட்பதில்லை/வாங்குவதில்லை,காசு கேட்டு வாங்கி புதிய உணவை வாங்கிக்கொள்கிறார்கள்
தன்னிடம் தங்கமேதும் இல்லையென்பதை பெண் மட்டுமே பெருந்துயர் போல சொல்லி அழமுடியும்!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Tue Jun 03, 2014 8:19 am
மருத்துவமனையில்
"சிஸ்டர் எனக்காக ஒரு பாட்டு பாடுவீங்களா" ?
"ஓ.. .ஆனால் திட்டக் கூடாது"..
"ம் .. . பாடுங்க"
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா"..
"சிஸ்டர் எனக்காக ஒரு பாட்டு பாடுவீங்களா" ?
"ஓ.. .ஆனால் திட்டக் கூடாது"..
"ம் .. . பாடுங்க"
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா"..
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed Jun 04, 2014 3:13 pm
உங்க பொண்ணுக்கு 30 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம் பண்ணீங்களே….
பொண்ணு எப்படி இருக்கா?
அவ நல்லாத்தான் இருக்கா…மாப்பிள்ளைதான், "50 லட்ச
ரூபாய் தர்றேன்… என்னைக் காப்பாத்துங்க மாமான்னு"
கெஞ்சறான்!
பொண்ணு எப்படி இருக்கா?
அவ நல்லாத்தான் இருக்கா…மாப்பிள்ளைதான், "50 லட்ச
ரூபாய் தர்றேன்… என்னைக் காப்பாத்துங்க மாமான்னு"
கெஞ்சறான்!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri Jun 06, 2014 7:48 am
கடி ஜோக்ஸ் :-
இரு மாணவர்கள் பேசிக் கொண்டது::
கணக்கு புஸ்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா?
தெரியலையே...
ஏன்னா அதுக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குதுல்ல, அதனால தான்!
*************************************************************
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டது;
இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே பிடிக்கல.
உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே?
பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே!
*********************************************************************
இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டது;
மழையில நனைஞ்சு உன் மண்டை வீங்கிடுச்சா?
ஆமாம்! நான் நனைஞ்சது கொட்டுற மழையில.
******************************************************************************
சவப்பெட்டி
அழுகின்றது
இறந்தது
மனிதன் தானே !!!
என்னை ஏன்
புதைக்கின்றீர்கள்,,,,!!!!! ????

Fri Jun 06, 2014 8:58 pm
‘‘ஹமாம் 13 ரூபாய், சிந்த்தால் 19 ரூபாய், லக்ஸ் 13 ரூபாய், பியர்ஸ் 19 ரூபாய், மெடிமிக்ஸ் 16 ரூபாய்,லைபாய் 12ரூபாய், டெட்டால் 24 ரூபாய்! எதை வேணும்னாலும் வாங்கு… ஆனா,
.
.
.
.
.
.
.
.
.
குளிச்சிருடா செல்லம்!’’
.
.
.
.
.
.
.
.
.
குளிச்சிருடா செல்லம்!’’
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri Jun 06, 2014 8:59 pm
teacher : யார் அடுத்த
கேள்விக்கு பதில்
சொல்றாங்களோ அவங்க
வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag ah
தூக்கி வெளிய போட்டான்)
Teacher (கோபமா) : எவன்டா bag
ahதூக்கி வெளிய போட்டது..
Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன்
கிளம்புறேன்..
(நாங்க எப்போதும் இப்படித்தான்.....)
கேள்விக்கு பதில்
சொல்றாங்களோ அவங்க
வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag ah
தூக்கி வெளிய போட்டான்)
Teacher (கோபமா) : எவன்டா bag
ahதூக்கி வெளிய போட்டது..
Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன்
கிளம்புறேன்..
(நாங்க எப்போதும் இப்படித்தான்.....)
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri Jun 06, 2014 9:00 pm
தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது
கட்டளை : 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3
திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

Sat Jun 14, 2014 8:28 am
ட்ரெயின்ல இருந்து நீங்க இறங்கி ரொம்ப நேரம் ஆச்சே...பிளாட்பாரத்துல தனியா நின்னுட்டு என்ன யோசிக்கிறீங்க? பெட்டிய நான் தூக்கறேன். 5 ரூபா கொடுங்க போதும்!"
"வேணாம்பா!"
"என்ன சார் நீங்க...பெட்டி பெருசா இருக்கு. எப்படி தூக்குவீங்க? கூலி கொஞ்சம் குறைச்சிக்கறேன் சார்"
"இப்போ வேணாம். கொஞ்ச நேரம் ஆகட்டும்"
"தனியா உங்களால தூக்க முடியாது சார்.
"அதான் சார் சொன்னேன். பெட்டியை நான் தூக்கறேன்னு...நாங்க ரொம்ப சுலபமா தூக்குவோம். 5 ரூபாய்க்கு இவ்ளோ யோசிக்கிறீங்களே!"
"காசுக்காக நான் யோசிக்கல"
"பின்னே"
"பெட்டியை நீ தூக்கிட்டு வெளியே போறப்போ, இதோட சொந்தக்காரங்க பாத்துட்டா என்ன பண்றது. அதான் தயங்குறேன்!"

Sat Jun 14, 2014 8:29 am
என்னய்யா அந்த வீட்டுக்கு முன்னாடி ஆம்புலன்ஸ் நிக்கிது?என்னாச்சு..?"
"அதுவா...அந்தம்மாவோட மருமகள் சமைச்ச உப்புமாவ சாப்பிட்டு அந்தம்மா மயக்கமாகிட்டாங்களாம்...."
"உப்புமாவ சாப்பிட்டா...?!! அதெப்படி? "
"யோவ்... அந்தம்மா மருமக ரொம்ப வெகுளியான புள்ள... உப்புமாவ சமைக்கும்போது உப்பு காலியா போயிருக்கு...."
"சரி..."
"உடனே டூத்பேஸ்ட்டை பிதுக்கி போட்டிருக்கு....."
"அடப்பாவமே ஏன்?"
"ஏன்னா அந்த டூத்பேஸ்ட்ல உப்பு இருக்குறதா டி.வி.யில சொன்னாங்களாம்....!!!"

Sat Jun 14, 2014 8:30 am
Teacher : முட்டை போடுற நாலு ஜீவனோட பேரு சொல்லு கண்ணா?
.
.
.
.
.
.
.
.
.
Nusky KR : SCIENCE மிஸ்,
MATHS மிஸ்,
ENGLISH மிஸ்,
SOCIAL மிஸ்.
.
.
.
.
.
.
.
.
.
Nusky KR : SCIENCE மிஸ்,
MATHS மிஸ்,
ENGLISH மிஸ்,
SOCIAL மிஸ்.
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Jun 14, 2014 8:53 am
நண்பா ....இன்னிக்கு ஒருத்தர்,
"உன் நண்பனைச் சொல்…உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" அப்படின்னாரு!
"அப்படியா?"
*
*
*
*
*
*
*
"ஆமா ... நான் உன் பேரைச் சொன்னேன்… காறித்துப்பிட்டுப் போயிட்டாரு!"
ஏன் மச்சான் உன் பேர சொன்ன இவ்ளோ கடுப்பகுராய்ங்க ????
"உன் நண்பனைச் சொல்…உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" அப்படின்னாரு!
"அப்படியா?"
*
*
*
*
*
*
*
"ஆமா ... நான் உன் பேரைச் சொன்னேன்… காறித்துப்பிட்டுப் போயிட்டாரு!"
ஏன் மச்சான் உன் பேர சொன்ன இவ்ளோ கடுப்பகுராய்ங்க ????
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Jun 14, 2014 8:58 am
இவங்கள என்ன செய்ய?...... மிடில....
1.ஓசி டிவிடி ல படம் பாக்கும்போது பிரிண்ட் சரியில்லனு டென்ஷன் ஆவறது.....
2.ஒரு கூலிங் க்ளாஸ வச்சு பத்து பேர் போட்டோ எடுத்து அப்லோட் பண்றது......
3.ஓசி சோறுன்னா, பெல்ட்ட கிழட்டி, பட்டன ரிலிஸ் பண்ணீட்டு பந்தியில இறங்குறது..
4.காலேஜ்ல அப்ளிகேசன் வாங்கிட்டு கல்யாண பத்திரிக்கைல பேருக்கு பின்னாடி டிகிரி போட்டுகிறது.....
5.ஒரு பொண்ணு விடாம எல்லார்டயும் கடலை போடுறது.....
6.பக்கத்து வீட்டுகாரன் கேபிள் ஒயர்ல ஊக்கு குத்தி ஓசில டிவி பாக்குறது......
7.பொண்ணுங்க ஸ்டேடஸ் மட்டுமே Like பண்றது.......
8.மரத்த வெட்டிட்டு வேர்க்குதுன்னு ஏசிய வாங்கி மாட்டுறது......
9.கரண்ட் கட் ஆனதுக்கு அப்புறம் UPS -ல சார்ஜ் தீருகிற வரைக்கும் படம் பாக்குறது ........
10.காச வாங்கிகிட்டு நடிகுற நடிகனுக்கு பால் அபிஷகம் பண்றது , பேனர் வைக்குறது ,போஸ்டர் அடிக்குறது .......

Sat Jun 14, 2014 9:06 am
ஒரு வக்கீலும் ஒரு `கிரமத்து பெரிசும் பக்கத்து பக்கத்து சீட்டில் பிளேனில் பிரயாணம் பண்றாங்க.
வக்கீல் பெரியவரிடம் : நாம் ஒரு கேம் விளையாடலாமா?
பெரிசு : அசதியா இருக்கு. குட்டித் தூக்கம் போடலாம்ன்னு இருக்கேன்.
வக்கீல்: (வாய் சும்மா இருக்குமா?) இது இண்டரஸ்டிங். நான் ஒரு கேள்வி கேப்பேன். அதுக்கு நீங்க பதில் சொல்லிட்டா ரூவாய் 500/ தருவேன். பதில் சொல்லைன்னா நீங்க ரூபாய் 5/- கொடுத்தா போதும். அதே போல் நீங்க கேளுங்க? பதில் சொல்லாட்டி நான் ஐநூறு கொடுப்பேன். பதில் சொல்லிட்டா நீங்க ஐந்து ரூபாய் கொடுத்தா போதும். என்ன சொல்றிக?
பெரிசு : சரி கேளுங்க.
வக்கீல்: நமக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்ளோ?
பெரிசு : ஒன்னும் பேசாமல் அஞ்சு ரூபாய் கொடுத்துட்டார்.
நீங்க கேள்வி கேளுங்கன்னார் வக்கீல்.
பெரிசு : மூன்று கால்களுடன் மலை ஏறி நான்கு கால்களுடன் திரும்ப வரும் மிருகம் எது?
வக்கீல் பதில் தெரியாமல் மூச்சு விடாம ஐநூறு கொடுத்தார். அப்புறம் பெரியவருடன் நீங்க பதில் சொல்லுங்க என்றார்.
பெரிசு : ஐந்து ரூபாய் கொடுத்திட்டு எனக்கும் தெரியாதுன்னார்.
கிராமம்னா.. கிராமம் தாங்கோ !!! ???

Sat Jun 14, 2014 9:12 am
கணவன்:
என்னைச் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து விட்டார்களே..!
மனைவி:
தூக்கத்துல உளறாம கம்முனு படுங்க..
இது கொசு வலை..!
என்னைச் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து விட்டார்களே..!
மனைவி:
தூக்கத்துல உளறாம கம்முனு படுங்க..
இது கொசு வலை..!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Jun 14, 2014 9:14 am
"உங்க தலைவலிக்கு கண்ணாடி போட்டா சரியா போயிடும்".
"அப்படியா… என் பொண்டாட்டி ஏற்கனவே கண்ணாடி போட்டிருக்கா டாக்டர்"...!!! ???
"அப்படியா… என் பொண்டாட்டி ஏற்கனவே கண்ணாடி போட்டிருக்கா டாக்டர்"...!!! ???
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Jun 14, 2014 9:21 am
சார் சென்னைல இருந்து திருப்பதிக்கு நடந்து போறேன்.. எனக்கு லோன் வேணும்..
வங்கி அதிகாரி : லோன் எதுக்கு?
அட நீங்கதானே விளம்பரம் போட்டிருந்தீங்க. கால்நடைக்கு லோன் தாரோம்னு...!! குடுங்க குடுங்க...
வங்கி அதிகாரி: எப்படி எல்லாம் கெளம்பி வராயங்க...அவ்வவ்வ்வ்வ்....
வங்கி அதிகாரி : லோன் எதுக்கு?
அட நீங்கதானே விளம்பரம் போட்டிருந்தீங்க. கால்நடைக்கு லோன் தாரோம்னு...!! குடுங்க குடுங்க...
வங்கி அதிகாரி: எப்படி எல்லாம் கெளம்பி வராயங்க...அவ்வவ்வ்வ்வ்....
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Jun 14, 2014 9:24 am
ஏன்டா உங்க பள்ளிக்கூடம் எல்லாம் எப்படி இருக்கு?”
பள்ளிக்கூடம் திறந்து இத்தனை நாள் ஆச்சு எல்லா புக்கும் குடுத்துட்டாங்க....இன்னும் ‘ஃபேஸ்புக்’க மட்டும் குடுக்கவே இல்லடா எப்ப தருவாங்கனு தெரியல...”!?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum