கிறிஸ்துமஸ் கேக்: சாக்லெட் கேக்
Sat Dec 09, 2017 7:47 am
கிறிஸ்துமஸ் கேக்: சாக்லெட் கேக் என்னென்ன தேவை?
வெண்ணெய், மைதா, சர்க்கரை - தலா 170 கிராம்
முட்டை - 3
கோகோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
சாக்லெட் எசென்ஸ் - ஒன்றரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பார்பி பொம்மை - 1
எப்படிச் செய்வது?
சர்க்கரையை நன்றாகப் பொடித்து அதை வெண்ணெயுடன் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். இந்தக் கலவையுடன் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்றாகக் கலக்கவும். மைதா மாவுடன் சாக்லெட் பவுடரையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து மூன்று முறை சலிக்கவும். சலித்த மாவு கலவையை வெண்ணெய் கலவையுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாக அடிக்கவும். ஜெல்லி மோல்டில் வெண்ணெய் தடவி, அதில் இந்தக் கலவையை ஊற்றவும். 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். ஏற்கனவே சொன்னதுபோல் ஐசிங் கிரீம் செய்து அதனுடன் ரோஸ் கலரைச் சேர்க்கவும்.
கேக்கின் சிறிய பகுதி மேல் பக்கம் இருக்குமாறு தலைகீழாக வைக்கவும். பார்பி பொம்மையில் காலை தனியாக எடுத்துவிட்டு, அதன் இடுப்புப் பகுதியை கேக்கின் மேல் பரப்பில் செருகவும். ஃப்ரில் வடிவ துளையுள்ள கோனில் ஐசிங்கை நிரப்பி கேக்கைச் சுற்றி ஃப்ராக் போல பரப்பவும். பொம்மையின் மேல் சட்டைபோல நட்சத்திர வடிவில் ஐசிங்கைப் பரப்பவும். பல வண்ண மிட்டாய்களைச் சுற்றிலும் வைத்து அலங்கரிக்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum