நீரிழிவு நோயாளிகளுக்கான கிறிஸ்துமஸ் கேக்
Fri Jan 08, 2016 5:05 pm
நீரிழிவு நோயாளிகளுக்கான கிறிஸ்துமஸ் கேக்
பொதுவாக கேக்கில் அதிகப்படியான சர்க்கரையானது இருக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் கேக்கை தொடக்கூட மாட்டார்கள். ஆனால் அத்தகையவர்கள் சர்க்கரை சேர்க்காத கேக் செய்து சாப்பிடலாம். ஆம், சர்க்கரை சேர்க்காமலும் அருமையான சுவையில் இந்த கிறிஸ்துமஸிற்கு கேக் செய்ய முடியும். மேலும் இப்போது அந்த சர்க்கரை சேர்க்காத கிறிஸ்துமஸ் கேக்கின் செய்முறையைத் தான் பார்க்கப் போகிறோம். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு கேக் ரெசிபி. ஆகவே இந்த கிறிஸ்துமஸ் ஆரோக்கியமானதாக இருக்க, இந்த சுகர்லெஸ் கேக்கை செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
உலர் திராட்சை - 2 கப் பிராந்தி - 2 டீஸ்பூன் தண்ணீர் - 1 1/2 டீஸ்பூன் அரைத்த பூசணிக்காய் - 1 கப் (இனிப்புக்காக) முட்டை - 2 ஆப்பிள் சாஸ் - 1/2 கப் பால் - 1/2 கப் பொடித்த விருப்பமான நட்ஸ் - 1/2 கப் பட்டைத் தூள் - 1 டீஸ்பூன் கிராம்பு - 1 டீஸ்பூன் மைதா - 1 கப் பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மைக்ரோ ஓவனை 250 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும்.
* பின் பிராந்தி மற்றும் நீரை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக ஊற்றி, அதில் உலர் திராட்சையை போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் அரைத்த பூசணிக்காய், முட்டை, ஆப்பிள் சாஸ் மற்றும் பாலை ஒன்றாக ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள உலர் திராட்சையை போட்டு, அத்துடன் பொடித்த நட்ஸ், பட்டைத் தூள், கிராம்பு, மைதா மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
* வேண்டுமானால் அத்துடன் 1 டீஸ்பூன் பிராந்தி சேர்த்துக் கொள்ளலாம்.
* பிறகு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி, பின் அதில் மாவை ஊற்றி, ஓவனில் 200 டிகிரி செல்சியஸில் பேக் செய்ய வேண்டும். பின் 180 டிகிரி செல்சியஸில் வைத்து, 10 நிமிடம் பேக் செய்து எடுத்தால், நீரிழிவு நோயாளிகளுக்கான இனிப்பில்லாத கிறிஸ்துமஸ் கேக் ரெடி!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum