கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக்
Sat Dec 12, 2015 2:36 pm
கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக்
கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள். அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ஃபுரூட் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப்
கேரமலுக்கு... சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கேக்கிற்கு...
மைதா - 2 1/2 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 5
வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
கேரமல் - 1 கப்
ஊற வைத்த பழங்கள் - 3 கப்
ரம் - 2 டீஸ்பூன்
செய்முறை கேரமல் செய்ய...
* முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம்.
* சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். முக்கியமாக சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum