கடலை மாவு லட்டு
Mon Oct 31, 2016 7:18 pm
தயாரிப்பு நேரம்: 1 நிமிடம்
சமையல் நேரம்: 5 முதல் 6 நிமிடங்கள்
10 லட்டுகள் செய்யலாம்
தேவையான பொருட்கள்:
1 கப் கடலை / கடலை மாவு
3/4 கப் பவுடராக்கிய சர்க்கரை
6 டீஸ்பூன் நெய் (உருக்கியது)
1/4 தேக்கரண்டி ஏலக்காய்
செய்முறை:
ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
நுண்ணலை அடுப்பை அதிக சூட்டில் (என்னுடையது 800 W உள்ளது) 3 நிமிடம் வரை வைக்கவும், நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட்டு வைக்கவும்.
இப்போது பாதி சூட்டில் 2 முதல் 3 நிமிடம் வரை வைக்கவும், நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட்டு வைக்கவும்.
கடலை மாவு இன்னும் வேக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் மேலும் ஒரு நிமிடம் அதிகமாக வைக்கவும்.
இதை வெளியே எடுத்து நன்கு ஆற வைக்கவும்.
ஆறிய பிறகு அரைத்து வைத்துள்ள சர்க்கரை பவுடரையும், ஏலக்காய் தூளையும் சேர்க்கவும்.
இதை உங்கள் கைகளால் ஒரு சில நிமிடங்கள் நன்றாக கலந்து கொள்ளவும்.
இதில் ஒரு சிறிய பகுதியை எடுத்து பந்து போல வட்ட வடிவமாக உருண்டை செய்து கொள்ளவும்.
உருண்டை உங்களுக்கு சரியாக வரவில்லை என்றால், கொஞ்சம் வெதுவெதுப்பான நெய் சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum