அரிசி மாவு-தேங்காய் அடை
Fri May 13, 2016 10:40 pm
அரிசி மாவு-தேங்காய் அடை
தேவையானவை:
பச்சரிசி மாவு - 100 கிராம்
புழுங்கல் அரிசி மாவு - 100 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
எண்ணெய் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 2
அல்லது (தேவையான அளவு)
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸியில் தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைக்கவும். இதனுடன் பச்சரிசி மாவு, புழுங்கல் அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு, அடை மாவு பதத்துக்குக் கலக்கவும். பிறகு அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கி அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு தோசைக்கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து, தக்காளிக் குழம்பு அல்லது வேர்க்கடலைச் சட்னியுடன் பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum