சத்து மாவு புட்டு
Fri Oct 07, 2016 8:34 am
சத்து மாவு புட்டு
தேவையானவை:
சத்து மாவு (நவதானியங்களை வறுத்து, அரைத்த மாவு) – ஒரு கப், தேங்காய் துருவல், சர்க்கரை – தலா கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் சத்து மாவை போட்டு… உப்பு, எண்ணெய் விட்டு பிசிறி, சிறிதளவு தண்ணீரை மாவின் மீது தெளித்து, பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கைகளால் உதிர் உதிராக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்… சத்தான புட்டு ரெடி!
பிசைந்த மாவை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கைகளால் உதிர் உதிராக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்… சத்தான புட்டு ரெடி!
Re: சத்து மாவு புட்டு
Fri Oct 07, 2016 8:36 am
வேர்க்கடலை ஃப்ரூட் சுண்டல்
தேவையானவை:
வேர்க்கடலை – ஒரு கப், ஆப்பிள், மாங்காய் – தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
செய்முறை:
வேர்க்கடலையை வேக வைக்கவும். ஆப்பிள், மாங்காயை கழுவி துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேக வைத்த வேர்க்கடலை, மாங்காய் துருவல், ஆப்பிள் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்… ஃப்ரூட் சுண்டல் தயார்.
Re: சத்து மாவு புட்டு
Fri Oct 07, 2016 8:37 am
முக்கூட்டு வடை
தேவையானவை:
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப், மிளகு, சீரகம் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 10, நெய் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து வடிய விட்டு… மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைக்கவும். இதனுடன் நெய் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
Re: சத்து மாவு புட்டு
Fri Oct 07, 2016 8:38 am
சம்பா அவல்
தேவையானவை:
அவல் – ஒரு கப், நெய் – 4 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 10, கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அவலை 5 நிமிடம் நீரில் ஊறவிடவும். வாணலியில் நெய் விட்டு, முந்திரிப் பருப்பை வறுக்கவும். அதே வாணலியில் நெய்யுடன் எண்ணெய் சிறிதளவு கலந்து கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி… ஊற வைத்த அவல், பொடித்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால்… சம்பா அவல் ரெடி!
குறிப்பு: சம்பா அவல் அல்லது வெண் பொங்கலை நவராத்திரி முதல் நாள் நிவேதனமாக செய்யலாம்
குறிப்பு: சம்பா அவல் அல்லது வெண் பொங்கலை நவராத்திரி முதல் நாள் நிவேதனமாக செய்யலாம்
Re: சத்து மாவு புட்டு
Fri Oct 07, 2016 8:39 am
வாழைப்பழ அப்பம்
குழந்தைகளுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் ஏதாவது கொடுக்க நினைத்தால், கோதுமை மாவு மற்றும் வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் வாழைப்பழ அப்பம் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, அவர்களின் பசியை ஆற்றும். மேலும் இது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் செய்து கொடுக்கும் அருமையான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த வாழைப்பழ அப்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப் வெல்லம் - 1/2 கப் (பொடித்தது) அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் கனிந்த வாழைப்பழம் - 1 ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை சமையல் சோடா - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு மற்றும் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சமையல் சோடா மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!!!
Re: சத்து மாவு புட்டு
Fri Oct 07, 2016 8:41 am
கடலைப்பருப்பு சுண்டல்
இத்தகைய சுண்டல் ரெசிபியில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சுண்டல் ரெசிபிக்களை செய்வார்கள். அந்த வகையில் இன்று கடலைப்பருப்பு சுண்டல் செய்யலாம். இப்போது இங்கு அந்த கடலைப்பருப்பு சுண்டல் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை செய்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1/2 கப் துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - சில துளிகள் எண்ணெய் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... கடுகு - 3/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) வரமிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 1-2 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் அதனை இறக்கி, நீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நன்கு கிளறி, துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum