இவர் நல்ல தீர்க்கதரிசியா அல்லது கள்ளத்தீர்க்கதரிசியா ???
Thu Apr 07, 2016 6:21 am
இவர் நல்ல தீர்க்கதரிசியா அல்லது கள்ளத்தீர்க்கதரிசியா ???
இந்த ரெவரண்டு அவர்களின் பிறந்தநாள் அன்று கர்த்தர் இந்த உலகத்திற்கு ஏதோ ஒரு முக்கியமான செய்தியை சொல்லப்போகிறார் என்றால் இவர் எவ்வளவு பெரிய ரெவண்டு ஆக இருப்பார்.
வலைத்தளங்களில் இது போன்ற ஆட்கள் தங்களை மேன்மைப்படுத்திக்கொண்டு வலம் வருகிறார்கள். இவர்களுடைய நோக்கம் திருச்சபையாகிய மணவாட்டியை கறைப்படுத்துவதுதான். நாம் எச்சரிக்கையாய் இருப்போம்.
- ஜாமக்காரன் முகநூல்
Re: இவர் நல்ல தீர்க்கதரிசியா அல்லது கள்ளத்தீர்க்கதரிசியா ???
Fri Apr 08, 2016 11:41 am
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
காக்குவ் பிலிப்பென்னும் கள்ளத்தீர்க்கதரிசி ஒருவன் எழும்பியிருக்கிறான். அவனைக்குறித்து அவனுடைய பக்தன் ஒருவன் மெய்சிலிர்க்கும்படி சொல்லுகிறான். வாசித்துப்பாருங்கள்.
ஒரு கிறிஸ்த்துவனுக்கு முற்றிலுமானது வேதாகமம் அல்ல. அந்தந்த தலைமுறையினருக்கு கர்த்தரால் அனுப்பபடுகிற தீர்க்கதரிசி செய்தாயாளன் மட்டுமே முற்றிலுமானதாக இருக்கிறான். இன்றய தலைமுறைக்கு(21 ம் நூற்றாண்டில் வாழ்கிற உங்களுக்கு) உயிரோடுள்ள காக்குவ் பிலிப்பென்னும் தீர்க்கதரிசி செய்தியாளன்தான் இன்று முற்றிலுமானவராக உள்ளார். இவரை ஏற்றுக்கொள்கிறவன் இரட்சிக்கப் படுவான். நிராகரிப்பவன் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான். கேட்கச் செவியுள்ளவன் கேட்கக்கடவன் இது கர்த்தர் உரைக்கிறதாவது.
#இயேசு கிறிஸ்துவை தவிர வேறு இரட்சகர் இல்லை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum