நல்ல குடும்பம்
Fri Feb 26, 2016 10:04 pm
ஊர் என்ற பட்டணத்திலிருந்து ஆரான் என்ற பட்டணம் வரை 965km தொலைவை தேராகு தனது 200 வது வயதில் நடந்துள்ளார். முதிர் வயதில் ஒரு நாளைக்கு 15km நடந்திருந்தாலும் ஒன்றரை வருடத்தில் ஆரான் பட்டணத்தை அடைந்திருப்பார்கள். 205 வயதில் தேராகு ஆரானில் மரித்ததாக வாசிகின்றோம் (ஆதி 11:31-32). அப்படியென்றால் ஆபிரகாமின் குடும்பம் ஆரான் பட்டணத்தில் தங்குவதற்கு முக்கிய காரணம் தேராகுவின் முதிர் வயதாகத்தான் இருந்திருக்கும். குறைந்தது மூன்று வருடம் ஆரான் பட்டணத்தில் ஆபிரகாம் தங்கியிருந்து, தனது தகப்பனை பராமரித்திருகின்றார்.
தேராகு இறந்த பிறகு, ஆபிராகாமின் 75 வது வயதில், "கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதி 12:1-2) என்கிறார். ஆபிரகாம் தனது முதிர் வயதான தகப்பன் தேராகுவை பராமரித்திருகின்றா? என்று தேவன் சோதித்திருக்க கூடும். ஆகவே தான் தேராகு இறந்த பிறகு, தகப்பனுடைய வீட்டை விட்டுப் புறப்படும் படியாக தேவன் கட்டளையிடுகின்றார். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் ஐந்தாவது கட்டளையாக, "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக' (யாத் 20:12) என்று கூறியுள்ளார்.
குடும்பத்தின் தலைவராக இருந்து, குடும்பத்தின் பொருளாதார தேவையைச் சந்திக்கும் தகப்பன் மட்டுமல்ல, தாயும் கனம்பண்ணப்பட வேண்டும்மென்பதே தேவ கட்டளையாயிருக்கிறது. இப்படிபட்ட தேவகட்டளைகள் வெளிப்படும் முன்பே அதாவது மனசாட்சியின் காலத்திலேயே ஆபிரகாம் தனது தகப்பனை பராமரித்துள்ளார். தாயானவள் பத்து மாதம் கர்ப்பத்தில் சுமந்திருக்கிறாள். கருவிலே தாயின் மூலமாக நம்முடைய தேவைகளை தேவன் சந்தித்தார். பின்னர் தந்தையின் கடின உழைப்பின் மூலமாக நம்முடைய தேவைகளை தேவன் சந்தித்தார். நம்முடைய தாயும் தந்தையும் நமது வாழ்நாட்களின் நீண்ட காலம் நம்முடன் வருகிறார்கள். அவர்கள் நமக்காகவும் நம்முடைய வளர்ச்சிக்காவும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களை முதிர் வயதில் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் பொறுப்பு.
கிறிஸ்துவ பெயர்களை வைத்துகொண்டு, திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களை மதிக்காத பிள்ளைகள் உண்டு. கோபத்தில் பெற்றோர்களிடம் சீரும் பிள்ளைகள் உண்டு. முதிர் வயதில் பெற்றோர்களை பராமரிக்காத பிள்ளைகள் உண்டு. அபிரகாம் தனது 75 வயதில் தகப்பனுக்கு கீழ்ப்படிந்தார். தனது தகப்பனை பராமரித்தார். ஆகவே தேவனிடமிருந்து, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" என்ற உயரிய ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டார். இதை வாசிக்கின்ற அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நீங்கள் எல்லா சூழ்நிலையிலும் உங்கள் பெற்றோருக்கு கீழ்படிந்திருங்கள். அவர்களைக் கனப்படுத்துங்கள். தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.

Re: நல்ல குடும்பம்
Fri Feb 26, 2016 10:05 pm
ஆபிரகாமின் குடும்பத்தினர் கீழ்ப்படிதலுக்கு நல்ல முன்மாதிரியாக வாழ்ந்தனர். தேவன் ஆபிராகமையும், சாராளையும் தெரிந்துகொள்வதற்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. ஆபிரகாமின் தந்தை தேராகு ஒரு காலத்தில் விக்கிரகத்தை வழிபட்டு வந்தாலும், தன்னுடைய 200வது வயதில் கர்த்தருடைய அழைப்பை தனது மகன் ஆபிரகாமின் மூலம் அறிந்து கொண்டார். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தும், தனது மகனுடைய வார்த்தைகளை மதித்தும், தனது சொந்த பட்டணமாகிய ஊரில் இருந்து கானான் நாட்டை நோக்கி புறப்படுகின்றார். நல்ல குடும்ப தலைவர் தேவனுக்கு கீழ்ப்படிகின்றவராகவும், தனது குடும்ப நபர்களை மதித்து நடகின்றவராகவும் இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் ஆபிரகாமின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள ஆசை. ஆபிராகாமின் குடும்பத்தைப் போல நமது குடும்பங்கள் மாறினால் நிச்சயமாக அந்த ஆசிர்வாதங்களை சுதந்தரிக்கலாம். இன்றைக்கு அநேக கிறிஸ்துவ குடும்பங்களில் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிவதில்லை. கணவன் மனைவியை மதிப்பதில்லை. மனைவி கணவனை மதிப்பதில்லை. அல்லது பெற்றோர்கள் பிள்ளைகளை மதிப்பதில்லை. கிறிஸ்துவ குடும்பங்கள் சந்தோஷத்திலும், சமாதானத்திலும் ஆசிர்வாததிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். குடும்பத்தின் தலைவர் முதலாவது தான் குடும்பத்தின் தலைவர் அல்ல, கிறிஸ்துவே குடும்பத்தின் தலைவர் என்பதை உணர வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் தன்னிச்சையாக முடிவெடுக்காமல், தேவனுடைய ஆலோசனைக்காக காத்திருக்க வேண்டும்.
தேவனுடைய ஆலோசனையானது மனைவி மூலமாகவோ, பிள்ளைகள் மூலமாகவோ அல்லது வேறு நபர்கள் மூலமாகவோ வெளிப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். ஆபிரகாம் மூலம் வெளிப்பட்ட தேவசித்ததிற்கு அவருடைய தகப்பன் தேராகு கீழ்ப்படிந்தாரே! தேராகுவிற்கு கீழ்ப்படிந்து அவருடைய தலைமையில்அபிரகாம் நடந்து செ ன்றாரே! அபிரகாமின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சாராளும் மறுப்பேதும் கூறாமல் அவரோடு நடந்து சென்றாளே!
கிறிஸ்துவைத் தலைவராக கொண்ட குடும்பத்தில் குடும்ப ஜெபம் இருக்கும். ஒவ்வொரு நபரும் தங்களைக் குறித்த தேவ சித்ததை நிறைவேற்ற ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கிறிஸ்துவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கப்படும். கிறிஸ்து அங்கே ஆராதிக்கப்படுவார். கிறிஸ்துவே அக்குடும்பத்தின் ஆட்சியாளராக இருப்பார். கிறிஸ்துவின் வார்த்தைக்கு முரணானவைகளைச் செய்ய அக்குடும்பத்தினர் தயங்குவார்கள். பாவத்தை அக்குடும்பம் வெறுத்து ஒதுக்கும். உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கும், உலக ஞானத்திற்கும் அக்குடும்பத்தில் இடமிருக்காது. முக்கியமாக டெலிவிஷன் அக்குடும்பத்தை ஆட்சி செய்யாது. நவீன உடையலங்காரத்திற்கும், பண மோகத்திற்கும் அக்குடும்பத்தில் இடமிருக்காது. இப்படிப்பட்ட குடும்பத்தால் மட்டுமே கிறிஸ்துவை மகிமைப்படுத்த முடியும்.
இப்படிப்பட்ட கிறிஸ்துவ குடும்பத்தில், கணவனால் தனது பாவசுபாவத்தைக் கட்டுக்குள் அடக்கி மனைவியையும் பிள்ளைகளையும் நேசித்து, அவர்களுக்கு விசுவாசமாக வாழ முடிகிறது. கணவனுக்கு மன அமைதியோடு மனைவியாலும், பிள்ளைகளாலும் கட்டுப்பட்டு நடக்க முடிகின்றது (எபேசி 5:20-25). இவர்கள் பிறக்கப் போகும் பிள்ளைகளுக்காக ஜெபத்தில் காத்திருப்பார்கள். பிள்ளைகள் பிறந்தபின் அவர்களை கர்த்தருக்குள் வளர்ப்பதையே பெருங்கடமையாகக் கொண்டிருப்பார்கள். உண்மையான தேவ அன்பு வெளிப்படுவதின் மூலமாக, குடும்பமாக தேவனை மகிமைப்படுத்த முடிகின்றது. நீங்கள் குடும்பமாக தேவனுக்கு கீழ்ப்படிந்து அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தி வாழ்ந்தால், நிச்சயமாக ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை சுதந்தரிக்கலாம். ஆமேன். அல்லேலுயா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum