பாசம் நிறைந்த குடும்பம்
Tue Aug 19, 2014 7:32 am
* மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.
* மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.
* பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.
* பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
* தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.
* அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.
* தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.
#சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம்
நன்றி: லங்காசிறி
Re: பாசம் நிறைந்த குடும்பம்
Tue Aug 19, 2014 7:42 am
அம்மா நாளைக்கு பீஸ் கட்ட கடைசி தேதி கட்டலைனா பரிட்சை எழுதமுடியாதுனு காலேஜ்ல சொல்லிட்டாங்கமானு அம்மாகிட்ட சொல்லும் பிள்ளை
சரிடா காலையில அப்பாகிட்டேந்து வாங்கித்தரேன்னு சொல்லிட்டு
குடும்ப கஷ்டத்தையும் எண்ணி தன் கணவருக்கும் மகனுக்கும் சொல்லாம எதிர் விட்டு பக்கத்து விட்டு பெண்களிடம் கடன் வாங்கி காலையில அதை நினைப்போடு இந்தாடா பணம், பத்திரமா எடுத்துவிட்டு போவியா பணத்த எங்க வச்சிருக்க காலேஜ் போன உடனே பணத்த கட்டிடுனு கொடுப்பாங்க எங்கம்மா
ஏதுமா பணம்னு கேட்டா மழுப்பலா பதில் சொல்லிட்டு டாட்டா காட்டுவாங்க ..
தலையை அடமானம் வச்சாவது பிள்ளைக்கு பீஸ் கட்டிடனும்ட்ற எண்ணத்தில் பிள்ளைக்களுக்காக தாய் எந்த அவதாரம் கூட எடுப்பாள்..
நான்கு சுவற்றுக்குள் நடந்தாலும், இதுவும் ஒரு அமைதி புரட்சியே..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum