அழுகின்ற தீர்க்கதரிசி – எரேமியா
Sat Feb 13, 2016 9:08 am
☀ தீர்க்கதரிசியாகிய எரேமியா பெயரால் அழைக்கப்படும் இப்புத்தகம் மூல மொழியாகிய எபிரேயத்தில், யிர்மீயா (Yirmeyah) அல்லது யிர்மீயாஹு (Yirmeyahu) என்றழைக்கப்படுகிறது. ☀ இதன் அர்த்தம், “யாவே உயர்த்துகிறார்” அல்லது, “யாவே தளர்த்துகிறார்” என்பதாகும். ☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 24-வது புத்தகமாக வருகிறது.
☀ எரேமியா, ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியரான இல்க்கியாவின் குமாரன். இந்த ஆனதோத் ‘பென்யமீன் தேசத்தில்’ எருசலேமின் வடக்கேயிருந்த நாட்டில் அமைந்திருந்த ஆசாரியருக்குரிய ஒரு பட்டணம். (1:1) ☀ ஏசாயா தீர்க்கதரிசி இறந்து 70 வருடங்கள் ஆன பிறகு, யோசியாவின் 13 ஆம் ஆண்டிலே, மிகவும் சிறிய வயதிலே, ஆன்டோத்திலே வசிக்கும்போது எரேமியா தீர்க்கதரிசனம் சொல்ல அழைக்கப்பட்டார். (எரே.1:6).
☀ இப்புத்தகம் எரேமியாவின் ஊழிய தொடக்க காலமுதல் யோயாக்கிமீன் நான்காம் ஆண்டு வரை இவர் உரைத்த தீர்க்க தரிசனங்கள் இவர் சொல்ல இவரது உதவியாளராகிய பாரூக்கால் எழுதப்பட்டது. ☀ இதை யோயாக்கீம் படித்து கத்தியால் கிழித்து எரித்துவிட்டான். பின்பு பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு மீண்டும் ஆரம்ப முதல் மேலும் அவர் உரைத்த தீர்க்கதரிசனங்கள் சேர்த்து எழுதும்படி எரேமியாவால் சொல்லப்பட்டு பாரூக்கால் எழுதப்பட்டது. (36-38) ☀ 52-ம் அதிகாரம், 2 இராஜா 24:18 - 25:30 வரையுள்ள வசனங்களோடு தொடர்புடையதால் அவருக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவரால் (பாரூக்) பின்னாட்களில் எழுதி சேர்க்கப்பட்டிருக்கலாம்.
☀ இப்புத்தகத்தில் உள்ள தகவல் காலவரிசையின்படி அல்ல, பொருளுக்கேற்ற படி ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இப்பதிவில் காலத்தையும் சந்தர்ப்ப சூழ் நிலைகளையும் குறித்ததில் பல வித்தியாசங்களை காணமுடிகிறது. ☀ இது பெரும்பான்மையான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், பின்தொடரும் புலம்பல் புத்தகத்துக்கு ஏற்ற சூழமைவையும் அளிக்கிறது. ☀ பரிசுத்த வேதாகமத்தின் நீளமான புத்தகம் என்ற பட்டியலில் எரேமியா இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. ☀ சங்கீதங்களின் புத்தகத்திற்கு அடுத்து அதிகமான வார்த்தைகள் (அதிகாரம் அல்ல) கொண்டு புத்தகம் இதுவாகும்.
☀ பழைய ஏற்பாட்டின் மற்ற தீர்க்கதரிசனங்களை விட எரேமியாவின் தனிப்பட்ட வாழ்க்கை, போராட்டம் மிக ஆழமாக பதிவு செய்துள்ளது. ☀ தேவனுடைய புதிய உடன்படிக்கையை மக்களுக்கு வெளிப்படுத்திய இப்புத்தகம் இறையியல் வெளிப்பாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ☀ மற்ற தீர்க்கதரிசன புத்தகங்களைப் போல இவை அடுக்கப்படாமல் எரேமியாவின் தீர்க்கதரிசன தொகுப்பாகவே இப்புத்தகம் காட்சியளிக்கிறது. ☀ கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அ) மேசியா நல்ல மேய்ப்பராகவும், ஆ) நீதியுள்ள தாவீதின் கிளையாக கூறப்பட்டுள்ளார். இ) ராமாவின் புலம்பல் கூக்குரல் கேட்கப்பட்டது என்ற வார்த்தை குழந்தை இயேசு கொல்ல முயன்றபொழுது நிறைவேறியது.
☀ இதில் அதிகமான வாக்குத்தத்தங்கள் மற்ற தீர்க்கதரிசனம் புத்தகங்களை போல காணமுடியவில்லை. ஆனால் கீர்த்திவாய்ந்த சில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அ. “கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரண வைத்தியனும் அங்கே இல்லையோ?” (8:22) ஆ. “எத்தியோப்பியன் தன் தோலையும், சிவங்கி தன் புள்ளியையும் மாற்றக் கூடுமோ?” (13:23) இ. “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” (17:9) ஈ. “என் வார்த்தை அக்கினியைப் போலவும் கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறது” (23:29) உ. “என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் உண்டோ” (32:17,27) ஊ. “யோசனையில் பெரியவரும் செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்” (32:19) எ. “என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உனக்கு உத்தரவு கொடுப்பேன்” (33:3) ☀ பாபிலோன், நேபுகாத்நேச்சார் குறித்த தீர்க்கதரிசனங்கள் அதிகமாக காணப்படும் புத்தகம் இதுவாகும். (21-29 அதிகாரங்கள்.) ☀ மொத்தம் 52 அதிகாரங்களும், 1364 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 51-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 45-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது. ☀ எசேக்கியேலைப் போல பலவித உவமையையும், அடையாளச் செயல்களையும் எரேமியா உபயோகப்படுத்துகிறார். சணல் கச்சை (13:1-14), மழைத்தாழ்ச்சி (14:1-9), திருமணம் செய்ய தடை (16:1-9), குயவனும் களிமண்டபம் (18:1-11), குயவனின் உடைப்பட்ட கலசம் (19:1-13), அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகள் (24:1-10), அவனுடைய கழுத்தில் பூட்டப்பட்ட நுகம், (27:1-11), அவன் சொந்த ஊரில் நிலம் வாங்குதல் (32:6-15), பார்வோனின் வாசலில் புதைக்கப்பட்ட பெரிய கற்கள் (43:8-13), ☀ எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்த தேசங்கள் - எகிப்து (46:1-28), பெலிஸ்தியா (47:1-7), மோவாப் (48:1-47), அம்மோன் (49:1-6), ஏதோம் (49:7-22), தமஸ்கு (49:23-27), அரேபியா (49:28-33), ஏலாம் (49:34-39), பாபிலோன் (50:1-51:64). ☀ மோசேயை தவிர பூர்வ தீர்க்கதரிசிகளில் வேறு யாரை காட்டிலும் எரேமியாவின் வாழ்க்கை வரலாற்றே நம்மிடம் முழுமையாக உள்ளது.
☀ யூதாவின் கடைசி 5 அரசர்களாகிய யோவாகாஸ், யோசியா, யோயாக்கீம், யோயாக்கீன் (எகொனியா), சிதேக்கியா ஆகியோரின் ஆட்சிகாலத்தில் 40 ஆண்டுகள் அவர் எருசலேமில் தீர்க்கதரிசனம் உரைக்கவேண்டும். (எரே.1:2,3) ☀ பின்பு, சிறைபடுத்தப்பட்டிருந்த யூதர்களின் விக்கிரகாராதனை சம்பந்தமாக அவர் எகிப்தில் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டியிருந்தது. அவருடைய புத்தகம் கி.மு. 580-ல் எழுதி முடிக்கப்பட்டது.
☀ இவ்வாறு எரேமியாவில் அடங்கியுள்ள முக்கியமான காலப்பகுதி 67 ஆண்டுகளாகும். ☀ யூதா தேசத்தின் வீழ்ச்சியுற்ற நிலைமையைக் கண்டு மிகவும் துக்கப்பட்டதால் அவருக்கு “அழுகின்ற தீர்க்கதரிசி” என்ற பட்டம் கிடைத்தது. ☀ இவரது மரணத்தைக் குறித்த இரண்டு விதமான கருத்துகள் உண்டு. 1). அவர் எகிப்தில் வைத்து யூதர்களால் கல்லெறிந்து கொல்லப்பட்டார் என்று தெர்த்துல்லியன் என்பவர் கூறுகிறார். 2). எகிப்திலிருந்து பாபிலோனுக்கு சென்றவர் அங்கு மரித்தார் என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum