சுவிசேஷ தீர்க்கதரிசி – ஏசாயா
Sat Feb 13, 2016 9:09 am
☀ ஏசாயா புத்தகம் மூல மொழியாகிய எபிரேயத்தில் Yeshayahu எனவும், கிரேக்கத்தில் σαΐας (Esaias) எனவும், இலத்தீனில் Isaias எனவும் ஒலிக்கப்படும். ☀ ஏசாயா என்னும் தீர்க்கதரிசி பெயரால் இப்புத்தகம் அழைக்கப்படுவதோடு. ஆசிரியரும் அவரே. ☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 23-வது புத்தகமாக வருகிறது.
☀ ஏசாயா என்ற பெயரின் அர்த்தம் “கர்த்தரின் இரட்சிப்பு” என்பதாகும். ☀ ஏசாயாவின் மனைவி ஒரு தீர்க்கதரிசியும் கூட (ஏசா.8:3). ☀ இவரின் இரு ஆண் பிள்ளைகளின் பெயர்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளன. மூத்தவன் சேயார் யாசூப் இளையவன். மகேர்–சாலால்–ஆஷ்–பாஸ் (ஏசா.7:3, 8:3-4). ☀ யூதாவில் மீகாவும், வடக்கே ஓசியாவும் ஓதேதும் அவருடைய நாளிலிருந்த மற்ற தீர்க்கதரிசிகளாவார்கள். (மீகா1:1, ஓசி.1:1, 2 நா.28:6-9). ☀ இந்த முழு புத்தகத்தையும் ஏசாயாவே எழுதினார் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன. உதாரணமாக, இந்தப் புத்தகத்தின் ஒருமைப்பாடு, ‘இஸ்ரவேலின் பரிசுத்தர்’ என்ற சொற்றொடரால் தெரிவிக்கப்படுகிறது. இந்த சொற்றொடர் 1-39 வரையான அதிகாரங்களில் 12 தடவையும் 40-66 வரையான அதிகாரங்களில் 13 தடவையுமாக மொத்தம் 25 தடவை காணப்படுகிறது.
☀ அப்போஸ்தலன் பவுலும் இந்தப் புத்தகத்தின் எல்லா பாகங்களிலுமிருந்து மேற்கோள்கள் காட்டி, அதை ஒரே எழுத்தாளரே, அதாவது ஏசாயாவே எழுதினார் என குறிப்பிட்டு, இவ்வாறு இந்தப் புத்தகத்தின் ஒருமைப்பாட்டுக்கு சாட்சி பகருகிறார். (ரோமர் 10:16,20,15:12 ஆகியவற்றை ஏசாயா 53:1,65:1,11:1 ஆகியவற்றோடு ஒப்பிடுக.)
☀ கண்டுபிடிக்கப்பட்ட சவக்கடல் சுருள்களில், ஏசாயாவின் தீர்க்கதரிசன சுருளும் அடங்கியிருந்தது. இது இரண்டு “ஏசாயாக்கள்” எழுதினார்கள் என்ற விமர்சகர்களின் கருத்தை இந்தப் பூர்வ சுருள்கள் தவறென காட்டுகின்றன. ஏனெனில் 39-ம் அதிகாரம் எழுதப்பட்டுள்ள பத்தியின் கடைசி வரியில் 40-ம் அதிகாரம் தொடங்குகிறது. இந்த அதிகாரத்தின் முதல் வாக்கியம் அடுத்த பத்தியில் முடிகிறது. இவ்வாறு, நகல் எடுத்தவர், எழுத்தாளர் வேறுபடுவதையோ புத்தகத்தில் ஏதாவது பிரிவு உண்டாவதையோ அறியவில்லை என்பதாக தெரிகிறது.
☀ ஏசாயா "சுவிசேஷ தீர்க்கதரிசி" என்று அழைக்கப்படுகிறார். காரணம் அனைத்து பழைய ஏற்பாட்டு புத்தகங்களிலேயே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தெளிவாகக் கூறியது ஏசாயாவே. ☀ ஏசாயாவின் 66 அதிகாரம் வேதாகமத்தின் 66 புத்தகத்தின் உருவகமாக உள்ளது. ☀ பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்கள் நியாயப்பிரமாணம், பாவம், ஒழுக்கக்கேடு போன்றவற்றை எடுத்துக் காண்பிக்கின்றன. அதே போல் ஏசாயாவின் 39 அதிகாரம் நியாயப்பிரமாணம், பாவம், நியாயத்தீர்ப்பு போன்றவற்றை கூறுகிறார். ☀ அடுத்து 27 புத்தகங்கள் ஆறுதலையும், இயேசு கிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பை கூறுகின்றன. அதுபோலவே ஏசாயாவில் மீதி 27 அதிகாரங்கள் 40-66 வரை மக்களுக்கு ஆறுதலையும், மேசியாவினால் வரும் இரட்சிப்பையும் கூறுகிறது.
☀ வேதாகமம் எப்படி சிருஷ்டிப்பில் துவங்கி பாவத்தில் விழுந்து, இரட்சிப்பில் கடந்து வந்து புதிய வானம், புதிய பூமியில் முடிவடைகிறதோ அதே போல் ஏசாயா புத்தகம் மனிதனில் ஆரம்பித்து பாவம், இரட்சிப்பு, புதிய வானம், புதிய பூமி என்று முடிவடைகின்றது. ☀ ஏசாயாவில் 53-ம் அதிகாரத்தைப் போல் பாவ நிவர்த்தியை குறித்து இவ்வளவு தெளிவாக கூறும் பகுதி வேதத்தின் மற்ற பகுதிகளில் இல்லை. ☀ தேவனுடைய சுபாவம், மகத்துவம், பரிசுத்தம், நீதி, நியாயத்தீர்ப்பு போன்றவை மற்ற புத்தகங்களை காட்டிலும் அதிகமாக விளக்கி காண்பிக்கிறது.
☀ புதிய ஏற்பாட்டில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ள மூன்று புத்தகங்கள் சங்கீதம், உபாகமம், இத்துடன் ஏசாயா இந்த சிறப்பைப் பெறுகிறது. ☀ இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் அவருடைய ஆயிர வருட அரசாட்சி வரை தெளிவாகக் கூறுகிறது. * கிறிஸ்துவின் பிறப்பு — ஏசா 7:4. 9:6 * கிறிஸ்துவின் வாலிபம் — ஏசா 7:15-16 * கிறிஸ்துவின் ஊழியம் — ஏசா 11:2-5 * கிறிஸ்துவின் பாடுகள் — ஏசா 53:4,5,11 * கிறிஸ்துவின் மரணம் — ஏசா 53:4-12 * கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சி — ஏசா 2,11,65 * கிறிஸ்துவின் இரண்டாம் வருகை — ஏசா 26:20-21
☀ இது சங்கீதம், பிரசங்கி, நீதிமொழிகள், உன்னதப்பாட்டு, யோபு போன்ற செய்யுள் புத்தகமாக இல்லாதிருந்தும் ஆங்காங்கே பல பாடல்கள் இப்புத்தகத்தில் காணப்படுகின்றன. அவைகளில் மிகத் தெளிவாக காணப்படும் பாடல்கள் : 1. திராட்சைத் தோட்டத்தைக்குறித்தான பாடல் — 5-ம் அதிகாரம் 2. மீட்கப்பட்டவர்களின் பாடல் — 12-ம் அதிகாரம் 3. மலரும் வனாந்திரத்தின் பாடல் — 35-ம் அதிகாரம் 4. புதுப்பிக்கப்பட்ட மனைவியின் பாடல் — 54-ம் அதிகாரம்
☀ மேசியாவின் மீட்பு மூன்று நிலையில் மிக அழகாக காணப்படுகின்றது: i) மீட்பு வாக்களிக்கப்படுதல் : ஏசாயா 40-48 அதி வரை — இப்பகுதியில் மெய் தேவன் பிரத்தியட்சமாக எடுத்துக்காட்டப்படுகிறார். ii) மீட்பு ஏற்படுத்தப்படுதல் : ஏசாயா 49-57 அதி வரை — இப்பகுதியில் பாடுபடும் மேசியா பிரத்தியட்சமாக எடுத்துக் காட்டப்படுகிறார். iii) மீட்பு அனுபவிக்கப்படுதல் : ஏசாயா 58-66 அதி வரை — இப்பகுதியில் ஆளுகை செய்யும் கர்த்தர் பிரத்தியட்சமாக காட்டப்படுகிறார். ☀ மொத்தம் 66 அதிகாரங்களும், 1292 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 37-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 4,12,20-வது அதிகாரங்கள் சிரிய அதிகாரங்களாகவும் உள்ளது. ☀ இப்புத்தகத்தை புரிந்து கொள்வது சற்றுக் கடினம் என்றாலும் ஏசாயாவின் தீர்க்கதரிசன பார்வையை வைத்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நான்கு இராஜாக்களை வைத்து இந்த தீர்க்கதரிசன பார்வையை பிரிக்கலாம் i) உசியா இராஜாவின் காலத்து தரிசனம் — 1,2-5 அதி வரை ii) யோதாம் இராஜாவின் காலத்து தரிசனம் — 6 அதிகாரம் iii) ஆகாஸ் இராஜாவின் காலத்து தரிசனம் — 7-14:24 அதி வரை iv) எசேக்கியா இராஜாவின் காலத்து தரிசனம் — 14:28-66 அதி வரை ☀ ஏசாயா, எசேக்கியாவின் மகனாகிய மனாசேவின் காலத்தில் அவனால் பட்டத்தியத்தில் இரண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum