இரட்சிப்பு கர்த்தருடையது – யோனா
Sat Feb 13, 2016 8:54 am
மூல மொழியாகிய எபிரேயத்தில் “யோஹ்னாஹ் (Yohnah)” என்று அழைக்கப்படுகிறது. யோனா என்றால் “புறா (Dove)” என்று பொருள்படும். நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 32-வது புத்தகமாக வருகிறது. யோனா, செபுலோன் பிராந்தியத்தில் அமைந்த கலிலேயாவில் உள்ள காத்தேப்பேரில் வாழ்ந்த அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன்.
இவர் காத்தேப்பேர் என்னும் நகரத்தைச் சேர்ந்தவர். (2 இரா.14:25) இந்நகரம் நாசரேத்திலிருந்து நான்கே கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது; சுமார் 800 வருடங்களுக்குப் பிறகு இயேசு கிறிஸ்து வளர்ந்தது இந்த நாசரேத்தில்தான். இஸ்ரவேலின் அரசனான யெரொபெயாம், யோனாவின் மூலம் கர்த்தர் கூறிய வார்த்தையின்படியே அந்தத் தேசத்தின் எல்லையை விரிவாக்கினார் என 2 இராஜாக்கள் 14:23-25 கூறுகிறது.
எனவே ஏறக்குறைய கி.மு. 844-ல் யோனா தீர்க்கதரிசனம் உரைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த ஆண்டில்தான் அரசனாகிய இரண்டாம் யெரொபெயாம் இஸ்ரவேலில் ஆட்சி செய்ய தொடங்கினார். மேலும் அந்தச் சமயம், நினிவேயை தலை நகராககொண்ட அசீரியா இஸ்ரவேல் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகும். கடவுளுடைய இரக்கம் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு மட்டுமே உரியதல்ல, ஏன் இஸ்ரவேலுக்கு மாத்திரமேகூட மட்டுப்பட்டில்லை என இந்தத் தீர்க்கதரிசன பதிவு காட்டுகிறது.
மொத்தம் 4 அதிகாரங்களும், 48 வசனங்களையும் கொண்டுள்ளது. 1-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 2-வது மற்றும் 3-வது அதிகாரங்கள் சிரிய அதிகாரங்களாகவும் உள்ளன. யோனாவை விழுங்கின அந்தப் ‘பெரிய மீன் என்ன வகையான மீனாக இருந்திருக்கும் என்பதைக் குறித்து அதிகமான ஊகிப்பு இருந்திருக்கிறது. ஸ்பர்ம்வேல் என்ற திமிங்கிலம் ஒரு முழு மனிதனை சுலபமாக விழுங்கிவிடும். அதைப்போலவே பெரிய வெண்சுறாவும் கூட விழுங்கிவிடும். என்றாலும், “யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்” என்று மட்டுமே வேதாகமம் கூறுகிறது. (யோனா 1:17)
என்ன வகையான மீன் என்பது குறிப்பிடப்படவில்லை. அது திமிங்கிலமா, வெண்சுறாவா அல்லது அடையாளம் காணப்படாத வேறு ஏதோ கடல் உயிரினமா என்பதை உறுதியாக கூற முடியாது. அது ‘ஒரு பெரிய மீன்’ என்ற வேதாகம பதிவே நமக்கு போதுமானது. ‘மீன்’ என்பதற்கான எபிரேய வார்த்தை, “கடல் மிருகம்” அல்லது “ராட்சத மீன்” என கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் இரவும் பகலும் மூன்றுநாள் இருந்தது, இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் தீர்க்கதரிசனமாகக் காட்டுகிறது. (மத்தேயு 12:39,40;16:21).
நினிவேயில் வாழ்ந்த 1,20,000 ஆட்களுக்காக பரிதபித்ததைப் போலவே இன்றும் “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத” மக்களுக்காக கர்த்தர் பரிதாபப்படுகிறார். நினிவேக்குச் சென்று மக்களை மனம் திரும்பவைக்க ஆண்டவர் யோனாவை நினிவேக்கு போகச் சொன்னபோது, அவர் அதற்கு எதிரான திசையில் ஓடினார். எதிர் திசையிலுள்ள தர்ஷீசுக்கு கப்பலேறி ஓடிப்போகிறார். அது ஸ்பெய்னாக இருக்கலாம் என கருதப்படுகிறது. யோனாவோ நினிவே முழுவதிலும் உள்ள ஜனங்கள் அழிக்கப்பட வேண்டுமேயல்லாமல், அவர்கள் மேல் கர்த்தர் கருணை காட்டக் கூடாது என்பதையே விரும்பியதன் நிமித்தம் கர்த்தரின் இவ் இரக்கச்செயல் அவரை கோபப்படுத்தியது.
நினிவேக்கு தீர்க்கதரிசனத்தை உரைத்தப்பின் அதற்கு நடப்பதையறிய பட்டணத்திற்கு வெளியே காத்திருக்கையில் கர்த்தர், வெப்ப காற்றை ஏற்ப்படுத்தி நிழலுக்காக ஒரு ஆமணக்குச் செடியையும் வளரவிடுகிறார். அச்செடியை ஒரு பூச்சைக்கொண்டு அறிக்க செய்தார் அச்செடி பட்டுப்போனது. தனக்கு நிழல் தந்த அந்த ஆமணக்குச் செடியைப் பார்த்து கவலைக் கொண்ட யோனாவை கர்த்தர் இப்படியாக கேட்கிறார், அதற்குக்கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார். (யோனா 4:10-11).
கடவுள் இரக்கம் காட்டுவதை எந்த மனிதனாலும் தடுக்க முடியாது. நாமும் கூட கர்த்தர் இரக்கம் காட்டும் விதத்தைப் பற்றி குறை சொல்லாதபடி கவனமாய் இருக்கவேண்டும். நினிவே முழுவதிலும் உள்ள ஜனங்கள் மனந்திரும்பி கடவுளில் நம்பிக்கை வைக்கின்றனர். மனிதனும் மிருகமும் உபவாசமிருந்து இரட்டுடுத்த வேண்டுமென்று அரசன் அறிவிக்கிறான். இரக்கமுள்ளவராய் கர்த்தர் அந்த நகரத்தை அழிக்காமல் விடுகிறார். மேலும் அங்குள்ளவர்கள் மனந்திரும்பிய போது இரக்கம் காட்ட தயாராக இருந்தார். இதன் காரணமாகவே, ஏறக்குறைய கி.மு. 632-ல் மேதியராலும் பாபிலோனியராலும் அழிக்கப்படும் வரை 200-க்கும் அதிகமான ஆண்டுகள் நினிவே நிலைத்திருந்தது.
கர்த்தருடைய கட்டளைகளுக்கு இயற்கை அற்புதமாய் செயற்பட்டதை தெளிவாக இப்புத்தகத்தில் காணக்கூடியதாகவிருந்தது. 1. கர்த்தர் ஒரு பெருங்காற்றை அனுப்பினார். (யோனா 1:4). 2. கர்த்தர் யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தினார். (யோனா 1:17). 3. கர்த்தர் யோனாவைக் கரையிலே கக்கும்படி அந்த மீனுக்குக் கட்டளையிட்டார். (யோனா 2:10). 4. கர்த்தர் யோனாவின் தலையின் மேல் நிழல் உண்டாக ஓர் ஆமணக்குச் செடியை முளைக்கச் செய்தார். (யோனா 4:6). 5. கர்த்தர் அந்த ஆமணக்குச் செடியை அழிக்க ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார். (யோனா 4:7). 6. கர்த்தர் ஓர் உஷ்ணமான கீழ்க்காற்றை யோனாவின் மேல் வீசக் கட்டளையிட்டார். (யோனா 4:.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum