கர்த்தரே இரட்சிப்பு – ஓசியா
Sat Feb 13, 2016 9:01 am
☀ இப்புத்தகம் மூல மொழியாகிய எபிரேயத்தில் “ஹோஷையா (Hoshea)” என்றழைக்கப்படுகிறது. ☀ ஓசியா என்பதற்கு “கர்த்தரே இரட்சிப்பு” (Yahweh is salvation) என்று அர்த்தம். ☀ ஓசியா என்ற பெயர் ஓசேயா என்றும் எழுதப்பட்டது. இது யோசுவாவுக்கு முதலாவது கொடுக்கப்பட்டிருந்த பெயர். (எண்.13:16; உபாகமம் 22:44) எப்பிராயிமின் புத்திரன் (1நாளா.27:20) இஸ்ரவேலின் கடைசியான அரசன் (2 இராஜா.15:30; நெகேமியா 10:23) இவர்களும் இதே பெயரைக் கொண்டிருந்தனர்.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 28-வது புத்தகமாக வருகிறது. ☀ உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்ற யூதாவின் ராஜாக்களும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரெபெயாமும் வாழ்ந்த சமகாலத்தில் ஓசியா வாழ்ந்தார். ☀ இந்தப் புத்தகத்திலிருந்து, ஓசியா பெயேரியின் குமாரன் என்பதைத்தவிர அவரைப்பற்றி வேறு எதையும் நாம் அறிந்துகொள்ள முடிவதில்லை. ☀ ஓசியாவினுடைய மனைவி கோமேர் ஒரு விபசாரி. ☀ ஓசியாவின் மனைவி கோமேர் அவனுக்கு உண்மையாயிராதது போல் இஸ்ரவேலரும் தேவனுக்கு உண்மையற்ற ஜனமாக இருந்தார்கள். ☀ ஒரு விபசார ஸ்திரீ கணவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தது போல் இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். ☀ ஓசியா மற்றும் கோமேரின் வாழ்க்கை தெய்வீக - மானிட உறவைக் காண்பிக்கிறது. ☀ ஓசியாவின் மனைவியாகிய “சோரஸ்திரீ” அந்தத் தீர்க்கதரிசிக்கு யெஸ்ரயேல் என்னும் ஒரு குமாரனைப் பெறுகிறாள். பிறகு அவளுக்கு இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றனர்.
☀ “[அவளுக்கு] இரக்கம் செய்வதில்லை” என அர்த்தப்படும் லோருகாமா என்ற ஒரு குமாரத்தி, “என் ஜனமல்ல” என அர்த்தப்படும் லோகம்மீ என்ற ஒரு குமாரனையும் பெறுகிறாள். ☀ கர்த்தர் “இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ் செய்வதில்லை” என்பதைக் குறிக்கவும் அவர்களைத் தம்முடைய ஜனமாக இராதபடி தாம் தள்ளிவிடுவதை அறிவுறுத்தவும் இந்த இரண்டு பெயர்களையும் கொடுத்தார். (1:2,6,9) ☀ ஓசியாவின் மனைவியாகிய கோமேர் முதல் பிள்ளையைப் பெற்ற பிறகு உண்மையற்றவளாகி மற்ற பிள்ளைகளை வேசித்தனத்தில் பெற்றாள் என தோன்றுகிறது. (2:5-7) ☀ முதல் பிள்ளையின் பிறப்பைப்பற்றி குறிப்பிடுகையில், அவள் ‘அவனுக்கு [ஓசியாவுக்கு] ஒரு குமாரனைப் பெற்றாள்’ என பதிவு கூறுகிறது; ஆனால் மற்ற இரண்டு பிள்ளைகளின் பிறப்பு சம்பந்தமாக இந்தத் தீர்க்கதரிசியைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படாமல் இருப்பதால் இது தெளிவாகிறது.
☀ ஓசியா, கர்த்தருடைய தீர்க்கதரிசியாக அதிக காலம் சேவித்தார் என இந்தப் புத்தகத்தின் முதல் வசனம் சொல்லுகிறது. குறைந்த பட்சம் 59 ஆண்டுகளை உள்ளடக்கும். ☀ ஓசியா, இரண்டாம் யெரொபெயாம் மற்றும் எசேக்கியாவின் ஆட்சியில் சில ஆண்டுகளையும் உட்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் காலத்தின் போது ஆமோஸ், ஏசாயா, மீகா, ஓபேத் ஆகியோரும் கர்த்தருடைய உண்மையான தீர்க்கதரிசிகளாக இருந்தனர். (ஆமோஸ் 1:1; ஏசா.1:1; மீகா 1:1; 2 நா.28:9). ☀ இவருடைய தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் இஸ்ரவேலை மட்டுமே குறிப்பிட்டன, இடையிடையே எப்போதாவது யூதா குறிப்பிடப்படுகிறது. ☀ ஓசியா எருசலேமைப் பற்றி கூறவே இல்லை. ஆனால் இஸ்ரவேலின் முதன்மையான கோத்திரமாகிய எப்பிராயீம் பற்றி 37 தடவையும் இஸ்ரவேலின் தலைநகர் சமாரியா பற்றி 6 தடவையும் குறிப்பிடப்படுகிறது. ☀ மொத்தம் 14 அதிகாரங்களும், 197 வசனங்களையும் கொண்டுள்ளது. ☀ 2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 3-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ தினசரி வாழ்க்கையிலிருந்து ஓசியா பல உருவங்களை உதாரணமாக உபயோகிக்கிறார். தேவன் ஒரு கணவனாக தகப்பன், சிங்கம், சிறுத்தை, கரடி, பணி, மழை, விட்டில்பூச்சி - இதுபோன்று பலவிதமாகக் காண்பிக்கப்படுகிறார். ☀ இஸ்ரவேல் ஜனத்தை; மனைவி, நோயாளி, திராட்சப்பழம், ஒலிவமரம், பிரசவ வேதனைப்படும் பெண், காலைப்பணி, புதர், புகை இது போன்று பல வார்த்தைகளினால் சித்தரிக்கப்பட்டுள்ளது. ☀ கடவுளை விட்டு விலகிச் சென்ற இஸ்ரவேல் ஜனத்திற்கு கர்த்தர் தண்டனை வழங்குவார்; ஆயினும் கடவுளின் பேரன்பு இறுதிவரை நிலைத்திருக்கும்; அம்மக்களை அவர் பக்கம் ஈர்த்துக்கொள்ளும்; அதன்மூலம், முறிந்த உறவு மலரும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum