தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இயேசு "யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல்" இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தாரா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசு "யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல்" இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தாரா? Empty இயேசு "யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல்" இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தாரா?

Thu Sep 12, 2013 10:09 pm
இந்தக் கட்டுரையின் நோக்கம் இயேசு பொய் சொல்லவில்லை, அவர் தாம் சொன்னபடியே மரித்து மூன்றுநாள் இரவும் பகலும் கழித்து எழுந்தார் என்று விளக்குவதாகும்.

இயேசுவிடம் யூதர்கள் ஒரு அடையாளம் கேட்டார்கள். அப்பொழுது இயேசு சொன்னார்: மத்தேயு 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

பெரிய வெள்ளி (Good Friday) அன்று அவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்று வேதத்தில் இல்லை. ஓய்வுநாளுக்கு முன்தினம் இறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. 
வெள்ளியன்று (12pm-3pm) அவர் இறந்திருந்தால்: வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு என்று ஒன்றரை நாள்தான் வரும். வாரத்தில் முதலாம் நாள் ஞாயிறு காலையில் கல்லறையில் அவர் இல்லை.

இதைக்குறித்து வாதிடும் மற்ற மதத்தினர்களுக்கு என்னுடைய செய்தி: "இயேசு உயிருடன் எழுந்தார் என்று நீங்கள் நம்புகின்றீர்கள். மகிழ்ச்சிடையகின்றேன்"

இயேசு உயிர்த்தெழுந்தபின்பு சொன்னவை (லூக்கா 24:25-49) :
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

மேலே: "நான் மூன்றாம் நாள் 
மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டியதாயிருந்தது" என்று இயேசு உயிர்த்தெழுந்தபின்பு சொன்னார். எனவே மூன்று நாள் இரவும் பகலும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படியானால் கணக்கின்படி வெள்ளிக்கிழமை இறக்கவில்லை என்றே கூறவேண்டும். காரணம் இயேசு பொய் பேசவில்லை. பொய் பேசவேண்டும் என்று அவர் பேசியிருந்தால் அவர் சிலுவையில் அறையப்படாமலே தப்பியிருக்கமுடியும். அநேக இடங்களில் அவரைக்கொல்லும்படி வகைதேடும்போதெல்லாம் அவர் மறைந்துபோனார். ஆனால் அவர் பூமிக்கு மனிதனாக வந்ததே நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமக்கும்படிதானே. அவர் தேவன், பொய் சொல்லவில்லை.மேலே கூறியபோது புரிந்துகொள்ளமுடியாதவர்களை இயேசு: "விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே" என்று சொன்னார். இயேசு என்னை வெள்ளிக்கிழமையில் சிலுவையில் அறையவில்லை என்று நேரடியாகச் சொல்லாமல், மூன்றாம் நாள் உயிரோடு எழும்பவேண்டியதாயிருந்தது என்றார்.

எது ஓய்வு நாள்?
ஏழாம் நாள் ஓய்வு நாள். ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள் என்றால், 52 ஓய்வுநாட்கள் என்று நாம் முடிவுக்கு வரக்கூடாது. பழைய ஏற்பாட்டில் ஓய்வுநாட்களைப் பார்ப்போம்.
[1] யாத்திராகமம் 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; (இதுதான் 52 தடவை வருடத்துக்கு வரும்). இது போக...
[2] லேவியராகமம் 16:29-31 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே (07/10), சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.

[3] லேவியராகமம் 23:4-8 சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
3A. முதலாம் மாதம் பதினாலாம் தேதி (01/14) அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,
3B. அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே (01/15), கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்
3C. முதலாம் நாள் (01/15) உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
3D. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் (01/21) பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
[4] அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில்கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும். நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; 
[5] லேவியராகமம் 23:24 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி (07/01) எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.[6] லேவியராகமம் 23:34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் (07/15 - 07/21) கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
6A. முதலாம் நாள் (07/15) சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
6B. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் (07/22) உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

{ Repeats [6] லேவியராகமம் 23:39 நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் (07/15) கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு (07/15), எட்டாம் நாளிலும் ஓய்வு (07/22). }

எனவே ஏழாம் நாள் தவிர, பல ஓய்வுநாட்களை நாம் காண்கிறோம். இவைகள் பெரிய ஓய்வு நாட்கள் அல்லது விசேஷித்த ஓய்வுநாட்களாகும் . இவை வழக்கமாய் வரும் ஏழாம் நாளைத் தவிர மாதம் பிறக்கும் தேதியினைப்பொருத்து எந்தக் கிழமையிலும் வரலாம்.

லூக்காவில் வாசியுங்கள்:
லூக்கா 6:1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள். [எத்தனை ஓய்வுநாட்கள் புரிந்ததா? seehttp://www.a4t.org/Sermons/Brown/time_line_calendars.pdf ]

யூதர்களின் வருட அட்டவணையைப் பார்க்கவும். அதில் எங்கெல்லாம் ஓய்வுநாள் என்று பாருங்கள்.
http://www.chabad.org/calendar/view/year.asp?tDate=11/18/2008&mode=j
http://www.chabad.org/calendar/view/year.asp?tDate=11/18/2009
நாள், மணிவேளை, ஓய்வுநாள், இதன் ஆரம்பம், முடிவு:
நாள்: யூதர்களுடைய நாள் சாயங்காலம் துவங்கி, மறுநாள் சாயங்காலம் வரைக்குமாகும். உங்களுக்கு இதுவரை தெரியவில்லையெனில் இப்போது தெரிந்துகொள்ளுங்கள். இங்கே [கலிஃபோர்னியாவில்] என்னுடன் வேலைபார்க்கும் யூதர்களும் எங்களுக்கு நாள் என்பது சாயங்காலம் துவங்கி, அடுத்தநாள் சாயங்காலம் ஆரம்பமாகும் வரை என்றே சொல்கின்றார்கள். வேதாகமத்திலும் ஆதியாகமம் 1 ல் "சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதல் நாள் ஆயிற்று" என்று உறுதிப்படுத்துகின்றது. மேலே கொடுக்கப்பட்டுள்ள யூதர்களின் வருட அட்டவணையும் அப்படித்தான். யூதர்களின் இணையத்தளமும் அதைத்தான் சொல்கின்றது:http://www.jewfaq.org/holiday0.htm

ஓய்வு நாள்லேவியராகமம் 23:32 சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

மணிவேளை: வேதத்தில் ஆறாம் மணிவேளை என்றால் நம்முடைய தற்போதைய நாட்கணக்கின்படி மதியம் 12 மணியாகும், ஒன்பதாம் மணிவேளை என்றால் மாலை 3மணியாகும்.
விளக்கம்: மத்தேயு 20:1-12 அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். மூன்றாம் மணி வேளையிலும் (9am) அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள்; நியாயமானபடி உங்களுக்கு கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், ஆறாம்(12pm) ஒன்பதாம் மணிவேளையிலும்(3pm) அவன் போய் அப்படியே செய்தான். பதினோராம் மணிவேளையிலும்(5pm) அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: ஒருவனும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள். நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். சாயங்காலத்தில் (6pm), திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான். அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு வீட்டெஜமானை நோக்கி: பிந்திவந்தவர்களாகிய இவர்கள் "ஒரு மணி நேரமாத்திரம்" வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.


மூன்று நாள் இரவும் பகலும் கணக்கு எப்படி?
[url=http://www.tamil-bible.com/lookup.php?Book=Leviticus&Chapter=19&Verse=13, 14]யோவான் 19:13,14[/url] பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.. அந்த நாள் "பஸ்காவுக்கு ஆயத்தநாளும்" ஏறக்குறைய ஆறுமணி (12pm) நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
மாற்கு 15:42 ஓய்வுநாளுக்கு முந்தின நாள் "ஆயத்தநாளாயிருந்தபடியால்", சாயங்காலமானபோது, கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
யோவான் 19:30, 31 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
லூக்கா 23:53,54
 அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; [பெரிய] ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
எனவே இயேசு மரித்தது ஆயத்த நாளில்தான். இதில் சந்தேகமே இல்லை.நன்றாக கவனித்தால் அந்த வாரம் இரண்டு ஓய்வுநாட்கள் வருவதைக்காணலாம். மேலே யோவான் எழுதின சுவிஷேசத்தில் 19:30, 31ல் தெளிவான பெரிய ஓய்வு நாள் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஓய்வுநாட்கள் ஒருவாரத்தில் இதற்குமுன் வந்திருக்கின்றது என்பதை லூக்கா 6:1 ல் உங்களுக்கு எடுத்துக் காண்பித்தேன்.

ஓய்வுநாள் ஆரம்பமாவது சாயங்காலம் என்பதை நினைவில்கொண்டுவரவும். எனவே அந்த பெரிய ஓய்வு நாளில் யூதர்கள் வேலை ஒன்றும் செய்யவில்லை.

லூக்கா 23:55,56 [அதற்கு மறுநாள்] கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

இங்கே பரிமளதைலங்களை ஆயத்தம்பண்ணியது ஒருநாள்.
பின்பு கற்பனையின்படியே (as per commandment அதாவது ஏழாம் நாள்) ஓய்ந்திருந்தார்கள், இது அதற்கு அடுத்தநாள்.
மத்தேயு 28:1 ல் "ஓய்வு நாட்களுக்குப் பின்" என்று கூறப்பட்டுள்ளது:Young's Literal Translation:And on the eve of the sabbaths, at the dawn, toward the first of the sabbaths, came Mary the Magdalene, and the other Mary, to see the sepulchre,

கிரேக்க மொழி: 
οψε δε σαββατων τη επιφωσκουση εις μιαν σαββατων ηλθεν μαρια η μαγδαληνη και η αλλη μαρια θεωρησαι τον ταφον 
σαββατωνnoun - genitive plural neuter sabbaton]

அதாவது ஓய்வு நாட்கள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில் [6am என்று வைத்துக்கொண்டால்கூட ஞாயிறுநாள் ஆரம்பித்து சுமார் 12மணிநேரம் ஆயிற்று - அதான் நாள் சாயங்காலம் ஆரம்பமாகின்றதே], மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அங்கே அவர் இல்லை.
எனவே:
புதன்கிழமை - அவர் சிலுவையில் அறையப்பட்டார். அன்றே 3:00pm மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார். [அன்று பஸ்காவுக்கு ஆயத்த நாள்]
வியாழக்கிழமை - "பெரிய ஓய்வுநாள்",
வெள்ளிக்கிழமை - "பரிமளதைலங்கள் ஸ்திரீகள் தயார் செய்தார்கள்",
சனிக்கிழமை - கற்பனையின்படி ஓய்வுநாள்.
இயேசு உயிருடன் எழும்பியது சனிக்கிழமை மாலை அதாவது ஞாயிறு ஆரம்பிக்கும் கொஞ்சம் முன்னே. எப்படியெனில் சாயங்காலம் துவங்கி, சாயங்காலம் வரைக்கும் ஓய்வுநாள் என்று வாசித்தோம். யோவான் 28:1ல் ஓய்வுநாட்கள் முடிந்த சாயங்காலம் என்று வாசித்தோம். அதாவது வாரத்தின் முதல்நாள் ஆரம்பமாகிறது. மரித்த புதன் மாலையிலிருந்து இது மிகச்சரியாக மூன்று இரவுகள் மற்றும் மூன்று பகல்கள், அதாவது 72 மணி நேரம் (24 x 3). மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் சொல்லலாம்.

இதைத்தான் இயேசுவும் உயிர்த்தெழுந்த பின்பு நான் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழவேண்டியதாயிருந்தது என்று [நாம் ஆரம்பத்தில் படித்த பகுதியில்] சொன்னார்.

பெரிய ஓய்வுநாள் வேறொரு பார்வை (யாத்திராகமம் 12:2-8):
"இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் (01/10) தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள். அதை இந்த மாதம் பதினாலாம் தேதி (01/14) வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்" என்று வாசிக்கிறோம்.

இயேசுதான் நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி (I கொரிந்தியர் 5:7 நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே).

எனவே 14ம் தேதி சாயங்காலம் அவர் இறந்தார். 

3A. வில் (01/14) அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும் [ஆயத்த நாள்],
3B, 3C. யில் அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே (01/15), கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையும் இருக்கும் என்று வாசிக்கிறோம். இது பெரிய ஓய்வு நாள். அதாவது இயேசு மரித்து அடக்கம்பண்ணப்பட்ட நாளுக்கு அடுத்த நாள். இதன் பின் ஒரு வேலைசெய்யும் நாள், பின் ஓய்வுநாள் என்று அந்த வருடம் வந்துள்ளது.
"பஸ்கா ஆயத்த நாள் (01/14)" அன்று அவர் இறந்திருக்கிறார் சரி, அவர் சீஷர்களுடன் இராப்போஜனம் எப்போது சாப்பிட்டார்?
யூதர்களுக்குத்தான் நாள் சாயங்காலம் துவங்குகின்றதே, "பஸ்கா ஆயத்த நாள்" துவங்கிய அன்று மாலை சாப்பிட்டார். இரவு காட்டிக்கொடுக்கப்பட்டார். விடிந்து பகலில் (இன்னும் நாள் முடியவில்லை) பஸ்கா ஆயத்த நாள் அன்று சிலுவையில் அறையப்பட்டு, அன்றே அடக்கம்பண்ணப்படுகிறார்.


இயேசு "யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல்" இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தாரா? Daynight
[url][/url]
. அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையிலே மரித்து பின்பு அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார். இதை நாம் விசுவாசிக்கவேண்டும்.


நன்றி: கார்னர் ஸ்டோன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum