யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்:
Thu May 22, 2014 7:03 pm
யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்: 3 இரவு 3 பகல்
************************************************
புனித வெள்ளி அன்று இயேசு மரித்தாரா?
**************************************
கிறிஸ்து மரித்த நாளை வருடாவருடம் புனித வெள்ளியாக அனுசரிக்கிறார்கள். அது வருடாவருடம் வெள்ளிக் கிழ்மை மட்டும்தான் வருமா? இதில் வேடிக்கையும் ஆச்சரியமுமாய் இருப்பது என்னவென்றால் அந்த வருடம் லீப் வருடம் என்றாலும் புனிதவெள்ளி வெள்ளிக் கிழமை தான் வரும். அதை எதன் அடிப்படையில் நிர்ணயம் பண்ணுகிறார்களோ தெரியவில்லை. அதனை வேத வசன அடிப்படையில் ஆராய்வோமா?
நிகழ்வுகள்:
1) நிசான் மாதம் 14ந்தேதி மாலை இயேசுவும் அவருடைய சீடரும் பந்தி இருந்தார்கள். பஸ்கா பண்டிகையை அனுசரித்தார்கள்.மத்26:17,20
2) பந்தி முடித்து அன்றிரவு ஒலிவமலைக்கு போனார்கள். மத்26:30
நாள் என்பது சூரியன் மறைந்தது முதல் தொடங்கும்.
3) ஒலிவ மலையில் மரண வேதனையுற்று ஜெபித்துக் கொண்டிருந்தது இரவு 14ஆம் நாளின் தொடக்கமாகும். அந்த இரவில்தானே இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பிரதான ஆசாரியரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்.
4) விடிந்து வருகிற போது பிலாத்துவினிடத்திற்கு கொண்டுபோனார்கள். யோவா18:28 அது 14ஆம் நாளின் பகலாகும். அன்று மாலை 15 ஆம் நாள் தொடங்குகிறது. ஆசாரியர்கள் தீட்டில்லாமல் பஸ்காவை ஆசரிக்க, அரண்மனைக்குள் பிரவேசியாமல் இருந்தார்கள். ஆதலால் அவர்களிடத்திறுகு பிலாத்து வெளியே வந்து குற்றம் விசாரித்தான். இயேசு மரண தண்டனக்கு ஒப்புகொடுக்கப்பட்ட நேரம் 6ஆம் மணி.( இக்கால வழக்கப்படி 11ஆம் மணி ஆகும்.)
5) 6ஆம் மணி முதல் 9 ஆம் மணிவரை அந்தகாரம் உண்டாயிற்று. லூக் 23:44
இக்கால வழக்கப்படி11a.m to 2.p.m ஆகும்.
9ஆம் மணிநேரத்தில் தமது ஆவியைஒப்புக்கொடுத்து இயேசு மரணத்தை அடைந்தார். இது 14ஆம் நாள் மதியம் 2 மணி. 14ஆம் நாள் முடிய 4மணிநேரம் இருக்கும் முன் இறந்தார்.
இயேசு எப்போது உயிர்த்தார்.?
----------------------------------------------
1) இயேசு மரித்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்த நாள் யோவா19:31
பெரிய ஓய்வு நாள் என்பது என்ன?
பஸ்கா பண்டிகை கூடாரப் பண்டிகை அனுசரிக்கும் வாரத்தில் ஓய்வு நாள் வந்தாள் அது விசேசித்த ஓய்வு நாள். லேவி23:32
2) ஆயத்த நாள் என்பது ஓய்வு நாளுக்கு முன் வரும் நாள் ஆகும். அதாவது 6வது நாள்.மாற்15:42 . இது உடலை இறக்கிய மாலையில் தொடங்குகிறது. நிசான் மதம் 15ஆம் தேதி.
i) 14ந்தேதி 9மணிக்கு இறந்தார். =1பகல்(5வது நாள்)
II) 15ந்தேதி உடல் இறக்கப்ட்டது ஆயத்த நாள்:": = 1 இரவு. 1பகல்.(6வது நாள்)
III) 16ந்தேதி தொடக்கமான மாலை நேரம் ஓய்வு நாள்: =1 இரவு 1 பகல் (இது 7வது நாள்)
6வது நாளான ஆயத்த நாளில் கந்தவர்க்கங்களையும் பரிமளங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படி ஓய்ந்திருந்தார்கள்/ லூக்23:56
IV) ஓய்வு நாள் முடிந்து , முதல் நாளான17ந்தேதி தொடக்கம்=1இரவு
வாரத்தின் முதல் நாள் பகல் தொடங்கும் முன் அதிகாலையில் இருட்டோடே இயேசு உயிர்த்தெழுந்தார்.
3 இரவு 3 பகல் . இதுவே யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்..
மத்12:39. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
மத்12:40. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum