இளைப்பாறுதல் தரும் தேவன்
Thu Feb 04, 2016 8:25 am
...
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். - (ரோமர் 6:22-23).
.
ஒரு குரங்கு கானகத்தில் தன் பாட்டுக்கு மரங்களில் தாவி தாவி விளையாடிக் கொண்டு அங்கு பழுக்கும் பழங்களை சாப்பிட்டு சுகமாக வாழ்ந்து வந்தது. அப்படி ஒரு நாள் மரங்களுக்கு மரம் தாவிக் கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் முன் வந்து நின்றது. அங்கு ஜன்னலில் பார்த்தபோது, ஒரு தட்டில் சில ஆப்பிள் பழங்கள் வைத்திருப்பதைக் கண்டது. உடனே தன் கையை நீட்டி அந்த பழங்களில் மூன்று, நான்கு பழங்களை எடுத்துக் கொண்டது. பின் அதை கைகளில் பிடித்துக் கொண்டே காட்டிற்கு வந்து சேர்ந்தது.
.
அதை கடிக்க முற்பட்டபோது, அதனால் கடிக்க முடியவில்லை. அது கட்டையினால் செய்யப்பட்ட ஆப்பிள்கள். ஆனால் அந்த குரங்கால் அந்த ஆப்பிள்களை கீழே தூக்கிப் போட முடியவில்லை. மற்ற குரங்குகள் வந்து அதை பிடுங்க பார்த்தபோது, அது தன்னிடம் அந்த பழங்களை இழுத்துக் கொண்டு, மற்ற குரங்குகளுக்கு காண்பிக்கவும் மறுத்தது.
.
அந்த பழத்தை எடுத்துக் கொண்டு அதனால் மரத்திற்கு மரம் தாவ முடியவில்லை. பழத்தை கீழே வைத்தால் மற்ற குரங்குகள் வந்து அதை எடுத்துக் கொண்டு விடுமோ என்று பயந்து, தன் கைகளிலேயே அவற்றை வைத்து கொண்டு, வேறு பழங்களையும் சாப்பிட முடியாமல், பசியால் தவித்தது. கையிலிருந்த பழங்களை அதனால் கீழேப் போட அதற்கு மனம் வரவில்லை.
.
ஆனாலும் அந்த பழங்களை கீழே போடாமலும், தளர்ந்து, பசியினால் வாடி, சந்தோஷத்தை எல்லாம் இழந்து அந்த குரங்கு தவித்தது. பக்கத்தில் இருந்த மரத்திலிருந்து பழ வாசனை அதனுடைய மூக்கை துளைத்தது. ஆரம்பத்தில் அந்த வாசனை வந்தும் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்த குரங்கு, இப்போது மிகவும் தளர்ந்துப் போன நிலையின் கடைசியில், கையில் கனத்துக் கொண்டிருந்த அந்த கட்டை பழங்களை கீழேத் தூக்கிப் போட்டு விட்டு, அந்த பழ மரத்தில் தாவி ஏறி, தன் மனம் விரும்பும் மட்டும் பழங்களை சாப்பிட்டு சந்தோஷித்தது.
.
நம்மில் கூட அநேகர் சில பாவ காரியங்களையும், சில தேவையில்லாத காரியங்களையும் சுமந்துக் கொண்டு திரிந்துக் கொண்டிருக்கிறோம். அதனால் நமக்கு வீண் பாரமும், மனக்கவலையும், சோர்வும் வந்தாலும் அதை விட்டு விட மனமில்லாமல், கஷ்டத்தோடு அவற்றை சுமந்துக் கொண்டிருக்கிறோம்.
.
இயேசுகிறிஸ்து அப்படிப்பட்ட காரியங்களை சுமந்து கொண்டிருக்கிறவர்களைப் பார்த்துதான், 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' (மத்தேயு 11:28) என்று அழைக்கிறார். ஆனால் நாமோ இளைப்பாறுதல் தரும் அவருடைய சமுகத்தை விட்டு கடந்து, நம் பாவங்களையும், பாரங்களையும் நாமாகவே சுமந்துக் கொண்டிருக்கிறோம். அவைகளை கர்த்தருடைய சமுகத்தில் விட்டு விட்டு, இளைப்பாறுதலை நாம் பெற்றுக் கொள்ளாமல் போவோமானால் மிகவும் பரிதபிக்கத்தக்கவர்களாக இருப்போம்.
.
ஆனால் அவருடைய கிருபையை சார்ந்துக் கொண்டு பாவங்களையும், நம் அக்கிரமங்களையும் அவரிடம் அறிக்கையிட்டால் அவர் நம்மை பரிசுத்தமாக்கி நித்திய ஜீவனை கொடுப்பார். 'இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்' என்ற வார்த்தைகள் நம் வாழ்வில் நிறைவேறும்.
.
தேவையற்ற சுமைகளையும் நம் பாரங்களையும் அவருடைய பாதத்தில் வைத்து விடுவோம். தம்முடைய கிருபை வரத்தினால் நம்மை அவர் மூடிக் கொள்வார். பாவத்தினின்றும், நம் பாரங்களினின்றும், சுமைகளினின்றும் நம்மை விடுதலையாக்கி நமக்கு இளைப்பாறுதலை தருவார். ஆமென் அல்லேலூயா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum