தேவன் தரும் வேலை வாய்ப்பு
Tue Aug 20, 2013 10:49 pm
1 கொரிந்தியர் 1:27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 28. உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
வேலை : இணையதளம்
முதலாளி: திரியேக தெய்வம்
தகுதி: பைத்தியக்காரர்கள், பலவீனமாவர்கள், இழிவானவர்கள், இல்லாதவர்கள், அற்பமானவர்கள்
பலன்: கலாத்தியர் 6:9 தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
வேலை செய்யும் இடம்: நீங்கள் இருக்கும் இடத்திலேயே
பயன்படுத்தப்படும் கருவி: கைபேசி (mobile phone), கணினி (computer), மற்றும் பல தகவல் தொழில் நுட்ப சாதனங்கள்
நேர்காணல் கடிதம் (interview letter): மத்தேயு 28:20 அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; மாற்கு 16:நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
வேலையின் முக்கியத்துவம்: 1 கொரிந்தியர் 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
வேலை நேரம்: உங்களுக்கு முடிந்த நேரம்... தினமும் அரைமணி, ஒரு மணி நேரமாவது
யார் என்னுடன் வேலை செய்வார்கள்: பரிசுத்த ஆவியானவர்
அடிப்படை: பரிசுத்த வேதாகமம்
ஆதாரம்: இயேசு கிறிஸ்து
எதிரி (Competitor): சாத்தான்
அன்பு சகோதிர சகோதிரிகளே
இந்த செய்தி வலைதளத்தை பயன்படுத்தும் உங்கள் அனைவருக்கும் முக்கியமானது. கவனமாக வாசியுங்கள். உங்கள் மனதில் தேவனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றால் தயவு செய்து உடனே ஆரம்பியுங்கள். சில ஊழிய வாய்ப்புகளை இங்கே பகிர்கிறேன்.
இன்று 90% பேர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். கிராமம், தெருக்கள் எல்லாம் இணையதளமாகி விட்டன. மனிதனின் தொழில்நுட்பம் பலமடங்கு பெருகி விட்டது. இந்த நேரத்தின் பணம், வேலைவாய்ப்பு அதிகமானதால் முழு நேர ஊழியர்களாக வரும் ஆட்களும் குறைந்து விட்டார்கள். ஆனால் தேவனுடைய ஊழியம், சபை வளர்ச்சி, புதிய ஆத்துமாக்கள் இன்றும் குறைந்துபோகவில்லை. ஏன் என்றால் இது பரிசுத்தர் இயேசு கிறிஸ்து ஆரம்பித்தது. அது என்றுமே நின்று விடாது. நாம் சோர்ந்து போகலாம். தேவனின் அநாதி திட்டம் எப்படியும் நிறைவேறும்.
ஊழியம் என்பது நம் அனைவருக்கும் தேவன் கொடுத்திருக்கும் ஓர் அழைப்பு. அதனால் ஊழிய அழைப்பு அனைவருக்கும் உண்டு. அதனை செய்ய நமக்கு தேவன் கொடுத்திருக்கிற வரத்தின்படி, தாலந்தின்படி ஊழியம் செய்யலாம். இவர்கள் தான் ஊழியம் செய்ய வேண்டும் என்று தேவன் எப்பொழுதுமே சொன்னதில்லை. சிலருக்கு வடஇந்தியா ஊழியர்களே உண்மையான ஊழியர்கள் என்று கூறுவார். உண்மை தான்.... அங்கு ஊழிய பாதை மிகவும் கடினமானதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் நாம் செல்லும் ஒவ்வொரு இடமும் மிசனரி பனித்தளம் தான். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நாம் தேவனுக்குக்காக சந்திக்கவேண்டிய ஆத்துமாக்கள். இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுகொண்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும் நிச்சயம் அந்த நல்ல செய்தியை மற்றவருக்கு பகிரவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் மிசனரி தான். சிலர் ஜெபித்து தேவனின் ஊழியத்தை தாங்குவர், சிலர் தேவ செய்தி கொடுப்பார், சிலர் ஆலோசனை வேதத்தின் அடிப்படையிலிருந்து கொடுப்பார், சிலர் புதிய ஆலயங்களை கட்டுவார், சிலர் வேத ஆராச்சியில் ஈடுபடுவார், சிலர் மொழி பெயர்ப்பில் திறமை வாய்ந்தவராக இருப்பார், சிலர் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு மக்களை சேர்ப்பதில் தாலந்து மிக்கவராய் இருப்பார். சிலர் கூட்டங்களுக்கு இடத்தை ஆயத்தம் செய்வதில், சமைப்பதில், கொடுப்பதில், ஜெபிப்பதில் தாலந்து மிக்கவராய் இருப்பார். எப்படியாயினும் நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள்.
என் இல்லத்தில் முதன்முதலாக இணையதள தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. நாம் என்ன செய்தாலும் தேவனுக்கு அதில் சில பங்காவது கொடுக்க வேண்டும் என்பது என் தீர்மானம். அதனால் இந்த தொடர்பை தேவனின் ஊழியத்திற்கு பயன்படுத்த தீர்மானித்தேன். facebook இப்போது அனைவரிடமும் அதிகமாக காணப்படுவதால், முக்கியமாக வாலிப ஆண்கள், பெண்கள், இதை அதிகமாக பயன்படுத்துவதால் இதன் மூலம் பலருக்கு சுவிஷேசம் அறிவிக்கலாம். பலருக்கு கிறிஸ்தவ உண்மைகளை புரியவைக்கலாம், வேதத்தின் அடிப்படை சாரம்சத்தை என்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களிடத்தில் இந்த முகப்புத்தாக வாயிலாக சொல்லலாம் என்று தீர்மானித்து இந்த முகப்புத்தகத்தை ஆரம்பித்தேன்.
இன்று பலவழிகளில் ஊழியம் செய்ய வாய்ப்பு குவிந்து கிடக்கிறது. 50 வருடங்களுக்கு முன் தெருவில் நின்று ஊழியம் செய்தனர். இன்று அது முடியாத காரியம். ஆனால் facebook, google+, twitter, e-mail ,blogger , இலவச குறுஞ்செய்தி வசதிகள் போன்றவற்றை பயன்படுத்தி தேவனுடைய நாமத்தை உலகின் எல்லா பகுதிகளுக்கும் எடுத்து செல்லலாம். நீங்கள் பயன்படுத்தலாமே?
உங்களுக்கு ஊழியம் செய்ய ஆசை உள்ளதா? வைராக்கியம் உள்ளதா? எப்படி அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லையா? உங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், உடன் வேலை செய்வோர் எப்படி இந்த இயேசுவின் மரணத்தை புரிந்து கொள்ளமுடியும்? முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.
facebook - முகப்புத்தகம் மூலம் நீங்கள் தேவனை பகிர்ந்து கொள்ளலாம். இந்த உலகில் உள்ள 95% வாலிபர்கள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக இந்திய தேசத்தின் இதன் வளர்ச்சி அதிகரித்துகொண்டே போகிறது. உங்கள் நண்பர்களும் இதில் அடங்குவர். நீங்கள் ஓர் பகுதியை ஆரம்பித்து (உங்கள் பெயரை குறிப்பிடுவது, குறிப்பிடவிரும்பாதது உங்கள் விருப்பம்). தினமும் வசனம், வேத கருத்துக்கள், அந்த நாளில் உங்களோடு தேவன் பேசியது, சாட்சிகள், கதைகள், போதனைகள், ஜெப குறிப்புகள், சுவிஷேசம், ஆவிக்குரிய வளர்ச்சி, பரிசுத்த வேதாகமம், உங்கள் சபை பெயரில் ஊழியம் என்று பல நிலைகளில் உங்கள் ஊழியத்தை செய்யலாம். இது முற்றிலும் இலவசம். இதன் மூலம் நீங்கள் உலகின் பல பகுதிகளில் உள்ள ஆயிரக்கனக்காருக்கு இயேசுவை சுமந்து செல்ல முடியும்.
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்களில் படைப்புகளை பல மொழிகளில் வெளியிட வேண்டுகோள் வருகிறது. எனக்கு ஆங்கிலம், தமிழை தவிர எந்த மொழியிலும் பேச, எழுத வராத காரணத்தினால் முடியவில்லை. நீங்கள் வேறு மொழிகளில் (மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, உருது, இந்தி, மற்றும் பல) பேச எழுத திறமை பெற்றிருந்தால் இதனை போன்ற படைப்புகளை எங்களை கேட்க்காமலே பிற மொழிகளில் பதிவு செய்யலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இன்னும் blogspot, google+, twitter, e-mail ,blogger , இலவச குறுஞ்செய்தி வசதிகள் போன்றவற்றை பயன்படுத்தி உங்களால் முடிந்த வரை ஊழியம் செய்யுங்கள். இந்த ஊழியம் இணையதளம் இருக்கும் வரை அழியாது. இன்னும் இந்த உலகம் பல ஆயிரக்கணக்கான வருடம் இருடம் இருப்பது தேவனின் சித்தம் என்றால் உங்கள் கருத்துக்கள் அழியாமல் பாதுகாக்கப்படும். நீங்கள் மற்றவர்கள் அறிமுகப்படுத்தும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த படத்தில் பைத்தியக்காரர்கள் தேவை என்று ஏன் எழுதியிருக்கிறேன் என்றால்... சிலர் ஆசைப்பட்டு ஊழியத்தை ஆரம்பித்து பின் சோர்ந்து ஓடிவிடுகின்றனர். அப்படியல்ல.... தேவனுக்கு பைத்தியக்காரர்கள் தேவை. சிலர் பண பைத்தியமாக, காதல் பைத்தியமாக, சினிமா பைத்தியமாக, புகையிலை பைத்தியமாக இருப்பார். அவை இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. பாவமான அற்பமான அசிங்கமான இப்படிப்பட்ட காரியங்களுக்காக இவர்களே பைத்தியமாய் இருக்கும் பொது உயிருள்ள, நம்மைவிட நம்மை அதிகமாக நேசிக்கும் இயேசு கிறிஸ்துவுக்காக பரிசுத்த ஆவியானவரின் துணையோடு எதையாவது செய்யலாமே?
உங்களுக்கு ஆலோசனை வேண்டும் என்றால் எங்களுக்கு எழுதுங்கள். நிச்சயம் நாம் இந்த உலக தொழில்நுட்ப சரித்திரத்தை தேவனுக்காக மாற்றி எழுதுவோம்.
நன்றி:
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum