தேவன் தரும் சமாதானம்
Fri Feb 12, 2016 6:32 pm
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே மாற்கு 4:35-41 இல் உள்ள சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆம், நம் ஆண்டவராகிய இயேசு காற்றையும், கடலையும் அதட்டி அதை ஓயப் பண்ணிய அற்புத சம்பவம் தான்.
அன்று நடந்த இவ் உண்மைச் சம்பவத்தை இன்று நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். நம் வாழ்க்கை என்னும் படகில் நம் கூடவே இயேசு சுவாமியும் பயணம் செய்கின்றனர். நமது வாழ்க்கைப் பயணத்திலே சில வேளைகளில் சுழல் காற்றுகளும் வீசும், வாழ்க்கைப் படகை மூழ்கடிப்பது போன்ற வகையில் அலையலைகளாய் பல பிரச்சனைகள், போராட்டங்கள் ஏற்படும். அன்று அவ் சீஷர்கள் பயந்தது போலவே நாமும் பயந்து, கலங்கி, ஏதும் விபரீதம் நடந்து விடுமோ? மரித்து விடுவோமா? நம் வாழ்க்கை இவ்வளவுதானா? என்று மனம் கலங்கிவிடுவோம். பிரச்சனைகள் பெருகுகின்ற வேளையில் விசுவாசத்தில் தளர்ந்தும் போய் விடுவோம்.
ஆனால், நாம் ஒன்றை மறக்கக் கூடாது என்று சீஷர்கள் அவ் இக்கட்டான சூழ்நிலையில் இயேசப்பாட்ட ஓடி வாறாங்க இயேசப்பா உடனடியாகவே காற்றையும், கடலையும் அதட்டி அமைதலை/ சமாதானத்தை ஏற்படுத்துகின்றார்.
இன்றும் நமக்கு ஒரு பிரச்சனை, கஷ்டம், மனக்குழப்பம், தேவைகள் என்று வருகின்ற போது யாரிடம் போகிறோம்? யாரிடம் பகிர்கிறோம்? நம் விசுவாசத்திற்கு என்ன தான் நடக்கின்றது? ஆம் முதலில் நாம் நாடுவது எமது நண்பரை, அல்லது சகோதரர்களை அல்லது பெற்றோரை, ஆசிரியரை, போதகரை இவ்வாறு நபர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். உலக மனுஷரில் Advice/Help/Solution எல்லாம் ஒரு பூரணமான திருப்தியை அளிக்காது. சிறிது நேரத்திற்கு நன்மையானது போல தோன்றும். ஆனால் நிரந்தரமானதாய் இருக்காது.
இயேசு சுவாமி வேதத்தில் யோவான் 14:27 இல் கூறுகின்றார். ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக.’ ஆம், உலகத்தால் ஒரு விதமான நிரந்தரமற்ற சமாதானத்தை நமக்குத்தர முடியும். ஆனால், இயேசப்பா தரும் நிம்மதி, ஆறுதல், சமாதானம் அவை என்றுமே நிரந்தரமாய் நம்மில் தங்கும்.
அச்சமாதானம் எப்பெடியெல்லாம் கிடைக்கின்றதென்றால் …….
1. பிலிப்பியர் 4:6-7இன் படி நமது விண்ணப்பங்கள் ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினால் தெரியப்படுத்தும் போது;
எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்.
2. சங்கீதம் 119:165 இன்படி வேதத்தை நேசிக்கும் போது: மிகுந்த சமாதானம்.
3. ஏசாயா 26:3 இன்படி உறுதியாய்ப் பற்றிக் கொண்டு வேதனையே நம்பி இருந்தால்; பூரண சமாதானம்
சங்கீதம் 29:11இன் படி கர்த்தர் தாமே உங்களுக்கு சமாதானத்தை அருளி உங்களை ஆசீர்வதிப்பாராக.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum