பயிற்றுவிக்கும் தேவன்
Fri Feb 12, 2016 6:34 pm
எந்தப் பணியைச் செய்யும் போதும் பயிற்சி மிக அவசியமாக இருக்கின்றது. ஆண்டவர் இயேசுவும் பேதுருவை தலைமைத்துவப் பணிக்கு அழைக்கும் போது விதமான பயிற்சிகளை வழங்கியதை நாம் காணலாம். ஆண்டவர் இயேசு பேதுருவை அழைத்து “என் பின்னே வா, நான் உன்னை மனிதர்களைப் பிடிக்கிறவர் ஆக்குவேன்.” எனக் கட்டளை கொடுக்கின்றார். (மத் 4:18) இங்கு நான் என்பது கடவுளை இல்லையேல் அவரால் அனுப்பப்படும் மேசியாவைக் குறிக்கும் பதமாகும். எனவே கடவுளுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து கடவுள் பயமுள்ளவராக வாழ்வதே தலைமைத்துவத்தின் பிராதான இலக்கு என இயேசு கூறுகின்றார்.
கெனசரேத்துக் கடற்கரையில் பேதுரு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் சமயம் அதிக மீன்களைப் பிடித்தமையால் இயேசுவை நோக்கி நான் பாவியான மனுஷன், என்னை விட்டு அகன்று போம் என பேதுரு கூறுகின்றார். இதன் மூலம் கீழ்ப்படிவு, சுயநிலையை உணர்தல் போன்றவை தொடர்பாகப் பேதுருவிற்கு இயேசு பயிற்சி அளிக்கின்றார். மேலும் ஒரு தலைவர் சுயபெலத்தினால் காரியங்களை ஆற்றிவிட முடியாது, மாறாக கடவுள் பெலத்தால் மாத்திரமே ஆற்ற முடியும் என்பதை கடலின் மீது நடக்கும் சம்பவத்தின் மூலம் புகட்டுகின்றார். (மத் 14:25-35). இயேசுவின் சீடர் தமது பணிகளில் துன்பங்களுக்கு முகம் கொடுக்க எப்போதும் ஆயத்தாமாய் இருக்க வேண்டும் என்பதை இயேசு கற்பித்து வந்தார். (மாற்கு 8:33) மேலும் மனித வாழ்வில் எப்போதும் விருப்பமானவைகள் மட்டுமே நடைபெறும் என்று எண்ணிவிடாமல் விருப்பமற்றவைகளுக்கு எவ்வாறு எம்மை தயார்படுத்துவதும் முகம்கொடுப்பதும் என்பதின் முக்கியத்துவத்தை இயேசு கற்பிக்கின்றார்.(யோவான் 21:18). மேலும் பேதுரு இயேசுவோடு நெருக்கமாக வாழ்ந்த வேளைகளில் அவன் தவறு செய்ததை விட அவரை விட்டுத் தூரத்திலே பின் சென்றதன் காரணமாக அவன் தவறு செய்யத் தூண்டப்பட்டான், என இயேசு போதிக்கின்றார். உதாரணமாக மறுரூப மலையில், யவிரூவின் மகளை உயிர்த்தெழச் செய்த சம்பவத்தில் பேதுரு இயேசுவோடு நெருங்கி வாழ்ந்து கொண்டு வந்தார். மாறாக சிலுவை மரண யாத்திரையின் போது அவரை விட்டு பின் சென்றதே அவரின் வீழ்ச்சிக்கு காரணம் என அறிவுரை புகட்டுகின்றார்.
மத்தேயு 26:69-75 ஆகிய பகுதியில் பேதுரு, ஆண்டவர் இயேசுவை மறுதலிக்க மாட்டேன் எனக் கூறியிருந்த போதிலும் பெண்களுக்கு முன்பாக இயேசுவை மறுதலித்த போது இயேசு அவரை உற்றுப் பார்த்த வேளையில் மனங்கசந்து அழுகின்றார். இந் நிகழ்வின் மூலம் இயேசு தவறை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, தவறுக்காக மனம் வருந்தும் மனப்பான்மை, தவறு செய்தவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மைபோன்றவற்றை பேதுருவுக்கு கற்பிக்கின்றார். மேலும் இயேசுவின் மரணத்தை அடுத்து விரக்தியுற்ற பேதுரு இதோ, நான் மீன் பிடிக்கச் செல்லுகின்றேன் எனக் கூறி மீன்பிடிக்கச் சென்றார். எனினும் எத்தகைய மீனும் அவருக்கு அகப்படவில்லை. (யோவான் 21:1-13). இயேசுவின் பிரசன்னம் இன்றி எதையும் செய்ய முடியாது என்ற உண்மையை இயேசு பேதுருவிற்கு கற்பித்துப் பின்னர் அதிக மீன்களை பிடிக்க அவருக்கு உதவி புரிகின்றார். மேலும் இயேசுவின் சீடனாக அல்லது பணியாளனாக அல்லது தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பவனாக மாற விரும்பும் ஒருவர் எல்லாவற்றையும் விட அதிகமாக இயேசுவை நேசிக்க வேண்டும் என்ற கட்டளையை பிறப்பிக்கின்றார். (யோவான் 21:15) இக்கட்டளைக்குப் பேதுரு செவி சாய்த்த சந்தர்ப்பத்தில் இயேசு அவரை நோக்கி ஆடுகளை மேய்ப்பாயாக எனக் கூறிப் பொறுப்பைக் கையளிக்கின்றார்.
எனவே, ஓர் தலைமைத்துவ யாத்திரையில் இயேசு பேதுருவை அழைத்துப் பயிற்றுவித்து பொறுப்பை கையளிப்பதை நாம் இங்கே காணலாம். இதே வகையில் ஆண்டவருடைய அழைப்பிற்கும் அவரால் வழங்கப்படும் பயிற்சிக்கும் நாம் கீழ்ப்படிந்து வாழும் போது அவர் எம்மைத் தலைவர்களாக உயர்த்துவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே எதிர்காலத் தலைவர்களாகிய நாங்கள் இயேசுவின் தலைமைத்துவப் பயிற்சி பாசறையில் அங்கத்தவர்களாக சேர்ந்திட முயற்சிப்போமாக!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum