+92, #90 இப்படி துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வருதா..?ஜாக்கிரதை...!
Sun Mar 10, 2013 9:43 pm
உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும்
நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று
வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய
யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும்
நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால்
கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த
எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி
மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.
அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து
பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன்
சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90
என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள்.
அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில்
வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.
அதனால் இதுபோன்ற
எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும்
செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க
வேண்டாம்
நன்றி: முகநூல்

Re: +92, #90 இப்படி துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வருதா..?ஜாக்கிரதை...!
Mon Mar 11, 2013 12:20 pm
Please share...
மிஸ்டு கால் எண்ணுக்கு அழைப்பவரின்
செல்போனில் வைரஸை செலுத்தி ரகசியங்களை திருடி மோசடி...
சென்னை : மிஸ்டுகால் கொடுத்து அந்த எண்ணை தொடர்பு கொள்ளும்
வாடிக்கையாளர்களின் ரகசியங்களை திருடி மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்களை
பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியை தமிழக போலீசார் நாடி உள்ளனர். தகவல்
தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப செல்போன் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்
போன்கள் வந்தபிறகு, ஆன்லைனில் தகவல் பரிமாற்றம், வங்கி கணக்கு, கிரெடிட்
கார்டு குறித்த விவரங்களை செல்போனிலேயே பதிவுசெய்தல், செல்போன் மூலம் வங்கி
கணக்கை கையாளுதல் என இதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதற்கு தற்போது
ஆபத்து வந்துவிட்டது.
மிஸ்டுகால் கொடுத்து, பின்னர் அந்த
எண்ணுக்கு அழைப்பவர்கள் போனில் இருந்து தகவல்கள் திருடப்படுகின்றன. இந்த
மோசடியில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஒருவரும் சிக்கினார். அவர் சவுதி
அரேபியாவில் வேலை செய்தார். பின்னர், சென்னை வந்து திருமணம் செய்தார்.
புதுமண தம்பதியாய் பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்தனர். அந்தரங்க
விஷயத்தைக்கூட செல்போனில் பதிவு செய்து சேமித்து வைத்தார். சில தினங்களில்
அவருக்கு ஒரு எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்தது.
அந்த எண்ணை
தொடர்பு கொண்டபோது, பீப் சவுண்ட் மட்டுமே ஒலித்தது. அடுத்த வினாடியே அவரது
செல்போனில் பதிவுசெய்து வைத்திருந்த வீடியோ காட்சி, ஆன் லைன் வங்கி கணக்கு
எண், கிரெடிட் கார்டு நம்பர் அனைத்தும் மாயமானது. சில நாட்களில் மனைவியுடன்
இருந்த அந்தரங்க காட்சிகள் இணைய தளத்தில் வலம் வந்தன. இதை கண்டு பதறிய
அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய
குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.
அதில், பரபரப்பு
தகவல்கள் வெளியாயின. இண்டர் நெட் போன் கால் மூலம் நைஜீரிய வாலிபர்கள்
மிஸ்டு கால் கொடுத்து, அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொள்பவர்களின்
செல்போனில் வைரஸை செலுத்தி அனைத்து ரகசிய தகவல் களையும் திருடி இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நூதன மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள் பிடிக்க
போலீசார் வலை விரித்துள்ளனர். ஆனால், இவர்கள் இந்த வகையான மோசடிகளை
வெளிநாட்டில் இருந்து ஆன்லைன் மூலம் செய்வதால் அவர்களை பிடிப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேச போலீசாரின் உதவியுடன் கைது செய்ய
மத்திய குற்றப்பிரிவு போலீசார் களம் இறங்கி உள்ளனர்.
மிஸ்டு கால்
விடுக்கும் எண்ணை திரும்ப தொடர்பு கொள்ளும் போது வாடிக்கையாளர்களின் ஆன்
லைன் வங்கிக் கணக்கு எண் ஒருவகையான சாப்ட்வேர் வைரஸ் மூலம்
திருடப்படுகிறது. திருடப்படும் வங்கிக் கணக்கு எண் மூலம் ஒரு வங்கியில்
இருந்து இன்னொரு வங்கிக்கு வாடிக்கையாளர்களின் பணம் மாற்றப்படுகிறது. சில
நேரங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணை நைஜீரியர்கள் லாக் செய்து அதிர்ச்சி
கொடுக்கின்றனர்.
Dinakaran - News

Permissions in this forum:
You cannot reply to topics in this forum