'மிஸ்டு கால் கட்சி'யின் தில்லுமுல்லு
Thu Apr 23, 2015 12:29 am
பல் இளிக்கும் பா.ஜ. உறுப்பினர் சேர்க்கும் திட்டம்!
'உலகளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை விட அதிக உறுப்பினர் களை கொண்ட கட்சி பாஜக' என்று சமீபத்தில் அறிவித்துக்கொண் டது பா.ஜ.க. காரணம், மிஸ்டுகால் திட்டம் மூலம் உறுப்பினர் களை சேர்த்ததுதான் என்று, தங்களை தாங்களே புகழ்ந்து கொண் டார்கள்.
அதேசமயம் இந்த மிஸ்டுகால் திட்டத்தில் நிறைய தில்லுமுல்லு கள் நடைபெறுவதாக புகார்கள் கிளம்பி வருகின்றன.
உறுப்பினராக சேர்க்கிறோம் என்பதை நேரிடையாக சொல்லாமல், பொய்யான வாக்குறுதிகளை கூறி அப்பாவி மக்களை மிஸ்டு கால் மூலம் தங்கள் கட்சி உறுப்பினர்களாக பா.ஜ.க வினர் மாற்றுவதாக புகார்கள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் மதுரையில் நடந்த சம்பவம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்று சொல்லலாம்.
மதுரை மாநகராட்சியில் 93 வது வார்டில் அமைந்திருப்பது முத்து பட்டி. நடுத்தர மக்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இங்கு சில நாட்களுக்கு முன் நடந்ததை, அப்பகுதியை சேர்ந்த ஆமினா, மாரியம்மாள், லதா, தனலட்சுமி ஆகியோர் நம்மிடம் விவரித்தார்கள்.
‘’ஒருநாள் சாயங்காலம் சில ஆண்களும் பெண்களும் கார்ல வந்து இறங்குனாங்க.
ரெண்டு பொம்பளைங்க வீடு வீடா வந்து, 'எல்லோரும் ஊர்மந்தைக்கு வாங்க, மத்திய அரசு உங்க ஊருக்கு நிறைய திட்டங்களை அறிவிச்சிருக்காங்க, அதையெல்லாம் எப்படி வாங்கனும்னு விளக்கிச் சொல்லப் போறோம்னு சொன்னாங்க. வரும்போது, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, செல்போன் எல்லாத்தையும் கொண்டு வாங்க' என்று கூறிச் சென்றனர்.
ஆனால், உங்களுக்கு மட்டும் மோடியே பணம் கட்டிடுவாரு(???). அடுத்து, கல்யாணம் காதுகுத்து எல்லாத்துக்கும் நீங்க பேங்குல போய் பணம் வாங்கிக்கலாம். இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கணும்னா, உங்க செல்போன்லருந்து நாங்க சொல்ற நம்பருக்கு கால் பண்ணுங்க, அது பேங்குகாரங்களுக்கு போயிடும். அப்பத்தான் உங்க நம்பரை பார்த்து லோனை வீடு தேடி வந்து கொடுப்பாங்க' னு சொன்னாங்க.
கட்சிக்கு ஆள் சேர்க்கிறோம்னு முன்னாடியே சொல்லியிருந்தா விரும்புறவங்க மட்டும் வந்திருப்பாங்க. மத்தவங்க அவங்க சோலியை பார்க்க போயிருப்பாங்க. அதை விட்டு இப்படி ஆசை வார்த்தை சொல்லி எங்களை ஏமாத்தலாமா? ஏன்னா, எங்கள்ல எல்லா கட்சி ஆதரவாளர்களும் இருக்காங்க. அப்படியிருக்கும் போது ஒரு நொடியில கட்சி மாத்தலாமா?’’ என்று புலம்பினார்கள்.
மணி என்பவர், ‘’நான் தேமுதிக கட்சிக்காரங்க. இப்ப நான் பாஜகவில் சேர்ந்துட்டதா மெசேஜ் வந்திருக்கு. என் வீட்டு பெண்களிடம் செல்லை கொண்டு வரச்சொல்லி இப்படி பண்ணிட்டாங்க. இது மோசடி இல்லையா? இவங்க கட்சியில பேர் வாங்க, விவரம் தெரியாத ஜனங்களை இப்படியா ஏமாத்துறது? கொஞ்சம் விட்டிருந்தா ஊர்ல எல்லோரையும் பிஜேபியில மாத்திட்டு போயிருப்பாங்க.
நல்ல வேலை அன்னைக்கு போலீஸ் வந்து எச்சரிச்ச தால இடத்தை காலி பண்ணிட்டாங்க. விவரமான மக்கள் வாழுற தமிழ் நாட்டுலேயே இப்படீனா, விவரமில்லாத வட நாட்டு பக்கம் என்னவெல்லாம் சொல்லி கட்சிக்கு மெம்பர் சேர்த்தாங்களோ?’’ என்றார்.
விசாரித்தபோது பாஜகவின் மாநில துணைத்தலைவர் சுரேந்திரன், மாவட்ட தலைவர் முத்தண்ணசாமி, மகளிர் அணி தலைவி மீனா ஆகியோர் அன்றைக்கு வந்தது என தெரியவந்தது. இவர்கள் இப்பகுதி கிளை நிர்வாகிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், இந்த ஆள்சேர்ப்பு வைபவத்தை நடத்தியுள்ளனர். மாநில துணைத்தலைவர் சுரேந்திரன் சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு கிளம்பி சென்றுள்ளார். அதற்குப்பிறகுதான் இவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கட்சிக்கு மோசடியாக உறுப்பினர் சேர்க்கும் விவரம் காவல்துறைக்கு போக, ஆண்டாள்புரம் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஸ்பாட்டுக்கு வந்து, எச்சரித்து, வழக்கு போடாமல் அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து, 93 வது வார்டு பாஜக தலைவர் பாலமார்த்தாண்டனிடம் கேட்டோம், ‘’இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்போவதை மாவட்ட நிர்வாகிகள் என்னிடம் தெரிவிக்கவில்லை. முறையாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தியிருந்தால் மரியாதையாக இருந்திருக்கும்.
அதை விட்டு லோன் வாங்கித்தறோம், டெபாசிட் பண்றோம்னு ஏழை மக்களிடம் ஆசை வார்த்தைக் கூறி அவங்க அனுமதியில்லாமல் மிஸ்டுகால் கொடுத்து மெம்பர்ஷிப் சேர்த்திருக்காங்க. கட்சிக்குள்ள நல்ல பேரை கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளே டேமேஜ் பண்றாங்க’’ என்று வருத்தப்பட்டார்.
மாவட்டத்தலைவர் முத்தண்ணசாமியிடம் கேட்டோம், ‘’அதெல்லாம் ஒரு பிரச்னையுமில்லை, சிலபேர் சும்மா கிளப்பி விடுறாங்க. நாங்க முறையாகத்தான் உறுப்பினர் சேர்த்து வர்றோம். லோன் தர்றோம், டெபாசிட் போடுறோம்னு சொல்லி யாரையும் சேர்க்கலை. எங்க கட்சிக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கு, அதன்படிதான் செயல்படுறோம். இன்னும் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்த இருக்கிறோம், இஷ்டப்பட்டவர்கள் சேரலாம்’’ என்றார்.
ஆனால், பல பகுதிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமையிடம் தாங்கள் பேர் வாங்க, மக்களிடம் இதேபோல் ஆசை வார்த்தை காட்டி உறுப்பினர் சேர்ப்பதாக புகார்கள் கிளம்பி வருகின்றன. இதை அந்தந்த வட்டார பாஜகவினரே புகாராக கிளப்புகிறார்கள்.
இதே ரீதியில் சென்றால் பா.ஜ.க சேர்த்துள்ள உறுப்பினர்கள் நியாயமான முறையில் சேர்க்கப்பட்டவர்களா? என்று யாராவது நீதிமன்றத்துக்கு செல்லும் நிலை வரலாம்.
- செ.சல்மான்
படங்கள்: ஈ. ஜெ. நந்தகுமார்
நன்றி: விகடன்

கவர்மெண்டு திட்டம் எல்லாமும் நமக்கு கிடைக்கப் போகுதுன்னு ஆசை ஆசையா எல்லா வேலைகளை யும் விட்டுப்புட்டு ஓடினோம். 'வீட்டுக்கு ஒரு லட்சம் லோன், அதுல பாதி மானியம், செல்வமகள் திட்டத் துல மத்த ஊர்லயெல்லாம் புள்ளைய பெத்தவங்கதான் பணம் கட்டணும்.
ஆனால், உங்களுக்கு மட்டும் மோடியே பணம் கட்டிடுவாரு(???). அடுத்து, கல்யாணம் காதுகுத்து எல்லாத்துக்கும் நீங்க பேங்குல போய் பணம் வாங்கிக்கலாம். இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கணும்னா, உங்க செல்போன்லருந்து நாங்க சொல்ற நம்பருக்கு கால் பண்ணுங்க, அது பேங்குகாரங்களுக்கு போயிடும். அப்பத்தான் உங்க நம்பரை பார்த்து லோனை வீடு தேடி வந்து கொடுப்பாங்க' னு சொன்னாங்க.
இதை நம்பி நாங்களும் மை வச்ச ஆளுங்க மாதிரி செல்போனை அவங்க கையில கொடுத்து பார்த்தா, கொஞ்ச நேரத்துல எங்களுக்கு அதுல எஸ்.எம்.எஸ். வந்தது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்ததால எங்களுக்கு அதுல என்ன போட்டுருக்குன்னு புரியலை. செல்போன் இல்லாத பொம்பளைங்க வெளியில போயிருந்த அவங்க புருஷன்மாரு, புள்ளைகளோட செல்போனை வாங்கிட்டு வந்து கொடுத்துச்சுங்க, ஆம்பளையாளுங்க திரண்டு வந்தபிறகுதான் இது லோன் தரதுக்கு இல்லை. அவங்க கட்சிக்கு ஆளு சேர்க்கிறதுன்னு தெரிஞ்சது.
கட்சிக்கு ஆள் சேர்க்கிறோம்னு முன்னாடியே சொல்லியிருந்தா விரும்புறவங்க மட்டும் வந்திருப்பாங்க. மத்தவங்க அவங்க சோலியை பார்க்க போயிருப்பாங்க. அதை விட்டு இப்படி ஆசை வார்த்தை சொல்லி எங்களை ஏமாத்தலாமா? ஏன்னா, எங்கள்ல எல்லா கட்சி ஆதரவாளர்களும் இருக்காங்க. அப்படியிருக்கும் போது ஒரு நொடியில கட்சி மாத்தலாமா?’’ என்று புலம்பினார்கள்.
மணி என்பவர், ‘’நான் தேமுதிக கட்சிக்காரங்க. இப்ப நான் பாஜகவில் சேர்ந்துட்டதா மெசேஜ் வந்திருக்கு. என் வீட்டு பெண்களிடம் செல்லை கொண்டு வரச்சொல்லி இப்படி பண்ணிட்டாங்க. இது மோசடி இல்லையா? இவங்க கட்சியில பேர் வாங்க, விவரம் தெரியாத ஜனங்களை இப்படியா ஏமாத்துறது? கொஞ்சம் விட்டிருந்தா ஊர்ல எல்லோரையும் பிஜேபியில மாத்திட்டு போயிருப்பாங்க.
நல்ல வேலை அன்னைக்கு போலீஸ் வந்து எச்சரிச்ச தால இடத்தை காலி பண்ணிட்டாங்க. விவரமான மக்கள் வாழுற தமிழ் நாட்டுலேயே இப்படீனா, விவரமில்லாத வட நாட்டு பக்கம் என்னவெல்லாம் சொல்லி கட்சிக்கு மெம்பர் சேர்த்தாங்களோ?’’ என்றார்.
விசாரித்தபோது பாஜகவின் மாநில துணைத்தலைவர் சுரேந்திரன், மாவட்ட தலைவர் முத்தண்ணசாமி, மகளிர் அணி தலைவி மீனா ஆகியோர் அன்றைக்கு வந்தது என தெரியவந்தது. இவர்கள் இப்பகுதி கிளை நிர்வாகிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், இந்த ஆள்சேர்ப்பு வைபவத்தை நடத்தியுள்ளனர். மாநில துணைத்தலைவர் சுரேந்திரன் சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு கிளம்பி சென்றுள்ளார். அதற்குப்பிறகுதான் இவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கட்சிக்கு மோசடியாக உறுப்பினர் சேர்க்கும் விவரம் காவல்துறைக்கு போக, ஆண்டாள்புரம் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஸ்பாட்டுக்கு வந்து, எச்சரித்து, வழக்கு போடாமல் அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து, 93 வது வார்டு பாஜக தலைவர் பாலமார்த்தாண்டனிடம் கேட்டோம், ‘’இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்போவதை மாவட்ட நிர்வாகிகள் என்னிடம் தெரிவிக்கவில்லை. முறையாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தியிருந்தால் மரியாதையாக இருந்திருக்கும்.
அதை விட்டு லோன் வாங்கித்தறோம், டெபாசிட் பண்றோம்னு ஏழை மக்களிடம் ஆசை வார்த்தைக் கூறி அவங்க அனுமதியில்லாமல் மிஸ்டுகால் கொடுத்து மெம்பர்ஷிப் சேர்த்திருக்காங்க. கட்சிக்குள்ள நல்ல பேரை கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளே டேமேஜ் பண்றாங்க’’ என்று வருத்தப்பட்டார்.
மாவட்டத்தலைவர் முத்தண்ணசாமியிடம் கேட்டோம், ‘’அதெல்லாம் ஒரு பிரச்னையுமில்லை, சிலபேர் சும்மா கிளப்பி விடுறாங்க. நாங்க முறையாகத்தான் உறுப்பினர் சேர்த்து வர்றோம். லோன் தர்றோம், டெபாசிட் போடுறோம்னு சொல்லி யாரையும் சேர்க்கலை. எங்க கட்சிக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கு, அதன்படிதான் செயல்படுறோம். இன்னும் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்த இருக்கிறோம், இஷ்டப்பட்டவர்கள் சேரலாம்’’ என்றார்.
ஆனால், பல பகுதிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமையிடம் தாங்கள் பேர் வாங்க, மக்களிடம் இதேபோல் ஆசை வார்த்தை காட்டி உறுப்பினர் சேர்ப்பதாக புகார்கள் கிளம்பி வருகின்றன. இதை அந்தந்த வட்டார பாஜகவினரே புகாராக கிளப்புகிறார்கள்.
இந்த பிரச்னை இங்கு மட்டுமல்ல, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலளார் முத்தரசனுக்கு பாஜகவில் சேர மிஸ்டுகால் கொடுக்கும்படி எஸ்.எம்.எஸ். மூலம் அப்ரோச் செய்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், அக்கட்சியின் இன்னொரு மாநில நிர்வாகியை மெம்பராக்கி விட்டதாக உறுப்பினர் எண் அனுப்பியிருக்கிறார்கள். இதை சென்னை போலீசில் புகார் செய்துள்ளனர் தோழர்கள்.
இதே ரீதியில் சென்றால் பா.ஜ.க சேர்த்துள்ள உறுப்பினர்கள் நியாயமான முறையில் சேர்க்கப்பட்டவர்களா? என்று யாராவது நீதிமன்றத்துக்கு செல்லும் நிலை வரலாம்.
- செ.சல்மான்
படங்கள்: ஈ. ஜெ. நந்தகுமார்
நன்றி: விகடன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum