கால் ஆணிக்கு சிகிச்சை
Fri Aug 08, 2014 10:19 pm
பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.
அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
கால் ஆணி ஏற்படக் காரணம் :
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.
கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ம் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.
காலுக்குப் பொருந்தாத சிறிய அள வு செருப்புகளைப் பயன்படுத்தவ தாலும், வெறும் காலில் நடப்பதா லும் கூட கால் ஆணி ஏற்படும்.
கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.
கால் ஆணிக்கு உரிய சிகிச்சை :
(1) வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்.
(2) கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக் கும் இடங்களில் தடவி வரவும்.
(3) அம்மான் பச்சரிசி செடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தச் செடியை உடைச்சு, அதில் இருந்து வரும் பாலை எடுத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகும்.
(4) மருதாணி இலை கொஞ்சம், மஞ்சள் துண்டு கொஞ்சம் இரண்டையும் எடுத்து நன்றாக மையாக அரைக்கவேண்டும் . ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு தூங்குவதிற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்தால் குணமாகிவிடும்.
(5) இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.
(6) மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.
பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.
(7) மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
நன்றி: இன்று முதல் தகவல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum