மிஸ்டு கால் கட்சியின் காமெடி
Mon May 11, 2015 7:00 am
டிமிடித் பெட்கோவ்ஸ்கி
சமீபத்தில் ஒரு நேரலை நிகழ்ச்சிக்காக சேனல் ஒன்றிற்கு சென்ற போது காதில் விழுந்த செய்திகள்:
1. சேனல் தயாரித்த ஒரு நிகழ்ச்சியை ஒரு விளம்பரத்திற்காக பெரிது படுத்தி, சில குள்ள நரிகள், பின் புலத்தில் இருந்து இயக்கி, எதிர்ப்பு தெரிவித்தனர். சேனல்காரர்களும், ஒளிபரப்பை கைவிட்ட நிலையில், செத்த பாம்பை அடிக்கும் வேலையில் சில சில்லறை அல்லக் கைகள் ஈடுபட்டு, சேனல் வாசலில் டிஃபன் பெட்டியில் ஓலைப் பட்டாசை வைத்து தங்க்ளை தீவிரவாதிகளுக்கு இணையாகக் காட்டிக் கொள்ள நினைத்து வசமாக போலிஸில் மாட்டிக் கொண்டு இன்று வழக்கு வியாஜ்ஜியம் என்று தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
2. குள்ள நரிக் கும்பல் அத்துடன் விட்டு விடாமல், சேனலுக்கு மேலும் தொல்லை தரும் நோக்கத்துடன், அந்தக் கட்சியின் பேச்சாளர்களை இனி சேனலின் விவாதங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று எழுதப் படாத ஒரு எச்சரிக்கையை பேச்சாளர்களுக்கு விதித்தது. ஆனால் இது பற்றி அக்காவோ, மத்திய அமைச்சரோ ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். இது குறித்து மத்தியில் கட்சித் தலைமையிடம் இருந்து சேனலைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை வந்திருந்தும், 'புதுக் கோட்டை சரவணன்' தனது அல்லக் கைகளை விட்டு மீண்டும் குழப்பம் செய்து கொண்டிருந்தது.
3. ஆனால் இதெற்கெல்லாம் அசராத சேனல், தனது பாணியை சற்றே மாற்றி, சேனலுக்குத் தேவையான பேச்சாளர்களை, கட்சிக்கு அப்பால் நடு நிலைமையோடு செயல் பட்டுக் கொண்டிருக்கும் பல பேரை, தனது புதிய பேச்சாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டதும், பேதியடித்தது த நா தலைமைக்கு. இந்த நிலை நீடித்தால், மற்ற சேனல்களும் இதே உத்தியைக் கையாண்டு, எங்கே தாங்களை புறக்கணித்து விடுவார்களோ எனும் பயத்தில், சேனலுக்கு ஒரு குழுவை, தூதாக அனுப்பினார்களாம்.
4. தூதுக் குழு சேனல் நிறுவனத்தை சந்தித்து, 'உங்களை நாங்கள் மன்னித்து விட்டோம். இனிமேல் எங்களையும் அழையுங்கள்' என்று வடிவேல் காமெடி போலப் பேசியதை சேனலின் லைட் பாய் முதல் நிறுவனர் வரை சிரித்து மகிழ்ந்தார்களாம். 'நீங்கள் யார் மன்னிக்க? மன்னிப்பு கேட்க வேண்டியதே நீங்கள்தானே?' என்று சேனல் சொல்ல, 'பேக்கரியை அடகு வைக்க' வந்த கோஷ்டி வெட்கப் பட்டு 'சரி சரி...இதை வெளியில் சொல்லாதீர்கள்' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாம்.
5. இதற்கு உச்ச கட்டமான ஒரு காமெடி வடிவேலையும் தூக்கி சாப்பிடும்படி தூதுக் குழு செய்ததாம். அதாவது, ஒரு அக்ரிமெண்டை சேனலிடம் கொடுத்து கையெழுத்து இடும்படி சொன்னதாம். அந்த அக்ரிமெண்டில், இனி இது போல நிகழ்ச்சிகளை செய்ய மாட்டோம் என்றும் வழக்குகளை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்றும் எழுதப் பட்டு இருந்ததாம். சேனல்காரர்கள் இந்தக் கூத்தை கைகொட்டிச் சிரித்து 'அக்ரிமெண்ட் நாங்க தானே கொடுக்கணும், நீங்க வடிவேலையும் மிஞ்சிட்டீங்களே' என்று கூறி வாசலைக் காட்டி வெளியே அனுப்பி வைத்தனராம்
தூதுக் குழு 'ஆசீர்வாதம்' கிடைக்கும் என்று 'நம்பி' ச்சென்ற தலைகளை சேனல் துப்பாத குறைதான்.
வேலியில் போகும் ஓனாணைப் பிடித்து வயிற்றில் விட்டுக் கொண்ட காமெடியை இப்போது எல்லாச் சேனல்களும், 'அட அப்பிரண்டிஸுங்களா, காமெடி எப்பிடி செய்யறதுன்னு, பார்த்துக் கத்துக்கங்கடா...' என்று சொல்லி வருகிறதாம்.
கட்சியை வளர்க்க துப்பு இல்லை, ஊடகங்களைப் பகைத்துக் கொண்டு கொஞ்ச நஞ்ச மக்கள் தொடர்பையும் துண்டிக்க நினைக்கும் இந்த அல்லக்கைகளின் அலம்பல் பொறுக்க முடியவில்லை என்று அந்த கட்சியின் சார்பாக பேச வந்த பெரியவர் என்னிடம் வருத்தப் பட்டார்.
தாலி பற்றிப் பேச தகுதியே இல்லாத கும்பல். தாலிக்கு அத்தனை மரியாதை கொடுப்பவர்கள் என்றால், பாதலர் தினத்தன்று கழுதைக்கும் நாய்க்கும் தாலி கட்டி தாலி மஹிமையைக் காத்த வீரர்கள் அல்லவா இந்த கும்பல். தாலி பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை?
போகட்டும் விடுங்க பாஸ். யாரையோ காட்டி இல்லை இவிங்க ஓட்டு வாங்கறாங்க... சொந்த முயற்சியில் கட்சியை வளர்த்து டெபாசிட்டாவது வாங்கிக் காட்டட்டும். அப்புறம், நான் முருகனுக்கே மொட்டை அடிக்கிறேன்.
# ஓகே ஓகே.... காலேஜ் அட்மிஷன் சீசன் தொடங்கியாச்சு..... அந்த சேனல் நிறுவனரிடம் பிச்சை எடுத்து மெடிகல், இஞ்சினியரிங்க் சீட் வாங்கி வித்து, காசு பண்ண தயாரா இருக்கீங்க இல்லை கட்சியின் தன்மானத் தலைவர்களே?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum