தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சர்ச்சில் தூக்கம் வருதா? – அதை தவிர்க்க Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்ச்சில் தூக்கம் வருதா? – அதை தவிர்க்க Empty சர்ச்சில் தூக்கம் வருதா? – அதை தவிர்க்க

Tue Feb 02, 2016 2:29 pm
ஆதி கிறிஸ்துவ சபையின் நாட்களில் இருந்தே, கிறிஸ்தவ மக்களை தூக்கம் தொந்தரவு செய்து வருகிறது. பவுலின் பிரசங்கத்தை கேட்டு தூங்கி விழுந்து ஒருவர் இறந்ததாக கூட (அப்போஸ்தலர்:20.9) வேதத்தில் காண்கிறோம். ஆவிக்குரிய தூக்கம் ஒருபுறம் இருக்க, சரீரத்திலும் தூங்குவது இன்னும் பெரிய பிரச்சனையாக மாறுகிறது.

தேவாலயத்திற்கு நாம் தூங்குவதற்காகவா செல்கிறோம்? என்ற ஒரே கேள்வியில், “இல்லை” என்ற பதில் நமக்கு கிடைத்துவிடுகிறது. இந்நிலையில் தேவாலயத்தில் நமக்கு தொல்லை தரும் தூக்கத்தை எப்படி எதிர்கொள்வது?

அனுபவித்தது:

எனக்கு வெளியூரில் வேலை கிடைத்த போது, அங்கு நைட்ஷிட் பணியில் அமர்த்தப்பட்டேன். சனிக்கிழமை நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு, தூக்கமின்றி ஞாயிற்றுக்கிழமை ஆராதனை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.



மற்ற நாட்களில் காலையில் தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்ததால், ஞாயிறு ஆராதனைக்கு சென்றாலும் தூக்கத்திலேயே கழிந்தது. இதனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் பின்வாங்க தொடங்கினேன். ஒரு கட்டத்தில் மனதில் மிகவும் பாரத்தோடு ஞாயிறு ஆராதனைக்கு செல்வதை தவிர்த்துவிடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால் என்னை மீண்டும் நிலைநிறுத்த விரும்பிய தேவன், ஒரு கிறிஸ்தவ நண்பரின் ஆலோசனையின் மூலம் அந்த ஆவிக்குரிய பதற்றத்தில் இருந்து மீட்கப்பட்டேன். அதன்பிறகு தேவன் உணர்த்திய சில காரியங்கள் மூலம், ஆராதனையில் இன்று வரை தூங்காமல் இருக்க தேவன் எனக்கு உதவி செய்கிறார். அவை நம் வாசகர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

ஆராதனையில் தூக்கத்தை தவிர்க்க சில யோசனைகள்:

1. சனிக்கிழமை நைட்ஷிப் செல்ல வேணடியதாக இருந்தால், அன்று பகல் நேரத்தில் சற்று அதிக நேரம் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். இதனால் உடல் களைப்பு நீங்கும். இதற்காக சனிக்கிழமைகளில் துணி துவைப்பு, பொருள் வாங்க கடைகளுக்கு சென்று அலைவது, கடினமான வேலைகளை செய்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

3. பொதுவாக சனிக்கிழமைகளில் தான் அதிகமான பாவ எண்ணங்கள், சிந்தனைகள், யோசனைகள் வரும். ஏனெனில் இதன்மூலம் அடுத்த நாள் ஆராதனையில் பிசாசு, உங்களை எளிதில் வீழ்த்த முடியும். எனவே சனிக்கிழமைகளில் கிடைக்கும் நேரங்களில் நன்றாக ஜெபிக்க வேண்டும்.

4. அந்த வாரத்தில் நமக்குள் வந்துள்ள குறைகள், குற்றங்களை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு, சனிக்கிழமைகளில் ஒரு ஆவிக்குரிய சுத்திகரிப்பை பெற்று கொள்ள வேண்டும்.

5. தூக்கத்தை அளிக்கும் பிசாசின் வல்லமைகளை எதிர்த்து, ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டும். ஏனெனில் நாம் என்ன தான் உடலில் களைப்பின்றி போனாலும், பிசாசு நம் ஆவியில் சோர்ந்து போக செய்துவிடக் கூடாது.

6. ஆராதனைக்கு விருப்பமின்றி செல்லும் பழக்கத்தை தவிர்த்து, தேவ சமூகத்திற்கு செல்கிறோம், இன்று தேவன் நமக்கு ஒரு பெரிய ஆசீர்வாதத்தை வைத்திருப்பார் என்ற விசுவாசத்துடனும், விருப்பத்துடனும் செல்ல வேண்டும்.

7. பாட்டு பாடும் நேரத்தில் தூக்கம் வந்தால், கைகளை தட்டி உற்சாகத்துடனே பாடுங்கள். மேலும் பாட்டின் வரிகளை புரிந்து கொண்டு பாடலாம்.

8. ஆராதனையின் பிரசங்க நேரத்தில் தூக்கம் வருவதாக இருந்தால், பிரசங்கத்தை அப்படியே ஒரு நோட்டில் எழுதி விடுங்கள். இதன்மூலம் நமது கவனமும் சிதறாது. அதேபோல அந்த நோட்டை திரும்ப பார்க்கும் போது, பிரசங்கத்தின் முக்கிய பகுதிகள் நமக்கு நினைவுக்கு வரவும் எளிதாக இருக்கும்.

9. ஆராதனையின் துவக்கம் முதல் முடிவு வரையுள்ள எல்லா பகுதிகளையும் விருப்பத்தோடு கவனியுங்கள். பக்கத்தில் உள்ளவர்கள் செய்யும் காரியங்களையும், வேறு யாராவது தூங்கினாலோ கூட கவனிக்காதீர்கள். கவனத்தை சிதறவிட்டால் கூட, நமக்கு தூக்கம் வரலாம்.

10. ஆராதனை நேரத்தில் அலுவலகம், வீடு, வியாபாரம், நண்பர்கள் என்ற மற்ற காரியங்களை குறித்து யோசிக்காதீர்கள். உங்களை முழுமையாக தேவனுக்கு ஒப்புக் கொடுத்து, முழு இதயத்தோடு தேவனை ஆராதனை செய்யுங்கள்.

மேற்கூறிய காரியங்களை பின்பற்றி, ஞாயிற்றுக் கிழமை ஆராதனைகளில் தூங்குவதை தவிர்க்க, தேவன் எனக்கு உதவி செய்தார். மேலும் மற்ற பலருக்கும் இதை கூறிய போது, அவர்களுக்கு பயனுள்ளதாகவும், பெரிய ஆசீர்வாதத்தையும் கொண்டு வந்தது. எனவே ஆராதனையில் தூக்கம் வந்து கஷ்டப்படும் யாராக இருந்ததாலும் இந்த குறிப்புகள் பயன்படும் என்று நம்புகிறேன்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum