சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது - ஏன் தெரியுமா?
Mon Feb 23, 2015 6:25 am
சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது நாம் அறிந்ததே. அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
அவர்கள் தலைமுடியை வெட்டுவதில்லை. தலைப்பாகைக்கென விற்கும் தனிப்பட்ட நீண்ட துண்டுகளிலேயே அவற்றைச் செய்து தம் தலையில் அணிவார்கள். அத்தலைப்பாகை மிக உயர்ந்த மரியாதைக்குரிய மதச் சின்னமாகப் போற்றப்படுகிறது. இறைவன் அளித்த பரிசான தலை முடியை வெட்டி அழகு படுத்துவது சீக்கிய மதக் குறிப்புகளின் படி குற்றமாகும்.
தலைப்பாகையை எடுத்து அதற்குரிய இடத்திலேயே வைப்பர். அது கீழே விழுந்தாலோ, கால் பட்டாலோ அபசகுனமாகக் கருதுவர்.
அதற்கு மரியாதை தரும் நிமித்தமாகவே, அவர்கள் ஸ்கூட்டர், பைக்குகளில் செல்லும்போது ஹெல்மெட் உபயோகிப்பது கிடையாது.
உண்மையான சீக்கியனின் உடலில் ஐந்து பொருட்கள் (ஐந்து K) இருக்க வேண்டியது மிக அவசியம். அவை:
1. கேஸ் (தலைமுடி)
2. கங்கா (சீப்பு)
3. கடா (இரும்பு வளையம்)
4. கிர்பான் (சிறுகத்தி)
5. கச்சா (ஐட்டி).
இவை தீய எண்ணங்களான காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம் இவைகளை நீக்கி ஒரு சீக்கியன் வாழ வேண்டும் என்பதைக் குறிப்பதாக சீக்கிய மத நூல் உரைக்கிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum