உங்களுக்கு தெரியுமா ஹர்த்தால்
Wed Jun 17, 2015 8:06 am
உங்களுக்கு தெரியுமா ஹர்த்தால்
சுதந்திரப் போராட்ட காலத்தில் 'ஹர்த்தால்' என்ற வார்த்தை அடிக்கடி அடிபட்டது. பொதுமக்கள் அந்நிய அரசாங்கத்திடம் தங்கள் கண்டனத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்த, தாங்கள் நடத்தும் கடைகளையும் காரியாலயங்களையும் மூடுவதைத்தான் 'ஹர்த்தால்' என்ற வார்த்தை குறிப்பிட்டு வந்தது.
இந்திய மக்களை என்றுமே அடிமைகளாக வைத்திருக்கக் கொண்டு வரப்பட்ட 'ரௌலத் சட்ட'த்தை எதிர்த்து காந்திஜி ஆரம்பித்த இயக்கத்தை ஆதரித்து, நாடெங்கிலும் கடைகள் அடைத்து 'ஹர்த்தால்' முதன்முறையாக அனுஷ்டிக்கப்பட்டது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, சைமன் கமிஷன் பகிஷ்காரம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தியாகிகள் தூக்கிலிடப்பட்டது இவற்றையட்டி நாடெங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
முன்பெல்லாம், எல்லாக் கடைகளையும் அடைக்கச் செய்யவேண்டும் என்றால், ஒவ்வொரு கடையின் பூட்டிலும் ஒவ்வொரு எலும்புத் துண்டைச் செருகி வைத்துவிடுவது வழக்கமாம். அப்படி எலும்புத் துண்டு இருப்பதைப் பார்க்கும் கடைக்காரர்கள், அன்று கடையையே திறக்க மாட்டார்களாம். 'ஹட்' என்ற இந்தி வார்த்தை எலும்பையும், 'தால்' என்ற இந்தி வார்த்தை பூட்டையும் குறிப்பிடுவன. அதனால்தான், கடையடைப்புக்கு 'ஹர்த்தால்' என்ற பெயர் வந்தது.
பின்னர், இந்த எலும்பு சம்பந்தப்பட்ட அனாசார வார்த்தையை உபயோகிக்க விரும்பா மல், 'அந்தந்தக் காரியத்தை அப்படியே அப்படியே போடு' என்று பொருள்படும் 'கார் பார் பந்த்' என்ற வார்த்தையையே ஹர்த்தாலுக்குப் பதில் உபயோகிக்கத் தொடங்கினர்.
- விகடன் பொக்கிஷம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum