இயற்கையின் ஆயுதம் எது தெரியுமா?
Thu May 12, 2016 9:59 am
- Share
யாரையாவது திட்டவேண்டுமெனில், “புறம்போக்கு, நீ ஒண்ணுத்துக்குமே லாயக்கு இல்ல. எதுக்காவது உதவறியா?" என திட்டி தீர்க்கிறோம். உண்மையில் புறம்போக்கு நிலத்தால் எந்த பயனும் கிடையாதா?
'பயிர் செய்ய முடியாது. லேண்ட் வேல்யூ ஏறாது. இது வெறும் வேஸ்ட்லேண்ட் ' என்ற மெத்தனம்தான் நமக்கு. இதுவரை புறம்போக்கு (Wasteland) என்பதற்கு நீங்கள் புரிந்து வைத்திருந்த அர்த்தம்தான் இது. இனியாவது தெரிந்து கொள்ளுங்கள் புறம்போக்கு இயற்கையின் ஒர் அங்கம். வெறும் புற்கள் மட்டும் வளர்ந்திருக்கும் இடத்தை அவ்வளவு மலிவாக எடை போட்டு விடவேண்டாம். புற்கள் நிறைந்த இடம், நாம் சுவாசிக்க உதவும் காற்றை தூய்மைப்படுத்தும் ஒர் இயற்கை தொழிற்சாலை.
காற்றில் இருக்கும் பனித்துளிகள், புற்களின் நுனியில் படும்போது அதை அப்படியே தண்ணீராக சேமித்து வைத்துக் கொள்ளும். நுனியில் இருந்த பனித்துளிகள் அப்படியே கீழ்நோக்கி வந்து, அதை அப்படியே தண்ணீராக நிலத்தில் கொண்டு சேர்க்கும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல, இயற்கைக்கும் புற்கள் ஆயுதம்தான்.
மழை இல்லாத சமயங்களில் கூட புற்களுக்கு, நீரை சேமித்து வைக்கும் தன்மை உண்டு என்பது புற்களின் சிறப்பம்சம். மிருகங்களும் கூட தண்ணீர் இல்லாத சமயங்களில் புற்களை சாப்பிட்டே தன் தாகத்தை தீர்த்துக் கொள்ளும். தண்ணீரை சேமிப்பதோடு, நாம் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் புற்கள் உதவுகின்றன. ஆமாம்... கார்பனை அதிகமாக உறிஞ்சும் சக்தி, தரையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் புற்களுக்கு உண்டு. இதன் வேர்ப்பகுதியில் கார்பனை சேமித்து வைத்துக் கொண்டு, நிலத்தில் அப்படியே மண்ணோடு மண்ணாக மாற்றிவிடும்.
"நிலத்தில் ஒரு அடி அளவுக்கு புற்கள் இருக்கிறது என்றால், அதனுடைய வேர்கள் மூன்று மடங்காக பூமியில் இருக்கும். மேய்ச்சல் மிருகங்கள் இந்த புற்களை சாப்பிட்டு விட்டால், மேலே எந்தளவிற்கு புற்கள் மேய்க்கப்பட்டிருக்கிறதோ அதே அளவில் பூமியில் உள்ள வேர்களும் நறுக்கப்பட்டுவிடும்.
இந்த வேலையை புற்கள் தானாக செய்து கொள்ளும். வேரில் சேகரித்த கார்பன் கறுப்பாக மண்ணில் பதிந்துவிடும். இதன்மூலம் இயற்கையான முறையிலே, கார்பனை அழிக்கும் சக்தி புற்களுக்கு உண்டு. இந்த செயலை இயற்கையின் படைப்பான புற்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன." என புற்களின் இன்னொரு முகத்தை காட்டுகிறார் சூழலியலாளர் விமல்ராஜ்.
[size]
மேய்ச்சல் நிலம் என்பது இயற்கையின் முக்கியமான ஒர் அங்கம். இது 'வேஸ்ட் லேண்ட்' என்ற தவறான கருத்து உள்ளது. இந்த 'வேஸ்ட் லேண்ட்' என்று சொல்லப்படும் புறம்போக்கு நிலம், ஒவ்வொரு நொடியிலும் நாம் வாழ்வதற்கான உன்னத வேலையை செய்து கொண்டிருக்கிறது.
வெறும் புற்கள் என்ன செய்துவிடும் என்ற நினைப்பு இருப்பதால், நம் தோட்டத்தில் வளரும் புற்களை பிடுங்கி விடுகிறோம். இதோ பாருங்கள் புற்கள் நமக்கு என்னென்ன நன்மைகளை செய்கின்றது என்று.
புற்கள், கிரீன் ஹவுஸ் கேஸை உறிந்து கொண்டு, மனிதன் சுவாசிக்க தகுந்த ஆக்சிஜனை தருகிறது.
வெறும் 2500 சதுர அடியில் இருக்கும் புற்கள், கார்பன்டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றி, ஒரு குடும்பத்தில் 4 பேர் சுவாசிக்க கூடிய ஆக்சிஜனை தருகிறது.
வீட்டை சுற்றி புற்கள் இருந்தால், கோடை காலத்தில் இருக்கக் கூடிய வெப்பத்தை ஓரளவிற்கு தணிக்கும். வீட்டினுள் உள்ள வெப்பத்தை, வீட்டை சுற்றியுள்ள புற்கள் (evapotranspiration) என்ற டெக்னிக் மூலமாக வெப்பத்தை குறைக்கலாம்.
புற்களுடைய வேர்கள் தண்ணீரை சுத்தப்படுத்த கூடியது. நிலத்தடி நீரில் உள்ள கலப்படத்தை சுத்தம் செய்யும் தன்மை புற்களுக்கு உண்டு.
[/size]
[size]
காற்றில் உள்ள மிக மோசமான சல்ஃபர் டை ஆக்சைடு, ஓசோன் போன்ற மாசுக்களை உறிஞ்சிக் கொள்ள புற்களால் முடியும்.
தெருக்களில் அல்லது வீடுகளில் ஏற்படும் சத்தத்தை, 20-30% அளவிற்கு புற்கள் உறிஞ்சிக்கொண்டுவிடும். ஒலி மாசுவை கட்டுப்படுத்த புற்கள் சிறிதளவில் உதவும்.
உயிரற்ற வேர்கள், இலைகள் கூட மண்ணில் புதைந்து உரமாக மாறிவிடும். மண் சரிவுகள் ஏற்படாமல் காக்க உதவும். காற்றில் உள்ள தூசுக்களை உறிஞ்சிக் கொண்டு, மண்ணுக்கு அனுப்பிவிடும். "12 மில்லியன் டன் தூசை, ஒரு ஆண்டில் புற்கள் உறிஞ்சிக் கொள்கிறது" என்கிறது ஒரு ஆய்வு.
[/size]
[size]
இடம் இருப்பவர்கள், தங்களது தோட்டத்தில், சிறிதளவு புற்களுக்காக இடம் கொடுங்கள். இடம் இல்லாத அபார்ட்மெண்ட் வாசிகள் புற்களை வீட்டில் எப்படி வளர்ப்பது என்று பார்க்கலாம் வாங்க...
[/size]
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
[size][/size][size]
'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி!
கூட்டணி தொடர்பாக விவகாரத்தில் கடந்த சில வாரங்களாக ஸ்டாலின் மீது வருத்தத்தில் இருந்த கருணாநிதி “ஸ்டாலின் தனக்காக அதிகம் கஷ்டப்படுகிறார் என பாராட்டுப்பத்திரம் வாசித்து அவரை குளிரவைத்ததன் பின்னணி வேன் என்கிறார்கள். Karunanidhi impressed with his special van provided by stalinKarunanidhi impressed with his special van provided by stalin | 'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி! - VIKATAN
கிராஸ் சீட் ( Grass seed) , நர்சரி கடைகளில் கிடைக்கும். தேவையில்லாத பிளாஸ்டிக் டப்பாக்கள், ட்ரேக்கள், கார் டயர், தேவைப்படாத பொருட்கள் எதுவாக இருந்தாலும், அதில் சிறிதளவு மண், மண் புழு உரம் கொட்டி, விதைகளை தூவி, சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து வளர்க்க முடியும். நாள்தோறும் தண்ணீரை தெளித்தாலே போதும், தண்ணீரை ஊற்றத் தேவையில்லை.
கோதுமையை ஒருநாள் ஊற வைத்துவிட்டு, மறுநாள் சின்ன ஸ்வீட் பாக்சில் கூட 50:50 (மண்: மண் புழு உரம்) கொட்டி மேலாக கோதுமையை தூவி நாள்தோறும் தண்ணீரை தெளித்து, சூரிய ஒளிபடும் இடங்களில் வைத்தால் பத்தே நாட்களில் கோதுமை புல் தயாராகிவிடும். பதினொராவது நாள், கோதுமை புல்லை நறுக்கி மிக்சியில் அரைத்து மார்னிங் டிரிங்காக குடித்து பாருங்கள் ரத்தசோகை நோய் குணமாகும். உடல்நலத்தை காக்கவும் புற்கள் உதவும்.
வெறும் புற்கள்தானே வேஸ்ட் என்ற நினைப்பு இனி வேண்டாம். புற்களை அழித்து மரங்களை மட்டுமே நடவேண்டும் என்ற அவசியம் இல்லை. மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், புற்களுக்கும் கொடுப்போம். புல்வெளி இடங்களை புல்வெளியாக விட்டுவிடுவோம். முடிந்தால் வீட்டுக்குள் புற்கள் வளர்த்திடலாம். தேவையில்லாத பொருட்களில் மண் கொட்டி, புற்கள் வளர்த்து வீட்டை பசுமையாக மாற்றலாம்.
இனி ஒவ்வொரு வீடும், பசுமை வீடுகளாக மாறட்டும்!
- ப்ரீத்தி[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum