ஹிந்தி மொழிக்கு தமிழர்கள் கொடுத்த அடி !
Mon Jun 23, 2014 9:00 am
"எதுக்கு ஹிந்தி எதிர்ப்புனு ஓவரா ரியாக்ட் பண்றீங்க. வேணும்னா ஹிந்தி படிங்க. முடியலையா விடுங்க.பொங்குறத நிறுத்துங்க.எதுக்கு அரசியல்வாதிகள் மாதிரி வெட்டியா கூச்சல் போடுறீங்க?" - ஒரு FaceBook விவாதத்தில் இளைஞர் (தமிழர்) ஒருவர் என்னிடம் கிண்டலாக கேட்ட கேள்வி இது .
தம்பி உங்களுக்கு விவரம் புரியவில்லை. யாரும் ஹிந்தி மொழிக்கு எதிரா பொங்கவில்லை. கட்டாய ஹிந்தி திணிப்பிற்கு எதிராகத்தான் மக்கள் போராடினார்கள். அது என்ன "கட்டாய ஹிந்தி திணிப்பு"நு கேக்குறீங்களா ? என்னோட இந்த Screen shotஐ பாருங்க.
Press Information Bureau (PIB),India எனப்படுவது மத்திய அரசின் செய்திகளை வெளியிடும் அதிகாரப்பூர்வமான ஏஜென்சி. @PIB_India என்பது அதன் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் அக்கவுண்ட். இந்திய அரசு வெளியிடும் முக்கியமான தகவல்கள், அறிவிப்புகள் அனைத்தும் இந்த ட்விட்டர் அக்கவுண்டில் உடனுக்குடன் வெளியிடப்படும். மூன்று ஆண்டுகளாக இந்த பக்கத்திற்கு நான் follower ஆக உள்ளேன். பெரும்பாலும் தகவல்கள் ஆங்கிலத்தில் தான் ட்வீட்களாக வெளிவரும்.
கடந்த சில நாட்களுக்கு முன் "வலைத்தளங்களில் அலுவலக ரீதியான கணக்கு வைத்திருக்கும் அமைச்சர்கள், துறைகள், வாரியங்கள் அனைத்தும் இந்தியைப் பயன்படுத்த வேண்டும்" என்றதொரு சுற்றிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
ஜூன் 19 அன்று மாலை திடீரென PIBயின் ட்வீட்கள் ஹிந்தியில் வெளிவரத்தொடங்கின. ஜூன் 20 (நேற்று மதியம்) பெரும்பான்மையான ட்வீட்களும் ஹிந்தியில் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி சம்பந்தமான ட்வீட்கள் அனைத்தும் ஹிந்தியிலேயே இருந்தது. படிப்பதற்கு சிரமமாக இருந்தது. என்னைப்போல பலர் சிரமப்பட்டிருப்பார்கள். ஒரு நாட்டின் பிரதமர் என்ன செய்தி வெளியிடுகிறார் என தெரியாமல் மக்கள் தவிப்பது சாதாரண விஷயமா என்ன? சில ஹிந்தி சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் விளக்கம் தேட ஆரம்பித்தேன். அதாவது என்னை கட்டாயப்படுத்தி ஹிந்தி படிக்க வைத்தார்கள். இது தான் ஹிந்தி திணிப்பு.
இந்த ஹிந்தி திணிப்பிற்கு எதிராகத்தான் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நேற்று பல அரசியல் தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஹிந்தி திணிப்பு என்ற தன் நிலையிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியது. நேற்று இரவிலிருந்து (Screen shotஐ பாருங்க) ட்வீட்கள் அனைத்தும் ஆங்கலத்தில் வெளிவரத்தொடங்கியது. பல அமைச்சகங்கள் ஹிந்தியில் வெளிட்ட தங்களது ட்வீட்களை நீக்கிவிட்டன. கொடுத்த அடி அப்படி.
தம்பி, இப்ப சொல்லுங்க.
தமிழக மக்களும் அரசியவாதிகளும் தேவையில்லாமலா பொங்குனாங்க ?
- பாலாஜி
Like
Permissions in this forum:
You cannot reply to topics in this forum