தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பதிலடி கொடுத்த தமிழன் !!! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பதிலடி கொடுத்த தமிழன் !!! Empty பதிலடி கொடுத்த தமிழன் !!!

Sat Jun 14, 2014 8:21 am
பதிலடி கொடுத்த தமிழன் !!! 10371890_776323519067539_339922498449921892_n
தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக்கூட லாயக்காக மாட்டார்கள் என்று கூறிய சோ.ராமசாமிக்கு ஐ.ஏ.எஸ் (இ.ஆ.ப) தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்று பதிலடி கொடுத்த தமிழன் !!!
தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, தேசிய அளவில் 45 வது இடம் பெற்று ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ளார் தேனி, தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், 26.
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டது. இதில், தேவதானப்பட்டி ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், தேசிய அளவில் 45 வது ரேங்க் பெற்றார்; தமிழக அளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றார். இவர் தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர். இவரது தந்தை பழனிச்சாமி, கெங்குவார்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர்; தாயார் பாண்டியம்மாள்; இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
ஜெயசீலன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு வரை, ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் பள்ளியிலும் படித்தேன். மதுரை விவசாயக் கல்லூரியில் இளங்கலை விவசாயம் படித்தேன். தமிழ் மேல் இருந்த ஆர்வத்தால், தொலைநிலைக் கல்வியில் முதுகலை தமிழ் படித்தேன். அதன்பின் தமிழில் ஆராய்ச்சி படிப்புக்கு (பிஎச்.டி.,) தயார் செய்து வருகிறேன்.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் தயார் செய்தேன். கடந்த 2012ல் தமிழ் வழியில் தேர்வு எழுதி 600 வது ரேங்க் பெற்றேன். இதில் ஐ.ஆர்.எஸ்., (இந்தியன் ரெவின்யூ சர்வீஸ்) கிடைத்து நாக்பூரில் பயிற்சியில் உள்ளேன். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி, தற்போது 45 வது ரேங்க் பெற்றது மகிழ்ச்சி. தமிழ் இலக்கியப் பாடம் எடுத்து, தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற்றது மறக்க முடியாதது.
டாக்டர் அனந்தகுமார் ஐ.ஏ.எஸ்., கால்நடைத்துறை விஞ்ஞானி சங்கர் சரவணன், டில்லியில் உள்ள பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., (1986ல் தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்) ஆகியோர் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். மக்கள் எளிதில் என்னை அணுகலாம். பள்ளிகளில் கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, நான் பாடுபடுவேன், என்றார் ஜெயசீலன் .
தாய் தமிழுக்கும் , தமிழ் வழிக்கல்விக்கும் பெருமை சேர்த்த ஜெயசீலனுக்கு தூய தமிழ்ச் சொற்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது .

நன்றி: கேள்வி கேட்போர்...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum