தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆபிரகாம் லிங்கனின்  மனசாட்சி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆபிரகாம் லிங்கனின்  மனசாட்சி Empty ஆபிரகாம் லிங்கனின் மனசாட்சி

Thu Jul 11, 2013 8:35 am
ஆபிரகாம் லிங்கனின்  மனசாட்சி 998662_489569914454990_1652682848_n
ஆபிரகாம் லிங்கன் அப்பொழுது வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தார்.

‘நியாயத்திற்கு மட்டுமே நிமிர்ந்து நின்று வழக்காடுவார். அநியாயத்தை நியாயப்படுத்த வழக்காடவே மாட்டார்’ எனபது அமெரிக்கா தேசம் முழுவதும் தெரிந்த விஷயம்.

‘தொழில் ரீதியில் எந்த வழக்கையும் எடுக்கலாம்’ என்பது வக்கீல்களின் வாதம். ஆனால் லிங்கனுக்கு அதில் உடன்பாடு கிடையாது.

ஒருமுறை ஒரு பெரும் பணக்காரர் அவரிடம் வந்தார்.
“வக்கீல் ஐயா, எனது வழக்கை நீங்கள் எடுத்து நடத்தினால் எளிதில் வென்று விடலாம். ஏராளமான பணம் தருகிறேன்” என்றார்.

அதற்கு ஆபிரகாம் லிங்கன் கேட்டார்: 
“ஆனால், அந்தப் பெரும் பாவத்தை செய்தது நீங்கள்தானே?’’

“வக்கீலிடம் பொய் சொல்லக்கூடாது. அந்தக் குற்றத்தை செய்தது நான்தான். ஆனால் சாட்சிகள் கிடையாது. 
ஈஸியா ஜெயிக்கலாம்” என்றார் அந்தக் கட்சிக்காரர்.

லிங்கன் சொன்னார்: “நண்பரே, இந்த வழக்கை எந்த வக்கீலும் ஜெயிக்கலாம். ஆனால் நான் இந்த வழக்கை எடுக்கமாட்டேன். ஏன் என்றால், நான் உங்களுக்காக வாதாடும்போது, “லிங்கன், நீ பொய்யன்” என்று என் மனசாட்சி என்னைக் குத்திக்கொண்டே இருக்கும்” என்றார்.

கட்சிக்காரர் வெட்கத்துடனே வந்த வழியே சென்றார்.
நண்பர்களே, இன்று நீங்கள் உலக தவறுகளுக்கு வாதாடி துணைபோவீர்களானால் ஒருவேளை ஜெயிக்கலாம் உலகமும் கேள்விகேட்காது. 

ஆனால், நியாயத்தீர்ப்பன்று உலகத்தை நியாயம் விசாரிக்கறவர் உன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு உனக்காய் வாதாட ஒருவரும் இருக்கமாட்டார்கள். 

உனக்கு சாட்சியாய் உன் தவறுகளே நிற்கும். அப்பொழுது உன் வாயில் பதிலும் இல்லை ஜெயமும் இல்லை. 

“விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனசாட்சியிலே காத்துக் கொள்கிறவர்களாயும் இருக்கவேண்டும்” 1தீமோ 3:9.



நன்றி: கதம்பம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆபிரகாம் லிங்கனின்  மனசாட்சி Empty Re: ஆபிரகாம் லிங்கனின் மனசாட்சி

Tue Sep 30, 2014 6:25 pm
அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் 
எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, 
.
ஆப்ரஹாம் ... ...
.
உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் 
கால்களை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ....
.
அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,
.
" நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது ......
.
இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது 
ஏற்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் 
.
எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் ....
.
நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... 
.
தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து 
பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக ...
.
வேறெதுவும் போட்டியிட முடியாது 
.
--- அமுதா அமுதா ---
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆபிரகாம் லிங்கனின்  மனசாட்சி Empty Re: ஆபிரகாம் லிங்கனின் மனசாட்சி

Fri Jan 23, 2015 8:03 am
ஆபிரஹாம் லிங்கன்

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த
நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில்
கலந்து கொண்டார் ஆபிரஹாம்
லிங்கன்.

கூட்டம் முடிந்ததும், “உங்களில்
சொர்க்கத்துக்குச் செல்ல
விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்”
என்றார் பாதிரியார்.

எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன்
மட்டும் பேசாமல் நின்றார். 


“ஆபிரஹாம்! நீ
எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார்
கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும்,
“நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்”
என்று உறுதியான குரலில் சொன்னார்
அபிரஹாம்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக
மாறுவாய்” என புன்னகையுடன்
ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின்
சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை,
“தோல்விகளின் செல்லக் குழந்தை”
என்றே சொல்லலாம். அந்த
அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத்
துரத்திக் கொண்டே இருந்தன.

பிறந்த சில
வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில்
எடுபிடி வேலை பார்த்துக்
கொண்டே இரவு நேரங்களில் மட்டும்
பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.
இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது,
அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும்
மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர்
கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல
மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம்
சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான்
இந்த அவலத்தை அகற்ற முடியும்
என்று தெரிந்தும், அவசரமாக
தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல்
வேட்பாளராக களம் இறங்கி,
படுதோல்வி அடைந்தார். 


இந்த நேரத்தில்,
சொந்தமாகத் தொழில்
தொடங்கி, அதில் பெரும்
கடனாளியாக மாறியிருந்தார்.
சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக
மாற்றியது, 


அவரது வளர்ப்புத் தாய்
சாராபுஷ். ‘ஆட்சிப்
பொறுப்புக்கு வரவேண்டும் என்றால்,
ஆசைப்படுவதைப் பெறுவதற்கான
தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. 


“நீ
எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக
மாறுவாய்!” என்றார் சாரா புஷ்.
பாதிரியார் சொன்ன
அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது.
மனதில் தெளிவு பிறந்தது.

அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க
முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத்
தொடங்கினார் லிங்கன். மக்கள்
மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக
அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன்
பேச்சுத் திறமையையும் வளர்த்துக்
கொண்டார். 


அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர்
ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார்.
ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்
கொண்டு, 1834ல் நடந்த
நகராட்சி உறுப்பினர் தேர்தலில்
போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற
உறுப்பினர், செனட் உறுப்பினர்,
உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப்
போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல
தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
நின்று வெற்றி பெற்றார். 


ஆம்,
எதுவாக மாற நினைத்தாரோ,
அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்!

1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக்
காய்ச்சலால் மரணம் அடைந்தார்.

33வது வயதில் மேரியுடன் திருமணம்
முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன.
மூன்று குழந்தைகள்
சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள்.

மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத்
தோல்விகளையும் மன
உறுதியோடு எதிர்கொண்டதால் தான்,
லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும்,
அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து,
மாகாணங்களை ஒன்று சேர்த்து,
அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன்.

அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும்
அவரே மீண்டும் ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம்
பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு
நிறவெறியனால் சுடப்பட்டு மரணம்
அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது -
மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக
இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற
வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண
வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்”
என்று குறிப்பிட்டார்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக
மாறுவாய்” என்பது ஆபிரஹாம்லிங்கனுக்கு மட்டுமல்ல  நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆபிரகாம் லிங்கனின்  மனசாட்சி Empty Re: ஆபிரகாம் லிங்கனின் மனசாட்சி

Thu Jan 14, 2016 9:21 pm
ஆபிரகாம் லிங்கனின்  மனசாட்சி 940979_944131545677959_3648385142431571480_n
Sponsored content

ஆபிரகாம் லிங்கனின்  மனசாட்சி Empty Re: ஆபிரகாம் லிங்கனின் மனசாட்சி

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum