தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதர் (1859-1919)
Mon Sep 12, 2016 9:09 pm
➡ தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதர் (1859-1919)
➡ புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர்
➡ ஆபிரகாம் பண்டிதர் ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்று பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது
➡ இளமையிலேயே பக்தி நெறியில் சிறந்து விளங்கிய ஆபிரகாம், தித்திக்கும் செந்தமிழில் இறைவனைப் போற்றிப் பாடல்கள் இயற்ற ஆரம்பித்தார். வாழ்விலும் தாழ்விலும், இறைவனோடு ஒன்றி வாழக் கற்றுக் கொண்ட அவர், வறுமையில் வாடும் போது,
➡ "ஏழை என்கிரங்க இன்னும் மனதில்லையா?"
என்று பாடுவார். வளம் பெருகியபோது,
"இல்லான் எந்தனுக்கு என்றும் நிறைவாய்
எல்லாம் தந்த உன்னை என்றும் துதிப்பேன்."
எனப் போற்றிப் பாடுவார். பாவ உணர்வால் தவிக்கும் போதோ,
"மண்ணுலக மீதில் மா. பாவி நான்
மா தயாளு நீ - மன்னித்தாளுவாய்"
எனப் பாடுவார்.
➡ வேதாகம வரலாற்றில், யோசேப்பும் அன்னை மரியாவும் இயேசு குழந்தையை எருசலேம் கோவிலில் காணிக்கை கொடுக்க வந்தபோது சிமியோன் எதிர்கொண்டு, குழந்தையைத் தம் கைகளில் ஏந்திக்கொண்டு அவரைத் துதித்தார். கண்டேன், கண்டேன், என் ஆண்டவரை இன்று கண்குளிரக் கண்டேன் என்று சிமியோன் ஆனந்தப் பரவசமடைந்தார் (லூக்கா 2:22-39). இக்காட்சியை ஆபிரகாம் பண்டிதர்,
➡ "கண்டேன் என் கண்குளிர - கர்த்தனை இன்று
➡ கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்தி
அண்டாண்ட புவனங்கள் கொண்டாட மாய
➡ சண்டாளன் சிறைமீட்கும் சத்தியனை நித்தியனை
முத்தொழில் கர்த்தாவாம் முன்னவனை
➡ இத்தரை மீட்க எனை நத்திவந்த மாமணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் - கண்மணியை"
➡ என்று தம் அகக் கண் காட்சிக்குச் சொல்வடிவம் தந்து, அதைப் பாடுவோரின் உள்ளத்தையும் பரவசப்படுத்துகின்றார்.
➡ ஆபிரகாம் பண்டிதர் தஞ்சையை மையமாகக் கொண்டு வாழ்ந்ததால், அவ்வூர் அவரது பெயருடன் இணைந்து புகழ் பெற்றது. அவர் ஏழு இசைமாநாடுகளைத் தஞ்சையில் தம் சொந்த செலவில் நடத்தினார். இசைத்தமிழை ஆராய்ந்து, தாம் கண்டுபிடித்த உண்மைகளை 1917-ம் ஆண்டு கருணாமிர்த சாகரம் - முதல் புத்தகத்தில் வெளியிட்டார். 22 அலகுகள் ஓர் இயக்கத்தில் ப10ர்த்தியடையாதென்பதும், ஓர் இயக்கில் 24 அலகுகள் உள்ளன என்பதும் அவர் கண்டறிந்த மாபெரும் உண்மையாகும். கருணாமிர்த சாகரம் - இரண்டாம் புத்தகத்தில் ராகங்களைப் பற்றிய முழு விபரங்களையும் கொடுத்துள்ளார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum