அக்னி ஜூவாலை ஆக்கும் தேவா - ஜாலி ஆபிரகாம்
Tue Aug 20, 2013 10:30 pm
அக்னி ஜூவாலை ஆக்கும் தேவா
கொழுந்து விட்டெரிய ஊற்றும் தேவா...(2)
பாவம் நெருங்கா அக்கினியாய்
சாத்தானை எதிர்க்க உதவும் தேவா...(2)
அல்லேலூயா பாடுவேன் ...(4)
-அக்னி ஜூவாலை
எலியாவின் அக்கினி இறங்கட்டுமே
வானம் திறந்து பொழியட்டுமே...(2)
கர்த்தரே தேவன் என்று அறியட்டுமே
சாத்தானின் சாதிகள் சரியட்டுமே...(2)
அல்லேலூயா பாடுவேன் ...(4)
-அக்னி ஜூவாலை
பாவத்தின் கறைகள் நீங்கட்டுமே
சாபத்தின் முகங்கள் முரியட்டுமே...(2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
வெற்றியின் கீதங்கள் பாடிடுவேன்...(2)
அல்லேலூயா பாடுவேன் ...(4)
-அக்னி ஜூவாலை
கர்த்தரின் வல்லமை இறங்கட்டுமே
கர்த்தரின் நாமம் ஓங்கட்டுமே...(2)
ஜாதி ஜனங்கள் அசையட்டுமே
சபைகள் பெருகி வளரட்டுமே ...(2)
அல்லேலூயா பாடுவேன் ...(4)
-அக்னி ஜூவாலை
Re: அக்னி ஜூவாலை ஆக்கும் தேவா - ஜாலி ஆபிரகாம்
Tue Aug 20, 2013 10:33 pm
கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்...
பிதாவே இவர்கட்கு மன்னிப்பீரே என்றார்...
தம் ரத்தம் சிந்தினோரை நல் நேசர் நிந்தியார்...
மாதேவ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார்...
"பிதாவே இவர்களை மன்னியும்,
தாங்கள் செய்வது என்னவென்று அறியாது இருக்கிறார்களே"
எனக்கே அவ் ரூபம் எனக்கே அச் ஜெபம்
அவ்விதம் மன்னிப்பை எனக்கும் அருளும்
" இன்றைக்கு நீ என்னுடன் கூட பரதேஸில் இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் ;
ஸ்திரீயே இதோ உன் மகன் , சீடனே அதோ உன் தாய்"
நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை...
கடாவினேன் ஏசுவே நான் உம் கூராணியை...
"என் தேவனே என் தேவனே
ஏன் என்னைக் கை விட்டீர்"
ஆ இன்ப நேசா ஆவி ஆ திவ்ய உருக்கம்...
சிந்தித்து அறியாமல் செய் பாவம் மன்னியும்...
"தாகமாய் இருக்கிறேன்...முடிந்தது"
கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்...
பிதாவே இவர்கட்கு மன்னிப்பீரே என்றார்...
"பிதாவே உம் கரங்களில்
என் ஆவியை ஒப்படைக்கிறேன்"
Re: அக்னி ஜூவாலை ஆக்கும் தேவா - ஜாலி ஆபிரகாம்
Tue Aug 20, 2013 10:33 pm
யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாத உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
1.உலகத்தின் செல்வன் நிலையாகுமே
பேர் புகழ் கல்வி அழியாதோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை (2)
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
2.சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ (2)
எங்கே நான் போவேன் உம்மையல்லால்
3.என்னை தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே (2)
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum