இனிப்பு சோமாஸ்
Wed Apr 17, 2013 2:11 am
தேவையான பொருட்கள்;
மைதா – ½ கிலோ
ரவை - ½ கிலோ
பொட்டுக்கடலை – 100 கிராம்
நிலக்கடலை – 100 கிராம்
எண்ணெய் - ½ லிட்டர்
வெல்லம் – ¼ கிலோ
ஏலக்காய் – 5(பொடி செய்தது)
செய்முறை
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி விட்டு ரவையையும் லேசாக வறுத்து எடுக்கவும்.பின்பு
நிலக்கடலையையும் பொட்டுக்கடலையையும், ரவையையும் தனி தனியாக பொடித்து
கொள்ளவும். ஏலக்காயை 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்சியில் பொடித்து
கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை,
ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு
பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து
பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி
அளவு பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும்.
பின்பு நெளி தேக்கரண்டியோ அல்லது சோமாஸ் செய்வதற்கான அச்சையோ பயன்படுத்தி
ஓரங்களை அழகாக வெட்டி வாணலியில் மிதமாக காய்ந்த எண்ணையில் பொன்னிறமாக வேக
விட்டு எடுத்து வடித்தட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் பரிமாறவும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum