இத்தாலி தேவாலயத்தில் காணப்படும் இயேசுவை அடக்கம் செய்த துணி
Thu Apr 04, 2013 7:12 am
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும், அவரது உடலைப்
பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர
தேவாலயத்தில் உள்ளது.
14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த
துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின்
பகுதி பதிந்துள்ளது. ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட
காயத்தின் வடுவும் இதில் காணப்படுகிறது.
1988ஆம் ஆண்டு இந்த துணியின்
சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ஆம் நூற்றாண்டளவில்
போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில்,
இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை
ஆய்வுக்கு உட்படுத்தினர். கார்பன் டேட்டிங் உட்பட பல நவீன
தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்
முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை
சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முந்திய ஆய்வில்
பயன்படுத்தப்பட்ட துணியின் பகுதி, கிழிசலை சரி செய்வதற்காக தைத்த ஒட்டுத்
துணியாக இருந்திருக்க வேண்டுமென இந்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் ஜூலியோ
கூறினார்.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி
செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த
ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ
தெரிவித்தார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க
முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுபற்றி
கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின்
உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது.
இயேசுவின் உயிர்ப்பின் போது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை
பதியச் செய்திருக்க வேண்டுமென்று கூறினர்.
நன்றி: மனிதன்

Re: இத்தாலி தேவாலயத்தில் காணப்படும் இயேசுவை அடக்கம் செய்த துணி
Sun Apr 07, 2013 10:57 pm
இயேசுவை அடக்கம் செய்தபோது அவரை இரண்டு துணிகளில் சுற்றியிருந்ததாகவும், அவர் உயிர்த்தெழுந்தபோது அவற்றை தனித்தனியாக வைத்தாதாகவும் வேதம் கூறுகிறது. அதனால் இது இயேசு கிறிஸ்துவுடையது அல்ல.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum