என்னை சுமந்த இயேசுவை நான் ஏன் சுமக்க கூடாது?
Sat Jul 02, 2016 11:28 pm
என்னை சுமந்த இயேசுவை நான் ஏன் சுமக்க கூடாது?
இஸ்லாமிய மதத்தில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்ட இரான் நாட்டை சேர்ந்த போதகர் யூசுப் அவர்கள் பல வருட கொரில்லா சிறையில் இருந்து விடுதலையானதை நீங்கள் அறிவீர்கள். இவர் ஊழியம் செய்து வந்த வீடுகளில் அதிரடியாக நுழைந்த இரான் காவல்த்துறை 10 கிறிஸ்தவர்கள் வீட்டை சோதனை என்ற பெயரில் அவர்களின் மத விவரங்களை அறிந்து கொண்டது. இதில் மூன்று கிறிஸ்தவர்களை கைது செய்தது. இவர்கள் விடுதலையாக ஜெபித்து கொள்ளுங்கள்.
போதகர் யூசுப் அவர்கள் சமீபத்தில் அவரின் சிறை சரித்திரத்தை ஓர் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். அதில் சிறையில் தம்மை இஸ்லாமிய மதத்துக்கு மாற சொல்லி கடுமையான முறையில் நடத்தப்பட்டதையும் ஆனால் இயேசுவை விட்டு கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்ததையும் பகிர்ந்து கொண்டார்.
உன்னை தூக்கில் போட்டு கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி பார்த்தனர். ஆனால் நானோ "என் தேவனை மறுதலிக்க முடியாது என்று கூறி விட்டேன்" என்று மறுத்து விட்டேன் என்று சந்தோசமாக கூருகிறார யூசுப்.
தொடர்ந்து இவருக்காகவும், இவரின் மனைவி, குழந்தைகளுக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள்.
ரோமர் 8:36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
என்ற வேத வசனத்திற்கு இவரை சாட்சியாக நிறுத்தலாம். நம்மை?
ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum