நாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம்?
Sun Nov 19, 2017 8:27 am
“தகப்பனையாவது தாயையாவது,… மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.” - மத். 10:37
“ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்வில், “தேவனுக்கு அடுத்துதான் மற்ற எல்லா உறவுகளும்” என்ற உண்மையை சார்லஸ் ஸ்பர்ஜனின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி மூலம் காண்போம்.
ஸ்பர்ஜன் இளைஞராக இருந்தபோது அவருடைய பிரசங்கத்தைக் கேட்க பெருங்கூட்ட மக்கள் செல்வார்கள். இதற்காக அவர் பெரிய பெரிய அரங்குகளைத் தேடி ஒவ்வொரு இடமாகச் செல்வார். அன்று எக்ஸ்டர் என்ற பெரிய அரங்கு பிரசங்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் சூசன் என்னும் பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டிருந்தது. எக்ஸ்டர் அரங்கில் பிரசங்கிக்கவேண்டிய அன்று, அவர் சூசனுடைய வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து இருவரும் ஒரு வாகனத்தில் சென்றனர். அரங்கிற்கு அருகில் வந்தவுடன் ஸ்பர்ஜன் மிக வேகமாக வண்டியை விட்டு இறங்கினார். அங்கு திரள் கூட்ட மக்கள் கூடியிருந்தனர். காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்தனர். ஸ்பர்ஜன் கூட்டத்தின் இடிபாடுகளுக்குள்ளே தள்ளிக்கொண்டே மேடையை அடைந்துவிட்டார். திரண்டுவரும் மக்கள் கூட்டத்திற்கு நற்செய்தி வழங்கப்போகிறேன் என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவும் அவர் உள்ளத்தில் இடம்பெறவில்லை. அந்த பொறுப்பை மனதில் கொண்ட அவருக்கு மற்றவையெல்லாம் மறந்துபோயின. மேடையை அடைந்து பிரசங்கமும் செய்து முடித்துவிட்டார்.
கூட்டம் முடிவடைந்த பின்பு, தான் யாரோ ஒருவருடன் கூட்டத்திற்கு வந்திருந்ததை நினைவுகூர்ந்தார். சூசனை கூட்டத்தில் எங்கேயாவது பார்த்தோமா என எண்ணிப்பார்த்தார். இல்லை! கட்டாயம் தான் ஒரு பிரச்சனையை சந்திக்கவேண்டும் என்று எண்ணியவாறு வாடகை கார் ஒன்றைப் பிடித்து சூசனது வீட்டிற்குச் சென்றார். தான் அவரைப் பார்க்க விரும்பவில்லை என்று சொல்லி அனுப்பினாள் சூசன். கடைசியில் மிகுந்த வற்புறுத்தலின் பேரில் கீழே இறங்கி வந்த சூசனிடம், “இந்த நிகழ்ச்சிக்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனாலும் முதலாவது நான் ஆண்டவருக்கு அடிமை. அவர் என்னில் எப்பொழுதும் முதலிடம் வகிக்க வேண்டும். நீ இரண்டாவது இடத்தை எடுத்துக்கொண்டால் நாம் எப்பொழுதும் மிகவும் சந்தோஷமாக வாழ முடியும்” என்று கூறினார்.
பிரியமானவர்களே! எப்பொழுதும் நம் வாழ்வில் முதலிடம் இயேசுகிறிஸ்துவுக்கே! அந்த இடத்தை மனைவிக்கோ, கணவனுக்கோ, பிள்ளைகளுக்கோ, பெற்றோருக்கோ கொடுப்போமென்றால் அங்கு சகல பூசல்களும் தழைத்தோங்கும். ஆனால் தேவனுடைய எதிர்பார்ப்பின்படி அவரை முதன்மையாக கொள்வோமானால் சகல உறவுகளுடனும் சுமூகமாய் இருக்கமுடியும். ஆம், கிறிஸ்துவுக்கு முதலிடம் தருகிற மனிதன், தன் பெற்றொருக்கு மிகச் சிறந்த பிள்ளையாகவும், தன் பெற்றோருக்கு மிகச் சிறந்த பிள்ளையாகவும், தன் மனைவிக்கு மிகச்சிறந்த கணவனாகவும், தன் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த தகப்பனாகவும் இருக்க முடியும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum