யாருக்கு ஓட்டு?
Wed Mar 12, 2014 4:50 pm
வரும் தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது உறுதி!. ஆனால் இதை வாசிக்கிற நீங்கள் நல்ல பொதுநல சேவகர் அல்லது நல்லவர் என்று யாரை கருதுகிறீர்களோ அவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் உங்கள் ஓட்டு அவர்களுக்கு இடுங்கள். ஒருவேளைசுயேட்சை வேட்பாளர் நல்லவராக இருப்பின் அவருக்கு உங்கள் ஓட்டு இடுங்கள். எந்த கட்சியையும் சாராத ஒரு சுயேட்சை வேட்பாளரால் உங்கள் தொகுதிக்கு, உங்கள் வார்டுக்கு ஒரு நன்மையும் செய்யமுடியாது.ஆளும்கட்சியில் உள்ளவர்கள் மூலமாக ஜெயித்துவரும் வேட்பாளர்களால்தான் ஓரளவு தொகுதிக்கு நல்லது செய்யமுடியும். ஆனால் இம்முறை அரசியல் கட்சிகள் எல்லாம் துண்டுதுண்டாக சிதறுதேங்காய்போல ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லாமல் சிதறிக்கிடக்கின்றன. அதனால் இம்முறை சுயேட்சை வேட்பாளர்கள் நிறையபேர் ஜெயித்துவருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆட்சி பீடத்தில் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பவர்கள் எந்த கட்சியினாலும் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்த சுயேட்சைகளின் ஆதரவை நாடுவார்கள். அதற்கு அவர்கள் பெரிய விலைகொடுத்துதான் சுயேட்சைகள்விலைக்கு வாங்கப்படுவார்கள். அப்படி விலைப்போனாலும் நல்ல ஆட்கள் சுயேட்சைகளாக தெரிந்தெடுக்கப்பட்டால் அவர்கள் எந்த கட்சியில் இணைந்தாலும் அந்த சுயேட்சைகள் மூலமாக நாட்டுக்கு நல்லது நடக்கலாம் அல்லது பல சுயேட்சைகள் ஒன்று சேர்ந்தாலும் அவர்கள் யாரும் ஆட்சியில் மந்திரி பதவி கேட்காமல் வெளியிலிருந்து ஆதரவு தருவதாககூறி தங்கள் தொகுதிக்கு தேவையான நன்மைகளைகேட்டு பெற்றுக்கொள்ளமுடியும். நான் கூறுவதுபோலவே நடக்கும் என்று தீர்க்கதரிசனம் கூறவில்லை. ஒருவேளை அப்படி நடந்தால் அது நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே இம்முறை எந்த கட்சிக்கும் ஓட்டுபோடாமல் நல்ல வேட்பாளர்களை அறிந்து அவர்களுக்கு ஓட்டுபோடுங்கள். ஆனால் எந்த கட்சியும் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்த புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'O' என்ற ஓட்டை மட்டும் போட்டு வீடாதீர்கள். அது தவறானவர்கள் முழு பெலத்தோடு ஆட்சிக்குவர வழிவகுத்துவிடும். 10 திருடர்களில் நல்ல திருடனாக இருந்தால் உங்கள் ஓட்டு அவருக்கே போடலாமே! வேறுவழியில்லையே!. இப்போதே நாட்டுக்காக நடைபெறயிருக்கும் தேர்தலுக்காக குழுவாக, சபையாக மட்டுமல்ல, உங்கள் ஒவ்வொருநாள் ஜெபத்திலும் ஜெபியுங்கள். தேர்தல் முடியும் வரை சளைக்காமல் ஜெபியுங்கள்.
நாம் இந்தியர்கள் நாம் பாஷையால் வேறுபட்டிருக்கலாம். ஆனாலும் நாம் இந்தியர்கள் என்பதையும், இந்தியா எம் தேசம் இந்தியமக்கள் அனைவரும் நம் சகோதர, சகோதரிகளாவர். இந்திய தேசம் முழுவதும் உள்ளவர் இயேசுவை அறியவேண்டும். இந்தியாவில் உள்ளவர் அனைவரும் இயேசுவை அறிய நேர்ந்தால் அப்போதுதான் முழு உலகத்துக்கும் முடிவு வரும்.
நன்றி: ஜாமக்காரன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum