யாருக்கு அதிகம் பயப்படறீங்க?
Tue Feb 02, 2016 2:37 pm
இன்று பலருக்கும் பயம் என்பது தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உள்ளது. மனிதருக்கு பயம், பிசாசுக்கு பயம், மேலதிகாரிக்கு பயம், பெற்றோருக்கு பயம், உறவினருக்கு பயம் என்றில்லை, இந்த உலகில் பயத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் இவை எல்லாவற்றிலும், கிறிஸ்தவர்களுக்கு இருக்க கூடாத பயம் என்று ஒன்று இருக்கிறது.
அதுதான் பிசாசிற்கு பயப்படும் பயம். இதை குறித்து கூறும் போது, என் வாழ்க்கையில் நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. உங்களை அது சிந்திக்க வைக்கும் என்று நினைக்கிறேன்.
பார்த்தது:
என் பள்ளி பருவத்தின் போது, எங்கள் சபை போதகருக்கு, வெளிநாட்டு சபைகளில் இருந்து ஊழிய அழைப்பு வந்தது. அப்போது தேவாலயம் சற்று ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் இருந்ததால், 2 குழந்தைகள் மற்றும் மனைவியை தனியே விட்டு செல்ல ஊழியர் தயங்கினார்.
இதனால் சபையை சேர்ந்த சில வாலிபர்களை சபையில் வந்து படுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் ஒரு நாள் சபை பாதுகாப்பிற்கு நான் மட்டும் தனியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
போதகரின் மனைவிக்கு துணையாக, அவரது சின்ன மாமியார் (தீர்க்கத்தரிசன வரம் கொண்டவர்) இருந்தார். நான் இரவு 9 மணி அளவில் சென்றேன். தேவாலயத்தின் வெளிப்புற கேட் மட்டும் திறந்திருந்தது. உட்புற கேட் மற்றும் மற்ற கதவுகளும் பூட்டப்பட்டிருந்தது.
வெளி கேட்டை திறந்து உள்ளே சென்ற நான், உள்புற கேட்டை திறக்குமாறு போதகரின் மனைவியை அழைத்தேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஆன்டி, அம்மா... என்று பல விதமாக கூப்பிட்டும் எந்த பதிலும் இல்லை. இதனால் உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகம் அடைந்த நான், அடைக்கப்பட்டிருந்த ஜன்னலில் கைகளை முகத்திற்கு கூப்பிவாறு, தலை வைத்து பார்த்தேன். லைட் வெளிச்சத்தில் உள்ளே ஆட்கள் இருப்பது மங்கலாக தெரிந்தது.
ஆட்கள் உள்ளே இருக்கிறார்கள், ஆனால் என் அழைப்பிற்கு எந்த பதிலும் என்று யோசித்தேன். உள்ளே ஏதாவது சத்தம் வருகிறதா என்று காதுகளை வைத்து கவனித்தேன். உள்ளே ஜெபிக்கும் சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்த போது, “பிசாசே, இயேசுவின் நாமத்தில் உன்னை கடிந்துக் கொள்கிறேன். அப்பாலே போ, சாத்தானே. உனக்கு இங்கே இடமில்லை” என்று வல்லமையாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.
இரவில் தூங்கப் போகும் நேரத்தில் எதற்கு இந்த மாதிரி வல்லமையாக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியாதவனாக, ஜன்னலை தட்டியவாறு, திரும்பவும் 2, 3 முறை கூப்பிட்டேன். அப்போது ஜெப சத்தம் நின்றது. லேசான குரலில், யார் அது? என்ற பதில் வந்தது.
நிம்மதியடைந்த நான், ஆன்டி நான் தான் என்று என் பெயரை கூறினேன். மீண்டும் ஒரு முறை கேட்டு, நான் தான் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, மெதுவாக கதவை திறந்து எட்டி பார்த்தார்கள். நான் உள் கேட்டிற்கு வெளியே நின்று, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றேன்.
அதன்பிறகு போதகரின் மனைவி கேட்டை திறந்தார். உள்ளே சென்ற பிறகு, நான் பல முறை கூப்பிட்டும் நீங்கள் ஏன் மெளனமாக இருந்தீர்கள்? என்று கேட்டேன்.
நாங்கள் வந்திருப்பது நீ என்பது தெரியாமல், பிசாசு என்று நினைத்தோம் என்றார்கள். அதற்கு அவர்கள் கூறிய விளக்கத்துடன், உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் கூறுகிறேன். நான் தேவாலயத்தின் வெளி கேட்டை திறந்து உள்ளே நுழைந்த போது, என் சைக்கிள் சத்தத்தை கேட்டு, அசுத்த ஆவி வந்திருப்பதாக நினைத்துள்ளனர்.
நான் உள்ளே நுழைந்து ஜன்னலை கடந்து உள் கேட் பக்கமாக நடந்து வந்த போது, பிசாசு நெருங்கி வருவதாக அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. நான் பல வகைகளில் அழைத்ததன் மூலம் – ஏமாற்றும் ஆவியாக தெரிந்திருக்கிறேன். நான் ஜன்னலில் முகத்தை வைத்து பார்த்த போது, என்னுடைய பிரவுன் டி-சர்ட்டை பார்த்து, பிசாசு ஜன்னல் வழியாக உருவத்தை காட்டி பயப்படுத்துவதாக நினைத்துள்ளனர்.
அதில் பயந்து போன இருவரும், பிசாசை கடிந்து ஜெபித்துள்ளார்கள். இது தான் நான் கேட்ட ஜெப சத்தம். இந்த நிலையில் நான் ஜன்னலை தட்டிய போது, எப்படியோ தைரியத்தை வரவழைத்து எனக்கு பதில் அளித்துள்ளனர்.
உள் கேட்டிற்கு வெளியே நின்ற எனது கால்களையும், முகத்தையும், கதவை திறந்து பார்த்த பிறகு உறுதி செய்து கேட் திறந்திருக்கிறார்கள். உள்ளே நடந்த காரியங்களை கேட்டு, நான் ஒருபுறம் அதிர்ச்சியும், மற்றொருபுறம் சிரிப்பு தாங்க முடியாமல் சென்று படுத்துக் கொண்டேன்.
சிந்தித்தது:
இந்த சம்பவத்தை குறித்து இப்போது நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் மேற்கூறிய போதகரின் மனைவி குடும்பத்தில் பெரும்பாலானோர் வல்லமையான ஊழியக்காரர்கள். அவரது உறவினர், சபையில் இருக்கும் எல்லாருக்கும் ஜெபித்து தீர்க்கத்தரிசனம் கூறுவார்கள்.
ஆனால் அவர்களுக்குள் தேவனுக்கு பயப்படும் பயத்தை விட, பிசாசிற்கு பயப்படும் பயம் தான் அதிகமாக இருந்துள்ளது. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும் என்று வேதம் கூறுகிறது (1 யோவான்:4.18). அப்படியென்றால், நம் வாழ்க்கையில் தேவனை தவிர, பிசாசு உட்பட வேறு யாருக்கு அதிகமாக பயப்பட்டாலும், தேவ அன்பு நம்மில் குறைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த சம்பவம் மூலம் நாங்கள் பெரிய தைரியசாலிகள் என்ற கூறவில்லை. ஆனால் நாம் எப்போதும் தேவ அன்பில் நிறைந்திருக்க வேண்டும் என்று கூற விரும்புகிறோம். பரலோக வாசிகளான நமக்கு, நரக வாசியான பிசாசை பார்த்தால் பரிதாபம் தான் வர வேண்டும். பயம் வரக் கூடாது. என்ன சரி தானே?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum