கொங்கு கிராமியத்து பூண்டு குழம்பு
Fri Oct 21, 2016 7:07 am
நான் எனது பாட்டியின் கைபக்குவத்தில் செய்யபடும் பூண்டு குழம்பை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
எனது பாட்டி கையால் செய்த பூண்டு குழம்பு தேவாமிர்தம் போல் இருக்கும். அவர்களிடம் எனக்கு வாயு தொல்லை என்று கூறினால் போதும் உடனடியாக பூண்டு துவையலையோ அல்லது பூண்டு குழம்பை வைத்து அசத்தி விடுவார்கள்.
இதில் நான் தேங்காய் துருவலை சேர்த்து கொள்ளவில்லை. நமது சமையல் முகநூலீல் உள்ள சில நண்பர்களுக்கு தேங்காய் சேர்த்த உணவுகள் பிடிக்காது. அவர்களுக்கு இந்த குழம்பு ஒரு வரப்பிரசாதம்.
தேவையான பொருட்கள்:
பூண்டு பற்கள் 20
சின்ன வெங்காயம் 8 ( பாதியாக வெட்டி வைத்து கொள்ளவும் )
தக்காளி 1/2 ( பொடியாக நறுக்கியது )
கடுகு 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் 1
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
புளி 1 எலுமிச்சை பழ அளவு
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
சாம்பார் தூள் 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
வெல்லம் துருவியது 1 1/2 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மசாலா அரைக்க
சீரகம் 1/2 தேக்கரண்டி
மிளகு 3/4 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
பூண்டு பற்கள் 7
வரமிளகாய் 3
தக்காளி 1/2
செய்முறை
1. ஒரு வடசட்டியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், மிளகு, கொத்தமல்லி விதை, சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், வரமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். அதை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
2. பிறகு புளியை சுடு தண்ணீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் புளியை கரைத்து புளி கரைசலை தயார் செய்து எடுத்து கொள்ளவும்.
3. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் , பின்பு கறிவேப்பிலை, வரமிளகாய், வெந்தயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கவும். அதில் உரித்து வைத்துள்ள பூண்டையும் மற்றும் அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும், இந்த கலவை கூழ் போல் ஆகும் வரை நன்றாக வதக்கவும்.
4. பிறகு புளி கரைசலை வடச்சட்டியில் ஊற்றவும். பின்னர் நன்கு கிளறவும். இத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும். குழம்பு கலவை கெட்டியாக ஆகும் சமயத்துல 1/2 கப் தண்ணீரை சேர்த்து கொள்ளவும். இந்த கலவை நன்கு 3 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும்.
5. இப்பொழுது குழம்பு கலவையில் பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வரமிளகாய் தூள், சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். குழம்பு கலவையை சிறு தீயில் 3 நிமிடங்கள் வரை வைக்கவும். இத்துடன் துருவி வைத்துள்ள வெல்லத்தினை போட்டு நன்றாக கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகும் வரை சிறு தீயில் ஒரு 10-15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
குறிப்பு
1. உங்களுடைய கார தன்மைக்கு ஏற்ப வெல்லத்தையும் மற்றும் மிளகாயையும் கூட்டி குறைத்து கொள்ளலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum