கொங்கு நாட்டு முறுக்கு
Fri Oct 14, 2016 8:49 am
கொங்கு நாட்டு முறுக்கு
இந்த முறுக்கை பெரும்பாலும் கோயமுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் செய்வார்கள்.
இந்த முறுக்கு சுவைக்கு எந்த முறுக்கு சுவையையும் ஈடாகாது. அது மட்டுமல்ல இந்த முறுக்கை போல் மென்மையானதாகவும் இருக்காது. பல் போன கிழவன் கூட இந்த முறுக்கை சுலபமாக சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு 1 கப்
பொட்டுகடலை மாவு 1/2 கப்
வெண்ணை 1 மேஜைக்கரண்டி
வெள்ளை எள் 1 தேக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
1. பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைக்க வேண்டும். இரண்டு மாவை ஒன்றாக கலந்து வைத்துகொள்ள வேண்டும். அதன் மாவை நன்றாக சலித்து விட்டு அதை எடுத்து கொள்ளவும்.
2. மாவு கலவையில் சீரகம், வெள்ளை எள், வெண்ணை மற்றும் உப்புத்தூள் ( தேவையான அளவு ) சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3. தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ந்ததும், அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
4. முறுக்கு குழாயை எடுத்து அதனுள் எண்ணெய்யை துடைத்து கொள்ளவும். அதனுள் முறுக்கு மாவு கலவையை போட்டு விருப்பப்பட்ட தட்டை பொருத்தி கொள்ளவும்.
முறுக்கை பாலித்தீன் கவரிலோ அல்லது வாழை இலையின் மீது முறுக்கை பிழிந்துவிடவும்.
5. இரும்பு வடச்சட்டியில் அடுப்புல வைத்து பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முறுக்கை அதில் போட்டு பொறித்து எடுக்கவும்.
குறிப்பு
1. கார முறுக்கு தயார் செய்ய இந்த மாவு கலவையில் வரமிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து பிசைந்து செய்யலாம்.
2. கார முறுக்கு தயார் செய்ய இரண்டு வரமிளகாயை தண்ணீரில் ஊறவைத்து அதை மிக்ஸியில் போட்டு அரைக்கும் சமயத்துல 5 பூண்டு பற்கள் போட்டு அரைத்து கொண்டு அதை முறுக்கு மாவில் போட்டு பிசைந்து செய்யலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum